மரியம் உசு-சமானியின் கல்லறை

பேரரசர் அக்பரின் மனையின் சமாதி

மரியம் உசு-சமானியின் கல்லறை (Tomb of Mariam-uz-Zamani) பொதுவாக மரியம் கல்லறை என அறியப்படும் இது முகலாயப் பேரரசர் அக்பரின் விருப்பமான மனைவி ஜோதா பாய் என்று பொதுவாக அழைக்கப்படும் மரியம் உசு-சமானியின் கல்லறை ஆகும்.[2][3][4][5][6] மரியம் பேகம் இறந்த ஒரு ஆண்டுகளுக்கிடையே இந்த கல்லறை அவரது மகன் ஜஹாங்கீரால் அவரது நினைவாக கட்டப்பட்டது. இது மதுராவின் திசையில் சிகந்திராவில் அக்பரின் கல்லறைக்கு அடுத்து அமைந்துள்ளது.[7][8][9] அக்பரின் பிரியமான மனைவியான இவர் அவருக்கு நெருக்கமாக புதைக்கப்பட்டுள்ளார்.[10]

மரியம் உசு-சமானி பேகத்தின் கல்லறை
ஆக்ராவின் சிக்கந்த்ராவில், பேரரசர் அக்பரின் விருப்பமான மற்றும் முதன்மை மனைவியான மரியம்-உசு-சமானியின் கல்லறை.[1]
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா சிக்கந்திரா, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்27°12′55″N 77°56′34″E / 27.2153°N 77.9427°E / 27.2153; 77.9427
சமயம்இசுலாம்
மாகாணம்ஆக்ரா
ஆட்சிப்பகுதிசிக்கந்திரா
மாவட்டம்சிக்கந்திரா
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1623
நிலைநல்ல நிலையில் உள்ளது
தலைமைஜஹாங்கீர்

வரலாறு

தொகு
 
அக்பரின் விளக்கத்தின்படி வரையப்பட்ட மரியம்-உசு-சமானி பேகத்துடன் ஜலாலுதீன் முகமது அக்பரின் உருவப்படம்

மரியம் உசு-சமானி, ஆம்பெரின் இராசபுத்திர அரசர் பிஹாரி மாலின் மூத்த மகளாக ஹர்கா பாய் என்ற பெயரில் பிறந்தார்.[11][12][13] இவர் 1562 இல் பேரரசர் அக்பரை மணந்தார். 1569 இல் தனது மூன்றாவது மகனான ஜஹாங்கீரைப் பெற்றெடுத்த பிறகு மரியம்-உசு-சமானி என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார்.[11][12][14] இவர் 19 மே 1623 அன்று ஆக்ராவில் இறந்தார். தனது கணவருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடும் உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. இருப்பினும் அது நோய் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவரது மகன் ஜஹாங்கீர் கி. பி. 1623 மற்றும் 1627 க்கு இடையில் இவருக்கு ஒரு கல்லறையை எழுப்பினார்.[15][16][17] அக்பரின் கல்லறைக்கு அருகில் இந்த கல்லறை உள்ளது. மேலும் அக்பரின் பிற மனைவிகளின் கல்லறைகளும் மிக அருகில் உள்ளது.[18] இவர் பேரரசர் அக்பரின் முதல் மற்றும் கடைசி காதலியாக அறியப்படுகிறார்.

பேரரசி மரியம்-உசு-சமானியுடன், அவரது பேத்தி பகார் பானு பேகமும் இதே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

கிறிஸ்துவராக தவறான அடையாளம் காணல்

தொகு

மரியம்-உசு-சமானியின் அடையாளம் பல நூற்றாண்டுகளாக முதன்மையாக அவரது 'மரியம்' என்ற பட்டத்தின் காரணமாக ஒரு கிறிஸ்துவராக ஊகிக்கப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வ முகலாய வரலாறுகளில் இவரது பின்னணி விவரங்கள் இல்லாதது இவரது இனம் மற்றும் மதம் குறித்த ஊகங்களுக்கு வழிவகுத்தது.[19] இவருக்கு மரியம் என்று பெயரிடப்பட்டதால், இவர் ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருந்திருக்க வேண்டும் என்று பல்வேறு எழுத்தாளர்களால் கருதப்பட்டது. இருப்பினும் இசுலாத்தில் மேரி அல்லது மரியம் ஆகியோரை தங்கள் சொந்தம் என்று மதிக்கிறது, திருக்குர்ஆனில் பெயரிடப்பட்ட ஒரே பெண் மரியம் மட்டுமே. முஸ்லிம்களின் கூற்றுப்படி, அவர் இதுவரை வாழ்ந்த மிகச்சிறந்த பெண் ஆவார். இது பேரரசிக்கு வழங்கப்பட்ட கௌரவத்தையும் அக்பரின் மனைவியாக அவரது புகழ்பெற்ற பதவியையும் குறிக்கிறது.

கல்லறையை சேதப்படுத்தியது

தொகு

இந்த கல்லறை ஆங்கிலேயர்களால் அனாதை இல்ல மையத்திற்கான அச்சகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் இது பிரித்தானியர் ஆட்சியின் போது பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.[20] கிளர்ச்சிக்கு முன்பு உயர் நீதிமன்றம் ஆக்ராவில் இருந்தபோது, இவரது கல்லறையில் அரசு அச்சகம் அமைந்திருந்தது. மேலும் உள்ளூர் கிறிஸ்தவ பள்ளி மற்றும் அனாதை இல்லம் தோட்டத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. அலகாபாத்திற்கு அரசு அச்சகம் மாற்றப்பட்டதிலிருந்து, முழு கல்லறையும் தோட்டமும் அரசின் கைகளில் சென்றது. அவர்கள் கல்லறைக்குள் ஏராளமான சுவர்களை அமைத்து, அங்கு தொழிற்சாலைகளை நிறுவினர். இதனால் கல்லறை கணிசமாக சேதமடைந்தது.[21] இந்தியா-பாக்கித்தான் பிரிவினைக்குப் பிறகு இந்த கல்லறை சிந்தி அகதிகளைக் கொண்டிருந்தது. இதனாலும் இது மேலும் சீரழிக்கப்பட்டது.

 
மரியம் உசு-சமானி பேகமின் கல்லறைக்கு செல்லும் படிக்கட்டுகள்

புகைப்படங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்.

தொகு
  1. Mehta, J.L. (1981). Advance Study in the history of Medieval India. Vol. III. Sterling Publisher Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120704320. பிஹாரி மால் தனது மகளுக்கு வரதட்சணை கொடுத்து இந்து முறைப்படி புதிதாக திருமணமான தனது பெண்ணை ஆக்ராவிற்கு அழைத்துச் செல்ல தனது மகன் பகவான் தாஸை ராஜபுத்திர வீரர்களின் குழுவுடன் அனுப்பினார். அக்பர் இராஜபுத்திரர்களின் உறவுகளின் மிகவும் கண்ணியமான, நேர்மையான மற்றும் சுதேச நடத்தையால் ஆழமாக ஈர்க்கப்பட்டார். பகவந்த் தாஸின் இளவயது மகன் மான் சிங்கை அரச சேவையில் சேர்த்தார். அக்பர் தனது இராஜபுத்திர மனைவியின் வசீகரம் மற்றும் சாதனைகளால் கவரப்பட்டார். அவர் அவள் மீது உண்மையான அன்பை வளர்த்து, அவளை தலைமை ராணி நிலைக்கு உயர்த்தினார். முழு அரச குடும்பத்தின் சமூக-கலாச்சார சூழலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த அவள் வந்தாள். மேலும், அக்பரின் வாழ்க்கை முறையை மாற்றினாள். அரியணையின் வாரிசான சலீம் (பின்னர் ஜஹாங்கீர்) இந்த திருமணத்தில் 1569 ஆகஸ்ட் 30 அன்று பிறந்தார்.
  2. Hindu Shah, Muhammad Qasim. Gulshan-I-Ibrahimi. p. 223.
  3. Hunter Shah, Wlliam W. (1881). Lodge, Henry Cabot (ed.). The History of Nations: India and Modern Persia. Vol. 5. P.F. Collier & son, New York. p. 115.
  4. Lal, Ruby (2005). Domesticity and power in the early Mughal world. Cambridge University Press. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521850223.
  5. Smith, Vincent Arthur (1917). Akbar the Great Mogul. Oxford, Clarendon Press. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0895634716. Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
  6. Eraly, Abraham (2000). Emperors of the Peacock Throne, The Saga of the Great Mughals. Penguin Books India. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0141001437.
  7. Smith, Vincent Arthur (1917). Akbar the Great Mogul. Oxford, Clarendon Press. p. 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0895634716. Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.
  8. Eraly, Abraham (2000). Emperors of the Peacock Throne, The Saga of the Great Mughals. Penguin Books India. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0141001437.
  9. "Mariam's Tomb, Sikandara, Agra - Ticketed Monument - Archaeological Survey of India". Asi.nic.in. Archived from the original on 16 September 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  10. Havell EB (1912). A Handbook to Agra and the Taj Sikandra, Fatehpur-Sikri and the Neighbourhood. Kerala State Library. Longmans, Green & Co, London. p. 102.
  11. 11.0 11.1 Smith, Vincent Arthur (1917). Akbar the Great Mogul. Oxford, Clarendon Press. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0895634716. Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 13 November 2019.Smith, Vincent Arthur (1917).
  12. 12.0 12.1 Eraly, Abraham (2000). Emperors of the Peacock Throne, The Saga of the Great Mughals. Penguin Books India. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0141001437.Eraly, Abraham (2000).
  13. Metcalf, Barbara, Thomas (2006). A Concise History of Modern India. Cambridge University Press. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-86362-9.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  14. Frances Pritchett. "16fatahpursikri". Columbia.edu. Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  15. "Mariam Tomb Mariam Tomb Agra Mariam Tomb Agra India Fatehpur Sikri Agra India". Egoldentriangle.com. Archived from the original on 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  16. "Mariam-Zamani Tomb - Mariam-Zamani Tomb Agra - Mariam-Zamani Tomb Agra India". Agraindia.org.uk. Archived from the original on 23 May 2008. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  17. "Tomb of Mariam Zamani". Agra Redco. Archived from the original on 17 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  18. The Fatehpur Sikri Chronicles
  19. Ashirbadi Lal, Srivastava (1964). Medieval Indian Culture. Universal Publications. p. 184.
  20. "Mariam's Tomb, Sikandara, Agra - Ticketed Monument - Archaeological Survey of India". Asi.nic.in. Archived from the original on 16 September 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013."Mariam's Tomb, Sikandara, Agra - Ticketed Monument - Archaeological Survey of India".
  21. Aziz, Al (12 August 1905). Selections from the Native Newspapers Published in the United Provinces of Agra & Oudh. p. 262. JSTOR saoa.crl.25922623.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tomb of Mariam uz-Zamani
என்பதில் ஊடகங்கள் உள்ளன.