மறக்களவழி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் 5 உள்ளன. [1] இது வாகைத்திணையில் வரும் துறை.

இலக்கணம்

தொகு

உழவர் களத்தில் அதரி திரித்து, மாடுகளைக் கட்டி நெல்லின் வைக்கோலைப் போர் அடிப்பது போல, அரசன் போர்களத்தில் யானை, குதிரை, காலாள் ஆகியோரை உதரிப் போரடிப்பதைக் கூறுவது மறக்களவழி என்னும் துறையாகும் என்று இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

இங்குக் காட்டப்பட்டுள்ள புறநானூறு, களவழி நாற்பது ஆகிய நூலில் வரும் பாடல்களில் இந்தக் களவழி உருவகம் செய்யப்பட்டுள்ளது.

தொல்காப்பியம்[2] புறப்பொருள் வெண்பாமாலை [3] ஆகிய இலக்கண நூல்கள் இந்தச் செய்திகளைக் குறிப்பிடுகின்றன.

இலக்கியம்

தொகு

போர்க்களத்தில் வீழ்ந்துகிடக்கும்போது அரசன் வழங்கும் பரிசிலைச் சிறப்பித்துக் கூறுவது மறக்களவழி.

கருவூர்க் கோட்டை
மணிமாலை
பட்டத்து யானை
அரசனைச் சிறை மீட்டல்

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 368, 369, 370, 371, 373
  2. ஏரோர் களவழி அன்றி களவழித்
    தேரோர் தோற்றிய வென்றி (தொல்காப்பியம், புறத்திணையியல் 17)
  3. முழவு உறழ் திணி தோளானை
    உழவனாக உரை மலிந்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை, 159, வாகைத்திணை)
  4. புறநானூறு 373
  5. புறநானூறு 368,
  6. புறநானூறு 369,
  7. புறநானூறு 370,
  8. புறநானூறு 371,
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறக்களவழி&oldid=3317146" இலிருந்து மீள்விக்கப்பட்டது