மரியம் சாண்டி மேனச்சேரி
மிரியம் சாண்டி மேனாச்சேரி (Miriam Chandy Menacherry, பிறப்பு 9 மார்ச் 1975) என்பவர் இந்தியாவின் மும்பையில் இருந்து செயல்படும் ஒரு கேரள ஆவணப்பட உருவாக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005 இல் ஃபிலமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தை நிறுவினார், இது சமூக ஆவணப்படங்களை உருவாக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனமாகும். [1] குளோபல் மீடியா மேக்கர்ஸ் பெல்லோஷிப் 2019-20இக்காக மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 திரைப்பட படைப்பாளிகளில் இவரும் ஒருவர். [2] ஃபெலோஷிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் ஃபிலிம் இன்டிபென்டன்ட் வழங்குகிறது. [3] இவரது ஆவணப்படம், ரேட் ரேஸ் (2011) கேன்ஸில் (பிரான்ஸ்) மிப்டாக் இணை தயாரிப்பு சவாலை வென்றது. [4] மிரியம் சிறந்த சமூக ஆவணப்படத்திற்கான ஆசிய தொலைக்காட்சி விருதுகளையும் (2007) [5] மற்றும் ஐ.இ சுற்றுச்சூழல் திரைப்பட பெல்லோஷிப் (2008) ஆகியவற்றை பெற்றுள்ளார்.
துவக்க வாழ்க்கையும் கல்வியும்
தொகுசென்னையில் பிறந்தவரான மேனாச்சேரி பெங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை இசுடெல்லா மேரிக் கல்லூரியில் இளம் அறிவியல் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள ஏஜேகே மாஸ் கம்யூனிகேஷன் ரிசர்ச் சென்டரில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி குறித்து முதுகலைப் பட்டம் பெற்றார்.
படிப்பிற்குப் பிறகு, இவர் இந்தியாவுக்கான சி.என்.பி.சி.யின் நிருபராக இருந்தார், பின்னர் யு.டி.வி. இக்கு இயக்குநராக மாறினார். ஃபிலமென்ட் பிக்சர்ஸ் 2005 இல் நிறுவப்பட்டது, இது உலகளாவிய பார்வையாளர்களுக்கு பொருள்ள திரைப்படத்தை வழங்குகிறது. [6]
ஆவணப்படங்கள்
தொகுபேக் டு த ஃபிளோர் (2004) என்பது பிபிசி வேர்ல்டுக்காக மெனச்சேரி இயக்கிய தொடராகும். இது பேக் டு த பிளோர் என்ற அதே பெயரிலான பிரித்தானியத் தொடரின் இந்தியப் பதிப்பாகும். இந்தியப் பதிப்பில் இந்தியாவில் உள்ள முன்னணி வணிக நிறுவனங்களின் உயர் நிர்வாகம், தங்கள் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வேறுபட்ட கண்ணோட்டத்தைப் பெறத்தக்கதாக, கடை மட்டத்தில் பணிபுரிந்தார். இது சிறந்த வணிகத் தொடருக்கான இந்தியத் தொலைக்காட்சி விருதுகளைப் பெற்றது.
பாலிவுட்டின் ஸ்டண்ட்மேன் (2005) நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலுக்காக தயாரிக்கப்பட்டது. பாலிவுட்டில் சண்டைக் கலைஞர்களான இரட்டையர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை மற்றும் கஷ்டங்களை கருப்பொருளாக ஆவணப்படம் கொண்டது. ஆசிய தொலைக்காட்சி விருதுகளில் 'மிகப் புதுமையான' படம் என்று இது பரிந்துரைக்கப்பட்டது.
மீ கோலி (2005) என்பது மும்பையின் பூர்வீக மக்களான கோலி மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கும் கடல்வாழ் உயிரினங்களின் நுட்பமான வலையைப் பாதுகாப்பதற்கான அவர்களின் போராட்டம் பற்றிய ஆவணப்படமாகும். [7]
அறிவியல் புனைகதைகளை நெருங்கிய ஒன்றாக இருக்கும் ஒரு ஆவணப்படம், ரோபோ ஜாக்கி (2007) கத்தாரில் உள்ள பெடோயி ஒட்டகப் பந்தய வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் சவாரி இயந்திரனை ஏற்றுக்கொள்வதற்காக ஒட்டகங்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டிய தருணத்தை இது ஆராய்கிறது. ஒட்டகப் பந்தயத்தில் குழந்தை இராவுத்தர்களை (ஜாக்கி) பயன்படுத்தியதற்காக சர்வதேச அளவில் எதிர்ப்பை எதிர்கொண்ட கத்தார், சவாரி இயந்திரனுக்கு மாறுவதன் மூலம் விமர்சனத்தை அமைதிப்படுத்த முடிவு செய்தது. ரோபோ ஜாக்கி 2008 இல் சிறந்த சமூக ஆவணப்படத்திற்கான ஆசிய தொலைக்காட்சி விருதுகளைப் பெற்றது. [5]
இயற்கையை நாசப்படுத்தாமல் ஒரு சமூகத்தின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் குறித்ததாக - A Light Burns (2008) ஆவணப் படம் ஆகும். இது ஜார்க்கண்டில் தொலைதூரத்தில் வசிக்கும் சமூகம் தங்கள் கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு வருவதற்காக எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றியதாக இது உள்ளது. அது உள்ளூரில் கிடைக்கும் எண்ணெய் வித்துக்களில் இருந்து பயோடீசல் தயாரிக்கும் சமூகத்தின் பயணத்தை படமாக உள்ளது. இது ஐ.இ. சுற்றுச்சூழல் திரைப்பட பெல்லோஷிப்பை பெற்றது. [1]
தி ரேட் ரேஸ் (2011) என்பது மும்பையில் எலிகளைக் கொல்பவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது. அவர்கள் நகரம் தூங்கும்போது பணிபுரிகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக எலிகளைப் பிடிப்பதில் ஆர்வமுள்ள பாலிவுட் நடனக் கலைஞர், அடுத்த 37 ஆண்டுகளை எலிகளைக் கொல்வதிலும் மற்ற எலி பிடிப்பவர்களைக் கண்காணிப்பதிலும் நேரத்தை செலவிடுவதுதான் கதையின் மையம். இந்த ஆவணப்படம் மிப்டாக் கோ புரொடக்சன் சேலஞ்ச், கேன்ஸ் (பிரான்ஸ்), [4] பார்வையாளர்கள் விருதுகள், புளோரன்ஸ் (இத்தாலி) மற்றும் கேரளம் (இந்தியா) ஆகியவற்றைப் பெற்றது. இந்த ஆவணப்படம் ஐ.டி.எப்.ஏ, ஆம்ஸ்டர்டாமில் (நெதர்லாந்து) திரையிடப்பட்டது. [6]
லியாரி நோட்ஸ் (2015) என்பது, மஹீன் ஜியா உடன் இவர் இணைந்து இயக்கியது ஆகும். கராச்சியில் நான்கு இளம் பெண்கள் குறித்த கதை. குழுச் சண்டைக்குப் பெயர் பெற்ற லியாரியில் வசிக்கும் அவர்கள் வன்முறைக்கு பதிலாக இசையை தேர்வு செய்ய முடிவு செய்கிறார்கள். இந்த ஆவணப்படம் ஐடிபிஏ நீண்ட வடிவ ஆவணப்பட விருதை (வெள்ளி) வென்றது. இது ஐடிஎம்ஏ (நெதர்லாந்து) இல் இடிஏ விருதுக்கும், ஷெஃபீல்டில் (ஐ.இ) உள்ள இளைஞர் நடுவர் விருதுக்கும் அலையன்ஸ் ஆஃப் வுமன் ஃபிலிம் ஜர்னலிஸ்ட்ஸால் பரிந்துரைக்கப்பட்டது. [8] லியாரி நோட்ஸ் என்பது கொச்சி பைனாலே (இந்தியா) மற்றும் டெக்சாஸ் (அமெரிக்கா) ஆஸ்டினில் நடந்த இண்டி மீம் சர்வதேச விழாவில் சினிமா தொகுப்பில் துவக்கத்தில் திரையிடப்பட்ட படமாகும். [8]
பிரம் தி ஷேடோ, மெனாச்சேரியின் அடுத்து வரவிருக்கும் ஆவணப் படமாகும் [9]
மேனாச்சேரி தனது திரைப்படங்களை தயாரித்து, இயக்குகிறார். எப்போதாவது எழுத்துப் பணியிலும் விநியோகத்திலும் ஈடுபடுகிறார். [10] மலையாள வம்சாவளியைச் சேர்ந்த, மேனாச்சேரியிடம் கேரளத்தின் பண்பாடு மற்றும் சமூக நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் உள்ளது. [11]
திரைப்படவியல்
தொகு- 2004 – Back to the Floor for BBC World (Director)
- 2005 – Stuntmen of Bollywood for National Geographic Channel (Director)
- 2005 – Mee Koli (Director)
- 2007 – Robot Jockey for National Geographic Channel (Director/Producer)
- 2008 – A Light Burns for Discovery Channel and Doordarshan (Director)
- 2011 – The Rat Race (Director/Producer)
- 2015 – Lyari Notes (Director/Producer)
- 2016-2021 – From the Shadows (Director/Producer) is a work in progress.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Filament Pictures". பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
- ↑ "Meet the Fellows". பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
- ↑ "Film Independent's Global Media Makers Program Expands to Include South Asian Talent (Exclusive)". பார்க்கப்பட்ட நாள் 2021-05-29.
- ↑ 4.0 4.1 "Mumbai-based documentary wins Cannes co-production challenge". பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
- ↑ 5.0 5.1 "2008 Winners". பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
- ↑ 6.0 6.1 Vakkalanka, Harshini (2012-04-09). "Filming the rat race" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/cinema/filming-the-rat-race/article3296499.ece.Vakkalanka, Harshini (2012-04-09). "Filming the rat race". The Hindu. ISSN 0971-751X. Retrieved 2021-04-24.
- ↑ "Catalogue 2011" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
- ↑ 8.0 8.1 Kannan, Ramya (2014-12-27). "Lyari Notes, partnership across borders" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/cinema/lyari-notes-partnership-across-borders/article6731045.ece.
- ↑ Hedge, Prajwal (30 May 2021). "Story of trafficking in the shadow" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.
- ↑ "Filmmaker Miriam Chandy Menacherry: Underdogs' own storyteller" (in ஆங்கிலம்). 2020-07-24. பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
- ↑ "Miriam Chandy's new documentary follows child trafficking survivors seeking justice" (in ஆங்கிலம்). 2020-07-25. பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.