மறக்கள வேள்வி
மறக்களவேள்வி என்னும் துறைப் பாடல் புறநானூற்றுத் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. இது வாகைத்திணையில் வரும் துறை.
- மறக்களவழி என்னும் துறை அரசனின் போர்களத்தை உழவன் நெல்லைப் போரடிக்கும் களத்தோடு ஒப்பிட்டுப் பாடுவது.
- மறக்களவேள்வி என்னும் துறை அரசனின் போர்க்களத்தைப் பேய்த் தெய்வங்களுக்குப் பலிச்சோறு வழங்கும் வேள்விக் களத்தோடு ஒப்பிட்டுப் பாடுவது.
- இலக்கணம்
- தொல்காப்பியம் இதனை அவப்பலி என்று குறிப்பிடுகிறது, [1] புறப்பொருள் வெண்பாமாலை பேய்க்குச் சோறூட்டும் வேள்வி செய்வது களவேள்வி என்னும் துறை என்று குறிப்பிடுகிறது.[2]
- இலக்கியம்
புலவர் மாங்குடி கிழார் பாடல் இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கிறது.
பாசறையில் தடாரிப்பறை முழக்கிக்கொண்டு பேய்கள் கையேந்தி நிற்கின்றன. வாள் மின்னுகிறது. அம்புகள் பொழிகின்றன. பகைவர் தலைகள் அடுப்பாகின்றன. உடல்லுறுப்புகள் கூவிள விறகாக எரிகின்றன. மண்டை ஓடுகள் அகப்பைத் துடுப்புகள் ஆகின்றன. ஈனா வேண்மான்(வேள்வி செய்யும் மகன்) அடுப்பு எரிக்கிறான். வாலுவன் என்னும் சமையல்காலன்(களவேள்வி செய்யும் அரசன்) சமைத்த உணவுப் பிண்டத்தைக் கையில் ஏந்தி வந்து வழங்குகிறான். இது சோறு வழங்கும் வேள்வி. இதனைப் பதிற்றுப்பத்து சுடுநெய் ஆவுதி எனக் குறிப்பிடுகிறது. [3]