மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு
(மருதங்கேணி பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவு அல்லது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு (Vadamaradchi East Divisional Secretariat) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 18 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆழியவளை, அம்பன், செம்பியன்பற்று, சுண்டிக்குளம், குடத்தனை, மணல்காடு, மருதங்கேணி,வேம்படி முள்ளியான், நாகர்கோயில், பொக்கறுப்பு, பொற்பதி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. ஒரு சிறு பகுதி தவிர்ந்த குடாநாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள இப் பிரிவு ஒடுங்கிய நீளமான வடிவில் அமைந்துள்ளது. இக் கிழக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடல் உள்ளது. மேற்கில்

ஒடுங்கிய நீரேரி இதனைச் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவு, கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றிலிருந்து பிரிக்கிறது. இதன் நீளம் குறைந்த வடக்கு எல்லையில் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு உள்ளது.

இதன் பரப்பளவு 179 சதுர கிலோமீட்டர் ஆகும்[1].

குறிப்புகள்

தொகு
  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு