மரியம் கனி

அமெரிக்க கலைஞர்

மரியம் கனி (Mariam Ghani) என்பவர் ஆப்கானித்தான் மற்றும் லெபனான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவில் வாழும் ஒரு காட்சி கலைஞர் ஆவார். புகைப்படக் கலைஞரான இவர் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலராகத் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

மரியம் கனி
Mariam Ghani
பிறப்பு1978 (அகவை 45–46)
நியூயார்க்கு நகரம், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
பணிபுகைப்படக் கலைஞர், காட்சிக் கலைஞர், திரைப்படத் தயாரிப்பாளர், சனமூகச் செயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–முதல்
பெற்றோர்அசரஃப் கனி அகமத்சய்
உரூலா கனி

வாழ்க்கைக் குறிப்பு தொகு

மரியம் கனி 1978 ஆம் ஆண்டு நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்தார்.[1] இவரது தந்தை முகமது அசரப் கனி ஆப்கானித்தானின் அதிபராக இருந்தார்.[2] மரியமின் தாய் ரூலா சாடே லெபனான் நாட்டுக் குடிமகள் ஆவார்.[3] மரியம் கனி நாடுகடத்தல் தண்டனைக் காலத்தில் வளர்ந்ததால் 2002 ஆம் ஆண்டு தனக்கு 24 வயது ஆகும் வரை ஆப்கானித்தானுக்கு பயணம் செய்ய முடியவில்லை.

இவரது குடும்பம் மேரிலாந்தின் புறநகர்ப்பகுதியில் வாழ்ந்து வந்தது. நியூயார்க் பல்கலைக்கழகம் மற்றும் மன்காட்டனில் உள்ள காட்சிக் கலையியல் பள்ளியில் மரியம் ஒப்பீட்டு இலக்கியம், காணொளி புகைப்படம், நிறுவல் கலை போன்ற பாடங்களைக் கற்றுத் தனது பட்டங்களைப் பெற்றார்.[4] நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்ட இலாப நோக்கமற்ற கலை மற்றும் தொழில்நுட்ப மையமான ஐபீம் நிறுவனத்தில் ஒரு குடியிருப்பாளராக மரியம் இருந்தார். பென்னிங்டன் கல்லூரியில் காட்சி கலை பீடத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

வேலை தொகு

2004 ஆம் ஆண்டு முதல் மரியம் கனி தனது நீண்டகால உடனுழைப்பாளரான சித்ரா கணேசுடன் "காணாமல் போனவர்களின் அட்டவணை" என்ற பெயரில் இயங்கும் பல்லூடகத் திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.[5] இது அமெரிக்காவின் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்களுக்குப் பிறகு குடியேறியவர்களை அமெரிக்கா தடுப்புக் காவலில் வைத்திருப்பதையும் குடியேறியவர்களுக்கு எதிராக நடத்தப்படும் பொது எதிர்வினையின் பதிவுகளை ஆவணப்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட ஒரு திட்டமாகும். பின்னர் இத்திட்டம் ஒரு குறும்படமாகவும் ஒரு வலைத்திட்டமாகவும் வளர்ந்தது. காணாமல் போனவர்களை எப்படி பார்க்கிறீர்கள்? என்பது அக்குறும்படத்தின் பெயராகும்.[6] அவருடைய பிற படைப்புகள் சில எழுதப்பட்ட நகல்களாகவும், சில காணொளிகள் அல்லது வானொலித் துணுக்குகளாகவும் இருந்தன.[1] பெர்லின் (2003), லிவர்பூல் (2004), சியோல் (2005), லண்டன் (2007), வாசிங்டன் (2008), பெய்ஜிங் (2009) மற்றும் சார்ஜா (2009, 2011) போன்ற இடங்களில் மரியம் இவற்றை காட்சிக்கு வைத்தார்..[4]

திரைப்படப் பணி தொகு

காணாமல் போனவர்களின் அட்டவணை மட்டுமல்லாது மரியம் பல திரைப்படத் திட்டங்களிலும் ஈடுபட்டார். 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கல்லிலிருந்து தண்ணீர் என்பது போன்ற திரைப்படம் எடுத்துக்காட்டாகும். நார்வேயின் சுடாவாங்கரில் எடுக்கப்பட்ட இப்படம், எண்ணெய் கண்டுபிடிப்பால் நாடு எவ்வாறு மாற்றமடைந்ததது என்பதைப் பற்றியதாகும். மேலும் 2014 ஆம் ஆண்டு மிசோரியின் பெர்குசனில் எடுக்கப்பட்ட ஒரு குறும்படம், அமெரிக்காவில் நிறுவனமயமாக்கப்பட்ட சமத்துவமின்மை உருவாக்கிய சமூக எழுச்சியைக் கருவாகக் கொண்டது. 2014 ஆம் ஆண்டு லாசு ஏஞ்சல்சு நகரில் திரையிடப்பட்ட தி டிரசுபாசர்சு போன்ற பிற படங்கள் மொழிபெயர்ப்பில் உள்ள உள்ளார்ந்த சிக்கல்களை ஆராய்கிறது.[7] மரியம் கனி எண்ணிம ஊடகத்தையும் தொழில்நுட்பத்தையும் தனது கலையை உருவாக்குவதற்கான கருவித்தொகுப்பாகக் கருதுகிறார்.[8]

இதழியல் பணி தொகு

மரியம் கனி, கலைப் படைப்புகளை உருவாக்குபவராக மட்டுமல்லாது ஒரு பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். அபுதாபி அருங்காட்சியகங்களைக் கட்டும் தொழிலாளர்களுக்கான வழக்கறிஞராகவும் வளைகுடா தொழிலாளர் பணிக்குழுவின் உறுப்பினராகவும் அவர்களைப் பாதிக்கும் அம்சங்கங்களைப் பற்றி எழுதினார், சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.

பொதுவுடமை ஆட்சிக் காலத்தில் ஆப்கானித்தான் திரைப்படத் தயாரிப்பாளர்களால் 1978 ஆம் ஆண்டு மற்றும் 1991 ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட படைப்புகளை எண்ணிம மயமாக்கி, அவற்றை மறுபடிமமாக்கும் பணியைச் செய்யும் ஒரு ஆவணக்காப்பாளராகவும் செயல்பட்டார். ஆப்கானித்தான் வானொலி தொலைக்காட்சி, பரந்த கவனத்திற்குத் தகுதியான அற்புதமான ஒலி-ஒளி சார் ஆவணங்களைக் கொண்டுள்ளது என்று இவர் கருத்து தெரிவித்துள்ளார்.[9] பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமை ஆர்வலரான மரியம் கனியின் பெரும்பாலான படைப்புகள் அரசியல் கூறுகளைக் கொண்டுள்ளன. சமூக அமைப்புகள் மற்றும் பொருளாதாரத்தில் நிலவும் முறைமைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மையைப் பற்றி பேசுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Liz, Robbins (20 February 2015). "Mariam Ghani, a Brooklyn Artist Whose Father Leads Afghanistan". The New York Times (New York, New York). https://www.nytimes.com/2015/02/22/nyregion/mariam-ghani-a-brooklyn-artist-whose-father-leads-afghanistan.html?_r=1. 
  2. Pilgrim, Sophie (15 March 2015). "What links Kabul with Alaska, Norway's oil capital and St. Louis, Missouri?". Paris, France: France 24. http://www.france24.com/en/20150312-norway-oil-kabul-ferguson-afghanistan-first-daughter-mariam-ghani-artist. 
  3. Goudsouzian, Tanya (1 October 2014). "Afghan first lady in shadow of 1920s queen?". Doha, Qatar: Al Jazeera. http://www.aljazeera.com/news/asia/2014/09/afghan-first-lady-shadow-1920s-queen-2014930142515254965.html?utm=from_old_mobile. 
  4. 4.0 4.1 "Mariam Ghani". Documenta HR Online (in ஜெர்மன்). Frankfurt, Germany: Hessian Broadcasting. 26 June 2012. Archived from the original on 9 October 2014. பார்க்கப்பட்ட நாள் 1 August 2015.
  5. Ganesh, Chitra; Ghani, Mariam (2011-09-01). "Introduction to an Index" (in en). Radical History Review 2011 (111): 110–129. doi:10.1215/01636545-1268740. பன்னாட்டுத் தர தொடர் எண்:0163-6545. http://rhr.dukejournals.org/content/2011/111/110. 
  6. Saed, Zohra, தொகுப்பாசிரியர் (2010). One Story, Thirty Stories: An Anthology of Contemporary Afghan American Literature. University of Arkansas Press. பக். 10–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781610752909. 
  7. Miranda, Carolina A. (16 August 2014). "How L.A.'s Islamic art shows might expand our 'Middle East' vision". Los Angeles Times. http://www.latimes.com/entertainment/arts/miranda/la-et-cam-islamic-arts-initiative-diversity-20140813-column.html#page=1. 
  8. Heuer, Megan (September 2013). "Digital Effects". Art in America 101 (8): 96–105. http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=a9h&AN=90252964&site=ehost-live. பார்த்த நாள்: 31 July 2015. 
  9. Mohammad, Niala (31 October 2014). "The First Daughter of Afghanistan-Mariam Ghani". Across the Durand. Voice of America. பார்க்கப்பட்ட நாள் 31 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_கனி&oldid=3857655" இலிருந்து மீள்விக்கப்பட்டது