மயூக்கா ஜானி

மயூக்கா ஜானி (Mayookha Johny, மலையாளம்: മയൂഖ ജോണി) (பிறப்பு 9 ஏப்ரல் 1988) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் மற்றும் மும்முறை தாண்டுதல் தட கள போட்டிகளில் பங்கேற்கும் ஓர் விளையாட்டு வீராங்கனையாவார். மும்முறை தாண்டலில் இந்திய தேசிய சாதனையான 14.02மீ தொலைவைத் தாண்டிய பெருமைக்குரியவர். 14 மீ தொலைவைத் தாண்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் இவருக்குண்டு.[2]

மயூக்கா ஜானி
தனித் தகவல்கள்
முழுப் பெயர்மயூக்கா ஜானி மதாலிக்குன்னல்[1]
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்ஏப்ரல் 9, 1988 (1988-04-09) (அகவை 36)
பிறந்த இடம்கோழிக்கோடு, கேரளா, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதட கள விளையாட்டுக்கள்
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்
மும்முறை தாண்டுதல்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவைமும்முறை தாண்டல்: 14.02 மீ
(2011, இந்திய தேசிய சாதனை)[2]
நீளம் தாண்டல்: 6.64 மீ
(2010)[3]
இற்றைப்படுத்தப்பட்டது ஆகத்து 9, 2010.

சூலை 8,2011 அன்று சப்பானின் கோபே நகரில் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் 6.56மீ தொலைவைத் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.[4]

வாழ்க்கை வரலாறு

தொகு

மயூக்கா இந்திய மாநிலம் கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆகத்து 9, 1988 அன்று பிறந்தவர்.[5] மயூக்காவின் தந்தை ஜானி முன்னாள் மும்பை ஆணழகன் பட்டம் பெற்ற ஓர் உடற்கட்டு பயிற்சியாளராவார்.[5] மயூக்காவின் பயிற்சியாளர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைச்சேரி மையத்தின் ஜோஸ் மாத்யூ ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Prajusha jumps to national mark, agony for Mayookha". Yahoo! News. 9 October 2010. http://in.news.yahoo.com/48/20101009/1252/tsp-prajusha-jumps-to-national-mark-agon_1.html. பார்த்த நாள்: 9 October 2010. 
  2. 2.0 2.1 "Mayookha breaches 14m barrier". தி இந்து. 30 May 2011 இம் மூலத்தில் இருந்து 31 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110531192957/http://www.hindu.com/2011/05/30/stories/2011053064042100.htm. பார்த்த நாள்: 30 May 2011. 
  3. "iaaf.org – Athletes – Johny Mayookha Biography". பார்க்கப்பட்ட நாள் 9 August 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Long jumper Mayookha wins gold in Asian Athletics C'ship TNN | Jul 8, 2011
  5. 5.0 5.1 "Mayookha, Tintu in the spotlight". Sportstar. 4 October 2008. பார்க்கப்பட்ட நாள் 9 August 2010.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயூக்கா_ஜானி&oldid=3253355" இலிருந்து மீள்விக்கப்பட்டது