நாவிதர்

"நாவிதர்" அல்லது "அம்பட்டன்" என்ற பெயர் ஒரு தமிழ் வார்த்தையாகும், இது முதலில் சமசுகிருத வார்த்த
(மருத்துவர் (இனக்குழுமம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாவிதர் (பொதுவாக அம்பட்டன் என்று அழைக்கப்படுகின்றனர்)[1] எனப்படுபவர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். தமிழகத்தில், நாவிதர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். தெலுங்கு பேசும் நாவிதர்கள் மங்களா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர்.[2] [3] இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும்,[4] ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

நாவிதர் அல்லது அம்பட்டன்
வகைப்பாடுமிகவும் பிற்படுத்தப்பட்டோர்
மதங்கள் இந்து
மொழிகள்தமிழ், தெலுங்கு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழ்நாடு
உட்பிரிவுகள்மருத்துவர், நாவிதர், மங்களா
தொடர்புடைய குழுக்கள்தமிழர், இலங்கைத் தமிழர்

சொற்பிறப்பு

அம்பட்டன் என்ற பெயர் ஒரு தமிழ் வார்த்தையாகும், இது முதலில் சமசுகிருத வார்த்தையான அம்பாஸ்தா என்னும் வார்த்தையிலிருந்து வந்தது.[5] இந்த வார்த்தை இரண்டு சமசுகிருத வார்த்தைகளான அம்பா என்பது "அருகில்" என்றும், ஸ்தா என்பது "நிற்க" என்றும் பொருள்படும். இந்த பொருளானது "அருகில் நின்று முடிதிருத்தும் ஒருவரை" குறிக்கிறது.[6]

நாவிதர் என்ற சொல் நாவிகர் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது, இதற்கு புனித மனிதன் என்று பொருளாகும். இவர்கள் மருத்துவர், பரியாரி, வைத்தியர் என்ற பெயராலும் அறியப்படுகின்றனர். இவை அனைத்தும் மருத்துவர்களுக்கான ஒத்த சொற்கள் ஆகும்.[7][8]

மக்கள்தொகை

தமிழகத்தில் மருத்துவர், நாவிதர், மங்களா, அம்பட்டர் என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 4 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர் வசிக்கின்றனர்.[9][தொடர்பிழந்த இணைப்பு][சான்று தேவை] இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

வரலாற்றுத் தகவல்

வட இந்தியச் சரித்திரகால அரசர்களில் "நந்தர்கள்" சூத்திரராகக் கருதப்படுகின்றனர். நந்தர்களைப் "அம்பஷ்டன்" (நாவிதர்) என அழைக்கும் வழக்கமும் உள்ளது.[10]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாடு சாதிகள் பட்டியல்" (PDF). pdf
  2. ஏ.என். சட்டநாதன், தொகுப்பாசிரியர் (1970). தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலக்குழு அறிக்கை. தமிழ்நாடு அரசு வெளியீடு. பக். 49. https://books.google.co.in/books?id=rmVDAAAAYAAJ&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&focus=searchwithinvolume&q=Mangalas+++Telugu+-+speaking++++. "Mangalas are the Telugu - speaking people of this community " 
  3. தேமொழி, தொகுப்பாசிரியர் (மார்ச் 2018). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். அறிவொளி பதிப்பு. பக். 158. https://books.google.co.in/books?id=uSdNDwAAQBAJ&pg=PA146&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&hl=en&sa=X&ved=2ahUKEwiM2aPaxNPrAhXEV30KHQ_OAswQ6AEwAHoECAMQAQ#v=onepage&q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&f=false. "தெலுங்கு மொழியில் நாவிதரை மங்கல என அழைப்பார்கள்" 
  4. Dr. S.Soundarapandian, தொகுப்பாசிரியர் (1995). Descriptive Catalogue of the Telugu Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras-5: D. nos. from 2658 to 3284 and Mackenzie vols. no. 251 to 252. Government Oriental Manuscripts Library (Tamil Nadu, India). பக். 12. https://books.google.co.in/books?id=r28SVzURZ-0C&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=siddha+medical+SCience. "The main community that practising the siddha medical SCience was 'Navithar" 
  5. Menon, T. Madhava; Linguistics, International School of Dravidian (2002) (in en). A handbook of Kerala. International School of Dravidian Linguistics. பக். 764. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185692319. https://books.google.com/books?id=TjVuAAAAMAAJ. 
  6. Bhanu, B. V. (2004) (in en). Maharashtra. Anthropological Survey of India: Popular Prakashan. பக். 1169. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788179911013. https://books.google.com/books?id=BsBEgVa804IC&pg=PA1169&dq=ambattan&hl=en&sa=X&ved=0ahUKEwjRju68xt7dAhVI_SwKHZKZB2kQ6AEINzAC#v=onepage&q=ambattan&f=false. 
  7. Béteille, André; Beteille, Professor Emeritus of Socio Logy Andre (1965) (in en). Caste, Class, and Power: Changing Patterns of Stratification in a Tanjore Village. University of California Press. பக். 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520020535. https://books.google.com/books?id=lbnYaLGWnr8C&pg=PA89&dq. 
  8. General, India Office of the Registrar (1966) (in en). Census of India, 1961: Madras. Manager of Publications. பக். 7. https://books.google.com/books?id=OugcAQAAMAAJ. 
  9. "அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம்". விகடன் (சூலை 10, 2009)
  10. பிரகஸ்பதி எழுதிய நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை - பகுதி 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவிதர்&oldid=3912603" இலிருந்து மீள்விக்கப்பட்டது