மறைசெய்தியியல்

வேறுதகவலூடாக அனுப்பும் தகவலை மறைத்து அனுப்புதல்

மறைசெய்தியியல் (ஆங்கிலம் - Steganography) (ஸ்டிகனோகிராபி), என்பது அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர வேறு ஒருவருக்கும் அங்கு ஒரு செய்தி இருக்கிறது என்கிற சந்தேகமே தோன்றாத வகையில், மறைசெய்திகளாக செய்திகளை எழுதும் கலை மற்றும் அறிவியல் ஆகும். இது புலப்பாடுக்கு தெளிவற்று இருப்பதன் மூலம் செய்தியைப் பாதுகாக்கிறது. ஸ்டிகனோகிராபி என்கிற வார்த்தை கிரேக்க மூலத்தில் இருந்து வந்ததாகும், இதன் பொருள் “மறைபொருளுடன் எழுதுவது” என்பதாகும். இந்த பதத்தின் முதல் பதிவுற்ற பயன்பாடு என்பது 1499 ஆம் ஆண்டில் ஜோஹனஸ் ட்ரைதிமியஸ் எழுதிய ஸ்டிகனோகிராபியா புத்தகத்தில் வெளிப்பட்டது. ஒரு மந்திரப் புத்தகமாக வெளிவந்த இதில் மறைகுறியீட்டியலும் (கிரிப்டோகிராபி) மறைசெய்தியியலும் மிகச் சிறந்த வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன. பொதுவாக செய்திகள் படங்கள், கட்டுரைகள், கொள்முதல் பொருட்களுக்கான பட்டியல், அல்லது வேறு ஏதேனும் இணைப்புஉரை ஆகிய வேறு ஏதோ ஒன்று போலிருக்கும். ஒரு அந்தரங்க கடிதத்தின் புலப்படும் வரிகளுக்கு இடையே மறைசெய்தி ஒரு புலப்படாத மையினால் எழுதப்பட்டிருக்கலாம் என்பது தான் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

மறைகுறியீட்டியல் (கிரிப்டோகிராபி) மட்டும் கொண்டிருப்பதைத் தாண்டி மறைசெய்தியியலின் அனுகூலம் என்னவென்றால், அந்த செய்திகள் கவனத்தைக் கவர்வதாய் இருக்காது. குறியீடாக்கப்பட்டிருப்பது பார்வைக்கு வெளிப்படையாய் புலப்படும் சமயத்தில், அது எவ்வளவு தான் உடைக்க முடியாததாய் இருந்தாலும், சந்தேகத்தை நிச்சயமாய்க் கிளப்பும் என்பதோடு குறியீடாக்கம் சட்டவிரோதமாக இருக்கும் நாடுகளில் அவை தானாகவே குற்றமிழைத்தாகி விடும்.[1] எனவே, மறைகுறியீட்டியல் (கிரிப்டோகிராபி) என்பது ஒரு செய்தியின் உள்ளடக்கத்தைப் பாதுகாக்கிற அதே சமயத்தில், மறைசெய்தியியல் செய்திகள் மற்றும் தொடர்பு கொள்ளும் நபர்கள் இரண்டையுமே பாதுகாக்கிறது என்று கூறலாம்.

கணினிக் கோப்புகளுக்குள் தகவல்களை மறைத்து வைப்பதும் மறைசெய்தியியலில் அடங்கியதாகும். எண்மருவி மறைசெய்தியியலில், மின்னணு தகவல்தொடர்பில் ஒரு ஆவணக் கோப்பு, படக் கோப்பு, நிரல் அல்லது நெறிமுறை போன்ற ஒரு போக்குவரத்து அடுக்குக்குள்ளாக ஸ்டிகனோகிராபி குறிமுறைகள் இருக்கலாம். மீடியா கோப்புகள், அவற்றின் பெரிய அளவுகளின் காரணமாக, மறைசெய்தியியல் கடத்தலுக்கு மிக உகந்தவையாக இருக்கின்றன. ஒரு எளிய உதாரணமாக, ஒரு வழக்கமான படக் கோப்பினைக் கொண்டு துவங்கும் ஒருவர், அதில் ஒவ்வொரு 100வது பிக்சலையும் ஒரு எழுத்தைக் குறிக்கும் வகையில் திருத்த முடியும். இதற்கென கவனித்துப் பார்க்காத ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு இந்த வித்தியாசம் சாதாரணமாய்க் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிக நுட்பமானதாய் இருக்கும்.

புராதன மறைசெய்தியியல்:

தொகு

மறைசெய்தியியலின் முதல் பதிவு பெற்ற பயன்பாடுகள் கிமு 440 காலத்திலேயே துவங்கி விட்டன. ஹெரோடோடஸ் தனது தி ஹிஸ்டரிஸ் ஆஃப் ஹெரோடோடஸ் படைப்பில் மறைசெய்தியியலின் இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுகிறார்.[2] கிரீஸ் தாக்குதலைச் சந்திக்க இருப்பதைக் குறித்து டெமாராடஸ் ஒரு எச்சரிக்கை அனுப்பினார். ஒரு மெழுகுப் பலகையில் அதன் பரப்பில் மெழுகு பூசப்படும் முன்னதாக அந்த பலகையில் நேரடியாய் செய்தியை எழுதியிருந்தார். மெழுகுப் பலகைகள் அக்காலத்தில் அழித்து மீண்டும் பயன்படுத்தும் எழுது பரப்புகளாக பொதுவான பயன்பாட்டில் இருந்தன; சிலசமயங்களில் சுருக்கெழுத்துக்கும் பயன்பட்டன. இன்னொரு பழங்கால உதாரணம் ஹிஸ்டியேயஸ், தனது மிகவும் நம்பகமான அடிமையின் தலையை மொட்டையடித்து அதில் செய்தியை பச்சை குத்தி விடுவார். அந்த அடிமைக்கு முடி வளர்ந்ததும், அந்த செய்தி மறைந்திருப்பதாய் ஆகி விடும். பெர்சியர்களுக்கு எதிரான ஒரு கலகத்தைத் தூண்டும் நோக்கத்தோடு அவர் இதனைச் செய்தார்.

மறைசெய்தியியல் தொழில்நுட்பங்கள்:

தொகு

உருரீதியான மறைசெய்தியியல்:

தொகு

சமீபத்திய வரலாற்று காலம் மற்றும் இன்றும் மறைசெய்தியியல் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கிறது. சாத்தியப்பாடுகள் முடிவில்லாது உள்ளன, அவற்றில் தெரிந்த உதாரணங்களில் சில:

 
மறைசெய்திக்கலை உதாரணம். இந்த படத்துக்குள், ஒரு மறைந்த செய்தியின் எழுத்துகளின் இடநிலை அதிகரிக்கும் எண்களால் (1 முதல் 20 வரை) குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு எழுத்து மதிப்பை வலையில் அதன் குறுக்குவெட்டு இடநிலையில் காணலாம். உதாரணமாக, மறை செய்தியின் முதல் எழுத்து 1 மற்றும் 4 இன் குறுக்குவெட்டில் உள்ளது. எனவே, சில முயற்சிகளின் பின்னர், செய்தியின் முதல் எழுத்து ஆங்கில எழுத்துகளில் 14வது எழுத்து என்பதைக் காணலாம்; கடைசி (எண் 20) 5வது எழுத்து.
  • மெழுகுப் பலகைகளில் மறை செய்திகள்: பழங்கால கிரீஸ் நாட்டில், மக்கள் செய்திகளை பலகைகளில் எழுதினர். பின் அதனை மெழுகால் பூசி அதற்கு மேலே ஒரு சாதாரண செய்தியை எழுதி வைப்பர்.
  • தூதுவனின் உடலில் மறை செய்திகள்: பழங்கால கிரீஸ் நாட்டில் இதுவும் பயன்படுத்தப்பட்டது. ஒரு அடிமையின் மொட்டையடித்த தலையில் செய்தி பச்சை குத்தப்பட்டு, முடி வளரும்போது அது மறைக்கப்படுவதையும், மீண்டும் மொட்டையடித்து அந்த

செய்தியைப் படிக்க முடிந்ததை குறித்து ஹெரோடோடஸ் குறிப்பிடுகிறார். இந்த செய்தி பெர்சியாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் குறித்து கிரீஸ் நாட்டுக்கான எச்சரிக்கை செய்தியை சுமந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழிமுறைக்கென குறைபாடுகள் உள்ளது வெளிப்படை. ஏனெனில் அடிமையின் முடி வளரும் வரை காத்திருப்பதால் நேரும் தாமதம், மற்றும் ஒரு தடவை பயன்படுத்தி விட்ட பின் அடுத்தடுத்த செய்திகளுக்கு கூடுதலான அடிமைகள் தேவைப்படுவது ஆகியவை குறைபாடுகளாகும். இரண்டாம் உலகப் போரில், பிரெஞ்சு எதிர்ப்புப்படையினர் தகவல் சுமப்பவர்களின் பின்னால் கண்ணுக்குத் தெரியாத மை கொண்டு சில செய்திகளை எழுதி அனுப்பினர்.

  • மற்ற செய்திகளின் கீழ் அல்லது மற்ற செய்திகளின் காலிப் பகுதிகளில், ரகசிய மை கொண்டு காகிதங்களில் எழுதப்பட்ட மறை செய்திகள்.
  • தையல் நூலில் மோர்ஸ் குறியீடு கொண்டு செய்திகளை எழுதி பின் அதனை செய்தி கொண்டு செல்பவரின் ஆடையின் ஒரு பகுதியில் தைத்து விடுவது.
  • அஞ்சல் தலைகளின் பின்னால் எழுதப்பட்ட செய்திகள்.
  • இரண்டாம் உலகப் போர் சமயத்திலும் அதற்குப் பிந்தைய சமயத்திலும், ரகசிய ஒற்று முகவர்கள் தகவலை அனுப்பவும் பெறவும் புகைப்படம் மூலம் உருவாக்கப்படும் மைக்ரோபுள்ளிகளைப் பயன்படுத்தினர். மைக்ரோபுள்ளிகள் பொதுவாக ரொம்பவும் நுண்ணியதாய் இருக்கும், ஒரு தட்டச்சு எந்திரத்தில் உருவாக்கப்படும் ஒரு புள்ளியின் அளவுக்கு அல்லது அதனையும் விடச் சிறிதாய் இருக்கும். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் மைக்ரோபுள்ளிகள் ஒரு காகிதத்தில் பொதிக்கப்பட்டு ஒரு பசையால் ஒட்டப்பட்டிருந்தது. இது பிரதிபலிக்கத்தக்கதாய் இருக்கும், எனவே ஒளிரும் வெளிச்சத்திற்கு எதிராய் இதனைக் கண்டறிய முடியும். அஞ்சல் அட்டைகளின் விளிம்பில் வெட்டப்பட்ட பிளவுகளுக்குள் இந்த மைக்ரோபுள்ளிகளைச் செருகுவது உள்ளிட்ட மற்ற மாற்று உத்திகளும் இருந்தன.
  • இரண்டாம் உலகப் போர் சமயத்தில், நியூயார்க் நகரத்தில் இருந்த ஒரு ஜப்பான் உளவாளியான வெல்வாலீ டிக்கின்சன், நடுநிலை தென் அமெரிக்காவில் இடவசதி முகவரிகளுக்கு தகவல் அனுப்பினார். பொம்மை விற்பனை விநியோகஸ்தராக இருந்தார் அப்பெண்மணி. அவரது கடிதங்கள் எல்லாம் எந்த பொம்மைகளை எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பது குறித்து விவாதிக்கும். மறைசெய்திகொண்ட உரை பொம்மைக்கான ஆர்டர்களாய்த் தான் தோற்றமளிக்கும். ஆனால் மறைந்திருக்கும் ‘சாதாரண உரை’யோ கப்பல் நடமாட்டம் குறித்து தகவல் அளித்தது. இந்த பெண்மணியின் வழக்கு மிகவும் பிரபலமுற்று அப்பெண்மணி பொம்மை பெண் என்று அழைக்கப்பட்டார்.
  • பனிப் போர் எதிர்-பரப்புரை. 1968 ஆம் ஆண்டில், USS ப்யூப்ளோ (AGER-2) உளவுக் கப்பலில் சென்றவர்கள் வடகொரியாவினால் சிறைப் பிடிக்கப்பட்ட போது, தாங்கள் தேசதுரோகம் செய்யவில்லை மாறாக வடகொரியாவால் பிணைக் கைதிகளாய் இருக்கிறோம் என்பதை அமெரிக்காவிற்கு உணர்த்துவதற்கு, அந்த கப்பல் பணியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த புகைப்பட வாய்ப்புகளின் சமயத்தில் ஜாடை மொழியில் தகவல் தெரிவித்தனர். அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட பிற புகைப்படங்களில், யாரும் காணாத வண்ணம் அந்த பணியாளர்கள் வடகொரியர்களை நோக்கி ‘விரல்’ நீட்டிக் கொண்டிருந்தனர், இதன்மூலம் அவர்கள் சிரித்துக் கொண்டிருப்பது போலவும் வசதியாக இருப்பது போலவும் காட்டப்பட்ட புகைப்படங்கள் தவறான தகவலை அளிப்பதை உணர்த்தினர்.[3]

எண்மருவி மறைசெய்தியியல்:

தொகு

தனிநபர் கணினியின் நுழைவை அடுத்து 1985 ஆம் ஆண்டில் நவீன மறைசெய்தியியல் காலடி எடுத்து வைத்தது. செவ்வியல் மறைசெய்தியியல் பிரச்சினைகளுக்கு இது புதுவடிவம் கொடுத்தது.[4] அதனையடுத்த வளர்ச்சி மந்தமாகத் துவங்கினாலும், அதன்பின் வேகமெடுத்திருக்கிறது என்பதை இப்போது இருக்கும் ‘மறைசெய்தியியல்’ நிரல்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூறலாம். சுமார் 725க்கும் அதிகமான மறைசெய்தியியல் பயன்பாடுகள் மறைசெய்தியியல் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.[5] எண்மருவி மறைசெய்தியியலில் பினவருவன அடங்கும்:

 
ஒரு மரத்தின் படம். ஒவ்வொரு நிறக் கூறிலும் கடைசி இரண்டு பிட்டுகளைத் தவிர்த்து அனைத்தையும் நீக்கினால் ஏறக்குறைய முற்றுமுதலாய் கறுப்பான ஒரு படத்தை காணலாம். அந்த படத்திற்கு 85 மடங்கு ஒளிர்ப்பூட்டினால் கீழ்க்காணும் படத்தை உண்டாக்கும்.
 
மேற்கண்ட படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சித்திரம்.
  • ஒலிமிகுந்த படங்கள் அல்லது ஒலிக் கோப்புகளின் மிகக் கீழ்வரும் பிட்டுகளுக்குள்ளாக செய்திகளை மறைப்பது.
  • மறைகுறியீடாக்கப்பட்ட தரவுக்குள் அல்லது எதேச்சை தரவுக்குள் தகவல்களை மறைத்தல். மறைசெய்தியானது முதலில் குறியீடாக்கம் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பெரிய குறியீடாக்க தரவு அல்லது எதேச்சை தரவுத் தொகுப்பின் (ஒன்-டைம் பேட் போன்ற உடைக்கமுடியாத இணையகருவிகள் சரியான திறவுகோல் இல்லாதவர்களுக்கு எதேச்சை உரை போல் தோன்றக்கூடிய உரைகளை துல்லியமாய் உருவாக்குகின்றன) ஒரு பகுதியில் மேலெழுதப்படுகின்றன.
  • சாஃபிங் மற்றும் வினோயிங்
  • மிமிக் செயல்பாடுகள் ஒரு கோப்பு இன்னொன்றின் புள்ளிவிவரரீதியான சுயவிவரத்தைக் கொண்டிருக்கும்படி மாற்றுகின்றன. சைபர்டெக்ஸ்ட் உரையில் மட்டுமான தாக்குதலுக்கு சரியான தீர்வினை அடையாளம் காண்பதில் புள்ளிவிவர வழிமுறைகளை இது முறியடிக்கிறது.
  • திருத்தியமைக்கப்பட்ட நிறைவேற்றத்தகு கோப்புகளில் இருக்கும் மறைவான செய்திகள், i386 கட்டளை தொகுப்பிலுள்ள மிகுதிஉபரியைச் சுரண்டுகின்றன.
  • ஒளித உள்ளடக்கத்தில் பொதிக்கப்படும் படங்கள் (தெரிவுரீதியாய் மெதுவான அல்லது துரிதமான வேகத்தில் இயக்கப்படுகிறது).
  • பிணையத்தில் பொட்டலங்களுக்கு உணரமுடியாத தாமதங்களை விசைப்பலகையில் இருந்து செலுத்துதல். சில பயன்பாடுகளில் (டெல்நெட் அல்லது ரிமோட் டெஸ்க்டாப் மென்பொருள்) விசைப்பலகை அழுத்தங்களில் அளிக்கப்படும் தாமதங்கள் பொட்டலங்களில் ஒரு தாமதத்திற்கு காரணமாகலாம். பொட்டலங்களுக்கு இடையிலான தாமதங்கள் தரவினை குறியீடாக்கம் செய்ய பயன்படுத்தப்படலாம்.
  • உள்ளடக்கம் உணரும் மறைசெய்தியியல் மனிதன் ஒரு படத்திற்கு அளிக்கும் அர்த்தத்திற்குள் தகவல்களை ஒளிக்கின்றது. இந்த அமைப்புகள் மனிதரல்லாத விரோதி/காப்பாளருக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கின்றன.
  • வலைப்பதிவு -மறைசெய்தியியல். செய்திகள் துண்டுகளாக்கப்பட்டு அந்த (குறியீடாக்கப்பட்ட) துண்டுகள் அனாதையான வலைப் பதிவு பக்கங்களில் பின்னூட்டங்களாக (அல்லது சமூக வலைப்பின்னல் தளங்களின் பலகைகளில்) சேர்க்கப்படுகின்றன. இந்த சந்தர்ப்பங்களில் வலைப்பதிவுகளின் தேர்வு தான் அனுப்புநரும் பெறுநரும் பயன்படுத்தும் ஒத்திசைந்த திறவுகோலாய் இருக்கிறது; மொத்த வலைப்பதிவுலகும் ரகசிய செய்தியின் தூதுவனாகப் பயன்படுத்தப்பட முடியும்.

அச்சிட்ட மறைசெய்தியியல்:

தொகு

எண்மருவி மறைசெய்தியியலில் இருந்து வரும் இறுதிவடிவம் அச்சிட்ட ஆவணங்களின் வடிவில் இருக்கலாம். வெளிப்பட்ட உரை யாக இருக்கும் ஒரு செய்தி முதலில் மரபு வழியான முறைகளைக் கொண்டு மறைகுறியீடுகளாய் மாற்றப்பட்டு ஒரு சைபர்டெக்ஸ்ட் உருவாக்கப்படலாம். பின், கபடமற்ற வெளி உரை ஒன்றுக்குள் இந்த சைபர்டெக்ஸ்ட் வைக்கப்பட்டு, ஸ்டிகோடெக்ஸ்ட் உருவாகிறது. உதாரணமாக வெளி உரையின் எழுத்துக்கள் அளவு, இடைவெளி, அச்சுமுகம், அல்லது மற்ற பண்புகள் இந்த ரகசிய செய்தியைக் கொண்டிருக்கும் வகையில் மாற்றிக் கொள்ளப்படலாம். இந்த நுட்பத்தை அறிந்த ஒருவர் மட்டுமே அந்த செய்தியைப் பெற்று அதன் மறைகுறியீடுகளை விலக்கி செய்தியை மீட்க முடியும். இத்தகையதொரு நுட்பமாக பேகான்’ஸ் சைபரை ஃபிரான்சிஸ் பேகான் உருவாக்கினார்.

கூடுதலான உபயோக வார்த்தைகள்:

தொகு

பொதுவாக, சற்று மரபார்ந்த வானொலி மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுவதை ஒத்த (அல்லது அதற்கு சீரான) வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும், மென்பொருளில் குறிப்பாகத் தோன்றக் கூடிய, எளிதில் குழப்பிக் கொள்ளக்கூடியதாக இருக்கும் சில பதங்களை சுருக்கமாக விவரிப்பது பொருத்தமாக இருக்கும். இவை எண்மருவி மறைசெய்தியியல் அமைப்புகளுக்கு மிகவும் பொருத்தமுற்றவையாக இருக்கும்.

பேலோடு (payload) என்பது ரகசியமாய் தகவல்தொடர்பு செய்ய வேண்டிய தரவின் அளவு. கேரியர் (carrier) என்பது இந்த பேலோட் மறைக்கப்படும் சிக்னல், கற்றை, அல்லது தரவுக் கோப்பு; இது “சானல் ” (இது ”JPEG image" போன்று உள்ளீட்டு வகையைக் குறிக்கவே பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.) என்பதில் இருந்து மாறுபட்டதாகும். பேலோடு மறைக்கப்பட்ட பின் கிடைக்கும் சமிக்ஞை, கற்றை அல்லது தரவுக் கோப்பு சில சமயங்களில் தொகுப்பு (பேக்கேஜ்) என்று, மறைசெய்திக் கோப்பு , அல்லது ரகசியச் செய்தி என்று குறிப்பிடப்படுகின்றது. பேலோடு குறியீடாக்கம் செய்வதற்கு எத்தனை சதவீதம் பைட்டுகள், மாதிரிகள், அல்லது பிற சமிக்ஞை கூறுகள் திருத்தப்படுகின்றன என்பது என்கோடிங் டென்சிட்டி என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக 0 மற்றும் 1 இந்த இரண்டு எண்களுக்கு இடையில் ஒன்றாக வெளிப்படுத்தப்படும்.

நிறைய கோப்புகள் கொண்டதொரு தொகுப்பில், பேலோடு கொண்டிருக்கலாம் எனக் கருதப்படும் கோப்புகள் சந்தேகத்திற்குரிய கோப்புகளாக க் கருதப்படுகின்றன. இந்த சந்தேகம் சில வகை புள்ளிவிவர பகுப்பாய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டிருந்தால், அது ஒரு கேன்டிடேட் (candidate) என்று குறிப்பிடப்படலாம்.

எதிர் நடவடிக்கைகள்:

தொகு

உருரீதியாக எழுதப்பட்டிருக்கும் மறைசெய்தியைக் கண்டுபிடிக்க கவனமான உரு ஆய்வு செய்யப்பட வேண்டும். உருப்பெருக்கல், ரசாயனங்கள் மற்றும் புறஊதாக் கதிர்கள் ஆகியவை உள்ளிட்டவற்றை இதற்குப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். ஏராளமான பேர்களை சக நாடுகளைக் கண்காணிக்கும் பொருட்டு நியமித்திருக்கும் நாடுகளில் கூட, இது ஆதாரவள பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் நேரத்தை சாப்பிடும் ஒரு நிகழ்முறையாக இருக்கிறது. ஆயினும், சில சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது சிறைகள் அல்லது போர்க் கைதிகளுக்கான முகாம்கள் போன்ற சில இடங்களில் இருந்து பரிவர்த்தனை செய்யப்படும் அஞ்சல்களை மட்டும் சோதனை செய்வது சாத்தியமானதே. இரண்டாம் உலகப் போர் சமயத்தில், போர்க் கைதி முகாம் அஞ்சல்கள் மீதான கண்காணிப்பை எளிதாக்க சிறப்பு ரசாயன காகிதம் தொழில்நுட்பமாகப் பயன்படுத்தப்பட்டது. இது புலப்படாத மையையும் காட்டிக் கொடுத்து விடும். பேப்பர் டிரேட் ஜர்னலின் ஜூன் 24, 1948 பதிப்பில் அமெரிக்க அரசாங்க அச்சு அலுவலகத்தின் தொழில்நுட்ப இயக்குநரான மோரிஸ் எஸ்.கான்ட்ரோவிட்ஸ் எழுதிய ஒரு கட்டுரையில், இந்த காகிதத்தின் உருவாக்கம் சம்பந்தப்பட்ட பொதுவான வார்த்தைகள் விவரிக்கப்படுகின்றன. இதன் மூன்று மாதிரிவடிவங்கள் சென்ஸிகோட் , அனிலித் , மற்றும் கோயடலித் காகிதம் என பெயரிடப்பட்டிருந்தது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த ஜெர்மானிய போர்க்கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட அஞ்சலட்டைகள் மற்றும் எழுதுபொருட்கள் தயாரிப்பில் இவை பயன்பட்டிருந்தன. முகாம் கைதி ஏதேனும் ஒரு ரகசிய செய்தியை எழுத முயற்சித்திருந்தால், சிறப்பு காகிதம் அதனைப் புலப்படுத்தி விடும். குறைந்தது இரண்டு அமெரிக்க காப்புரிமைகளேனும் இந்த தொழில்நுட்பத்திற்காக வழங்கப்பட்டன. ஒன்று திரு.கான்ட்ரோவிட்ஸ்க்கு எண். 2,515,232, “நீர்-கண்டறியும் காகிதம் மற்றும் நீர்-கண்டறியும் பூச்சு சேர்க்கை”க்காக ஜூலை 18, 1950 அன்று வழங்கப்பட்டது; இன்னொன்று எண். 2,445,586, ”ஈரப்பதம்-உணரும் காகிதம் மற்றும் அதன் தயாரிப்பு”க்கு ஜூலை 20, 1948 அன்று வழங்கப்பட்டது. இதேபோல் இன்னொரு உத்தியாக, நீரில் கரையும் மை கொண்டு கோடு போட்ட காகிதம் வழங்கப்படுவதும் இருந்தது. நீர் அடிப்படையிலான கண்ணுக்குத் தெரியாத மை படும்போது இந்த கோட்டு மை “ஒழுகி” விடும்.

கணினி அறிவியலில், மறைசெய்தியியல்ரீதியாக குறியீடாக்கம் செய்யப்பட்ட தொகுப்புகளைக் கண்டறிவது ஸ்டிகனாலிஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. எப்படி இருப்பினும், திருத்தப்பட்ட கோப்புகளைக் கண்டறிவதற்கான எளிய வழியாய் இருப்பது அவற்றை நன்கறிந்த மூலக் கோப்புகளுடன் ஒப்பிடுவதே ஆகும். உதாரணமாக, ஒரு இணையதளத்தில் வரைகலைப் படங்கள் வழியே நகரும் தகவல்களைக் கண்டறிய, இந்த ஆதாரங்களின் சரியான நகல்களை ஒரு பகுப்பாய்வாளர் வைத்திருப்பார். அவர் தளத்தின் தற்போதைய உள்ளடக்கத்துடன் அதனை ஒப்பிட்டு ஆராய்வார். கேரியர் ஒன்றே என அனுமானித்துக் கொண்டால், இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் தான் பேலோடைக் காட்டுவதாய் அமையும். பொதுவாக, மிக உயர்ந்த அழுத்த விகிதம் பயன்படுத்தி எழுதுவது மறைசெய்தியியலை சிக்கலாக்கும், ஆனாலும் சாத்தியமற்றதாக்குவதில்லை. அழுத்துவதால் தோன்றும் பிழைகள் தரவு ஒளிந்து கொள்வதற்கு இடமளிக்கிறது என்றாலும், உயர்ந்த அழுத்த விகிதங்கள் பேலோடு மறைத்து வைப்பதற்கு இருக்கும் இடத்தையும் குறைத்து விடுகிறது. இதனால் குறியீடாக்க அடர்த்தி அதிகரித்து எளிதாகக் கண்டறிய வழிவகுத்து விடுகிறது (மிதமிகுதியான சந்தர்ப்பங்களில், சாதாரணமாய் பார்த்தாலே கூட கண்டுபிடிக்கக் கூடியதாய் ஆகி விடும்).

பயன்பாடுகள்

தொகு

நவீன அச்சு எந்திரங்களின் பயன்பாடு

தொகு

மறைசெய்தியியல் சில நவீன அச்சு எந்திரங்களிலும் பயன்படுகிறது. எச்பி மற்றும் ஜெராக்ஸ் நிறுவன வண்ண லேசர் பிரிண்டர்கள் இதில் அடக்கம். ஒவ்வொரு பக்கத்திலும் மிகச் சிறிய மஞ்சள் புள்ளிகள் சேர்க்கப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படாத அளவிலான இந்த புள்ளிகள் அச்சு எந்திரத்தின் வரிசை எண்களின் குறியீட்டையும், அத்துடன் தேதி மற்றும் நேர முத்திரைகளையும் கொண்டிருக்கும்.[6]

நவீன நடைமுறையில் இருந்தான உதாரணம்

தொகு

ரகசிய செய்தியுடன் ஒப்பிடுகையில் உறையிடும் செய்தி (தரவு உள்ளடக்க பதத்தில் - பிட்டுகளின் எண்ணிக்கை) எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ ரகசிய செய்தியை மறைப்பது அவ்வளவு எளிதாக இருக்கும். இந்த காரணத்தால், இணையத்தில் மற்றும் பிற தகவல் தொடர்பு ஊடகங்களில் எண்மருவிப் படங்கள் (இவை தரவின் பெரிய அளவுகளைக் கொண்டிருக்கும்) செய்திகளை மறைக்கப் பயன்படுகின்றன. எவ்வளவு பொதுவாய் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவாய் தெரியவில்லை. உதாரணமாக, ஒரு 24-பிட் பிட்மேப்பில் ஒவ்வொரு பிக்சலிலும் ஒவ்வொரு 8 பிட்டும் மூன்று வண்ண மதிப்புகளை (சிவப்பு, பச்சை, மற்றும் நீலம்) குறிப்பிடும். நீல மதிப்பை மட்டும் எடுத்துக் கொண்டால் 28 வித்தியாசமான நீல மதிப்புகள் இருக்கலாம். நீலத்திற்கான மதிப்பில் 11111111 மற்றும் 11111110 க்கு இடையிலான வித்தியாசம் மனித விழிகளால் கண்டுபிடிக்க முடியாத அளவுடையதாய் இருக்கலாம். எனவே, மிக முக்கியத்துவம் குறைந்த பிட் (ஏறக்குறைய கண்டறியமுடியாத வகையில்) வண்ணம் குறித்ததல்லாத பிற தகவல்களுக்காகப் பயன்படுத்தப்படலாம். பச்சை மற்றும் சிவப்புக்கும் நாம் இதனைச் செய்தால் ஒவ்வொரு மூன்று பிக்சல்களுக்கும் ஆஸ்கி உரையின் ஒரு எழுத்தை நாம் பெற முடியும்.

கொஞ்சம் வடிவான வகையில் கூறுவதென்றால், மறைசெய்தியியல் குறியீடாக்கத்தை கண்டறிவதை கடினமாக்க செய்ய வேண்டியது என்னவென்றால், பேலோடு (ரகசியமாய் பொதிக்கப்படும் சிக்னல்கள்) கேரியருக்கு (மூல சிக்னல்) ஏற்படுத்தும் மாற்றங்கள் கண்களுக்குப் புலப்படுவது (அத்துடன் புள்ளிவிவரரீதியாகவும்) மிகக் குறைவான அளவில் இருக்கும் வகை செய்வதாகும்; அதாவது, மாற்றங்கள் கேரியரின் சத்த தளத்தில் இருந்து பிரித்தறியமுடியாததாய் இருக்கும். எந்த ஒரு ஊடகமும் கேரியராக செயலாற்ற முடியும் என்றாலும், பெரும் அளவிலான உபரி அல்லது அழுத்தத்தக்க தகவல்களுடனான ஊடகம் தான் மிகவும் பொருத்தமானது.

தகவல் சித்தாந்த பார்வையில் இருந்து பார்த்தால் இதன் அர்த்தமானது, ‘மேற்பரப்பு’ சமிக்ஞைக்கு அவசியப்படுவதை விட அதிகமான கொள்திறனை அலைவரிசை கொண்டிருக்க வேண்டும். அதாவது, அங்கே உபரிநிலை இருக்க வேண்டும் என்பதாகும். ஒரு எண்மருவி படிமத்தில், இது படக் கூறில் இருந்தான சத்தமாக (noise) இருக்கலாம், ஆனால் எண்மருவி ஒலியைப் பொறுத்தவரை, இது பதிவு செய்யும் தொழில்நுட்பங்கள் அல்லது பெருக்க சாதனத்தில் இருந்தான சத்தமாகவும் இருக்கலாம். பொதுவாக, ஒரு அலைமருவி சமிக்ஞையை எண்மருவியாக்கும் மின்னணுவியலானது தெர்மல் சத்தம், ஃப்ளிக்கர் சத்தம், மற்றும் ஷாட் சத்தம் போன்ற பல்வேறு சத்தங்களால் பாதிப்புறுகின்றன. மறைந்திருக்கும் தரவுக்கு ஒரு சத்த உறையாக பயன்படுத்திக் கொள்ளத்தக்க அளவுக்கு இந்த சத்தமானது கைப்பற்றிய எண்மருவி தகவலுக்கு போதுமான வித்தியாசங்களை வழங்குகிறது. இதனுடன் சேர்த்து, இழப்புடனான அழுத்த செயல்முறைகள் (JPEG போன்றவை) எப்போதும் அழுத்தம்நீக்கப்பட்ட தரவில் சற்று பிழையை அறிமுகப்படுத்துகின்றன; இதனையும் மறைசெய்தியியலுக்கு பயன்படுத்திக் கொள்வது சாத்தியமே.

எண்மருவி நீர்க்குறியீடுக்கு மறைசெய்தியியல் பயன்படுத்தப்படலாம். இதில் ஒரு செய்தி (இது வெறும் ஒரு அடையாளம்காட்டியாக மட்டும் இருக்கிறது) ஒரு படத்தில் ஒளிந்திருக்கும். அதன் ஆதாரம் பின்தொடரப்பட்டு சரிபார்க்கப்பட முடியும்.

பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் சர்ச்சை

தொகு

மறைசெய்தியியல் செய்திகள் மின்னஞ்சல் செய்திகளில், அதிலும் குறிப்பாக கூள மின்னஞ்சல்களில் மறைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதும் போது, கூள அஞ்சல் என்னும் கருத்தே ஒரு புதிய வெளிச்சத்தைப் பெறுகிறது. ”சாஃபிங் மற்றும் வினோயிங்” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அனுப்புநர் அஞ்சல் செய்திகளை அகற்றி விட்டு தங்களது தடங்களை உடனடியாக நிரப்பி வைக்க முடியும்.

 
மன்ற சித்திரங்களை மறைசெய்திகள் அனுப்ப பயங்கரவாதிகள் எவ்வாறு பயன்படுத்தக் கூடும் என்பதற்கான ஒரு உதாரணம். ”நள்ளிரவில் நாம் பாலத்தைத் தகர்க்க வேண்டும் என்று தலைவர் கூறியுள்ளார்” என்கிற செய்தி http://mozaiq.org/encrypt பரணிடப்பட்டது 2009-12-18 at the வந்தவழி இயந்திரம் கொண்டு குறியீடாக்கப்பட்டுள்ளது, "växjö" கடவுச்சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் மறைசெய்தியியல் நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த வதந்திகள் முதல்முதலாய் யுஎஸ்ஏ டுடே நாளிதழில் வெளிவந்தது. பிப்ரவரி 5, 2001 அன்று ”பயங்கரவாத கட்டளைகள் இணையவெளியில் மறைவாய் உலாவருகின்றன” மற்றும் “இணைய குறியீடாக்க தொழில்நுட்பத்தின் பின்னால் பயங்கரவாதக் குழுக்கள் ஒளிந்து கொள்கின்றன’’ ஆகிய தலைப்புகளில் இரண்டு கட்டுரைகள் வெளிவந்தன. அதே வருடம் ஜூலையில், ஒரு கட்டுரை இன்னும் துல்லியமாய் எழுதியது: "தீவிரவாதிகள் ஜிகாத்துக்கு இணையத்தில் வலை பின்னுகின்றனர்”. அந்த கட்டுரையில் இவ்வாறு மேற்கோளிடப்பட்டது: “சமீப காலத்தில், அல் காயிதாவைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான ரகசியக் குறியீட்டு செய்திகளை ஏல விற்பனை இணையத்தளமான eBay.com தளத்தில் வெளியாகும் எண்மருவிப் புகைப்படங்களில் மறைத்து அனுப்புகின்றனர் ”. உலகெங்கும் உள்ள மற்ற ஊடகங்களும் இந்த ஊகங்களை குறிப்பாக 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பலமுறை வெளியிட்டன. ஆனால் ஆதாரங்களை அவை ஒருபோதும் காட்டவில்லை. இத்தாலிய செய்தித்தாளான கோரியெரெ டெல்லா செரா வெளியிட்ட செய்தியில், மிலனில் உள்ள வியா குவாரன்டா மசூதியில் பிடிபட்ட அல் கெய்தா பிரிவினர் தங்களது கணினிகளில் ஆபாசப்படங்களைக் கொண்டிருந்தனர். இந்த படங்கள் எல்லாம் ரகசிய செய்திகளை ஒளித்து வைக்க பயன்பட்டவையாகும் என்று கூறியது. (ஆயினும் வேறு எந்த இத்தாலிய செய்தித்தாளும் இது பற்றி எப்போதும் செய்தி வெளியிடவில்லை). யுஎஸ்ஏ டுடே கட்டுரைகள் பழம்பெரும் அயலுறவு செய்தியாளரான ஜேக் கெல்லியால் எழுதப்பட்டவையாகும். செய்திகளையும் ஆதாரங்களையும் திரித்ததாகக் கூறி இவர் 2004 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்.

அக்டோபர் 2001 இல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு கட்டுரையில், அல்கெய்தா படங்களில் செய்திகளை மறைக்க மறைசெய்தியியல் நுட்பங்களைப் பயன்படுத்தியது என்றும், அந்த படங்கள் மின்னஞ்சல் வழியாக (யூஸ்நெட் வழி அனுப்பப்பட்டிருக்கும் சாத்தியம் அதிகம்) அனுப்பப்பட்டன என்றும், செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதலுக்கு தயாரிப்பு செய்யவும் அதனைச் செயல்படுத்தவும் இவ்வாறு அவர்கள் செய்தனர் என்றும் தெரிவித்தது. 2006 ஏப்ரலில் வெளியான தி பெடரல் பிளான் ஃபார் சைபர் செக்யூரிட்டி அன்ட் இன்பர்மேஷன் அஸூரன்ஸ் ரிசர்ச் அன்ட் டெவலப்மென்ட்[7] பின்வரும் கூற்றுகளை அடக்கியிருந்தது:

  • “...உடனடி கவலைகளாக இருப்பவற்றில், இணையவெளியை ரகசிய தகவல்பரிவர்த்தனைகளுக்கு, குறிப்பாக பயங்கரவாதிகளும் மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்புகளும், பயன்படுத்துவது; அரசு மற்றும் தொழில்துறை அமைப்புகளில் மோசமான பாதுகாப்புடன் இருக்கும் முக்கிய தரவுகளுக்கு எதிரான ஒற்று வேலை; விநியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்கள் உள்ளிட்ட உள்ளிருப்போர் செய்யும் சதி; குற்ற நடவடிக்கை, குறிப்பாக ஹேக்கர்கள் மற்றும் அமைப்பாய் செயல்படும் குற்ற குழுக்களால் நிதி அல்லது அடையாள விபரங்கள் மோசடி செய்யப்படுவது அல்லது திருடப்படுவது, ஆகியவையும் அடங்கும்...” (ப 9-10)
  • ”மறைசெய்தியியல் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறையில் சர்வதேச ஆர்வமும் அவற்றின் வர்த்தகமயமாக்கம் மற்றும் பயன்பாடுகளும் சமீப வருடங்களில் வெடிப்பாய் விரிவடைந்திருக்கின்றன. இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் தேசிய பாதுகாப்புக்கான ஒரு அச்சுறுத்தலை முன்நிறுத்துகின்றன. மறைசெய்தியியல் தொழில்நுட்பம் கூடுதலான, ஏறக்குறைய கண்டறிய முடியாத, தகவல்களை எண்மருவித் தயாரிப்புகளில் ரகசியமாய் பொதிக்கத்தக்கதாய் இருப்பதால், வேவு மென்பொருள், கைபேசி நிரல் வழியே தகவல்களின் ரகசிய பரவலுக்கான சாத்தியம் பெரிதாய் உள்ளது.” (ப. 41-42)
  • “மறைசெய்தியியலால் முன்நிறுத்தப்படும் அச்சுறுத்தல் ஏராளமான உளவுத்துறை அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.” (ப. 42)

இதுதவிர, ஜிகாதிக்களுக்கான பயிற்சி கையேடான ”தி டெக்னிக்கல் முஜாஹித்” என்னும் இணையத்தின் ”பயங்கரவாதப் பயிற்சி நிரல்கூறு” ஒன்று, “ரகசிய தகவல்தொடர்பு மற்றும் படங்களில் ரகசியங்களை மறைப்பது” என்னும் தலைப்பில் ஒரு பிரிவைக் கொண்டிருந்தது.[8][சான்று தேவை]

இவையெல்லாம் இருந்தாலும், பயங்கரவாதிகள் கணினி மறைசெய்தியியலைப் பயன்படுத்திய நிகழ்வு என்று ஒன்றும் வெளிவரவில்லை . அல் கெய்தாவின் மறைசெய்தியியல் பயன்பாடு என்பது சற்று எளிமையானது: 2008 ஆம் ஆண்டில், ரங்சீப் அக்மது என்னும் ஒரு பிரித்தானிய முஸ்லீம் அல் காயிதா தொலைபேசி எண்கள் கொண்ட ஒரு முகவரி புத்தகத்தை கண்ணுக்குப் புலப்படாத மை கொண்டு எழுதி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது பயங்கரவாதக் குற்றம் உறுதி செய்யப்பட்டது.[9]

மேலும் காண்க

தொகு

  • படப்பதிவுக் கருவி
  • கேனரி ட்ராப் (Canary trap)]]
  • ரகசிய அலைவரிசை
  • மறுக்கத்தக்க குறியீடாக்கம்
  • புலப்படா மை
  • பாலிபையஸ் சதுரம்

  • பாதுகாப்பு பொறியியல்
  • குறியியல்
  • மறைசெய்தியியல் கோப்பு அமைப்பு
  • நீர்க்குறியீடு
  • நீர்க்குறியீடு கண்டறிதல்

மேற்கோள்கள்

தொகு
  1. Pahati, OJ (2001-11-29). "Confounding Carnivore: How to Protect Your Online Privacy". AlterNet. Archived from the original on 2007-07-16. பார்க்கப்பட்ட நாள் 2008-09-02.
  2. Petitcolas, FAP; Anderson RJ; Kuhn MG (1999). "Information Hiding: A survey" (pdf). Proceedings of the IEEE (special issue) 87 (7): 1062–78. doi:10.1109/5.771065. http://www.cl.cam.ac.uk/~fapp2/publications/ieee99-infohiding.pdf. பார்த்த நாள்: 2008-09-02. 
  3. "CTO Sea Dogs". Archived from the original on 2008-02-12. பார்க்கப்பட்ட நாள் 2010-03-23.
  4. "The origin of Modern Steganography". Archived from the original on 2017-04-03. பார்க்கப்பட்ட நாள் 2010-03-23.
  5. "SARC - Steganography Analysis and Research Center". Archived from the original on 2010-01-26. பார்க்கப்பட்ட நாள் 2010-03-23.
  6. http://www.eff.org/press/archives/2005/10/16
  7. CSIA12i-FINAL.qxd
  8. The Jamestown Foundation
  9. http://www.dailymail.co.uk/news/article-1061190/British-Muslim-Al-Qaeda-contacts-book-terrorists-numbers-written-invisible-ink.html

குறிப்புதவிகள்

தொகு

கூடுதல் வாசிப்பு

தொகு

புற இணைப்புகள்

தொகு

உரை மறைக்கும் கருவிகள்

தொகு

ஆன்லைன்:

பதிவிறக்கத்தக்கவை:

  • Bapuli Online விசுவல் பேசிக் பயன்படுத்தி மறைசெய்தியியல் அமலாக்குகிறது.
  • BitCrypt குறியீடாக்க கருவிகளில் பயன்படுத்த எளிதானவற்றுள் ஒன்றாகும், அதே சமயத்தில் இது மிக வலிமையான குறியீடாக்கத் திறன்களை வழங்குகிறது. இது 8192 லாங் பிட் வரை பயன்படுத்தி உரையை குறியீடாக்கம் செய்து பின் அதனை பிட்மேப் படங்களுக்குள்ளான குறியீடாக்கம் செய்யப்பட்ட உரைக்குள் சேமிக்கிறது.

கோப்பு மறைக்கும் கருவிகள்

தொகு

இணைய இணைப்பில்:

பதிவிறக்கத்தக்கவை:

  • Stego Archive பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம். பல்வேறுவகையான மறைசெய்தியியல் மென்பொருள் வகைகளுக்கான ஆதாரம்.
  • StegoShare பெயரிலி முறையில் கோப்பு பகிர்வுக்கு பயன்படுத்தத்தக்க ஒரு மறைசெய்தியியல் மென்பொருள்.
  • Hiding Glyph: Bytewise Image Steganography. எந்த கோப்பு (அல்லது கோப்புறையை) ஏதேனும் தளர்வுடன் நெருக்கிய படக் கோப்பிற்குள் (BMP, PNG, போன்றவை.) ஒளிக்கத்தக்க இலவச மென்பொருள்.
  • ImageSpyer[தொடர்பிழந்த இணைப்பு]. எந்த கோப்பையும் எந்த படத்திற்குள்ளும் ஒளிக்கும் ஒரு GUI மென்பொருள், StegoTC [1] என்றும் அழைக்கப்படுகிறது, Total Commander க்கான பிளக்-இன். LSB முறை, விரும்பியமைத்த பிட்செட், தரவு குறியீடாக்கம். இலவச மென்பொருள்.
  • Freeware plugin for Total Commander DarkCryptTC and its GUI shell DarkCrypt GUI[தொடர்பிழந்த இணைப்பு] கோப்பு குறியீடாக்கம், அழுத்தி படங்களில் மறைத்தல், உரைக் கோப்புகள் மற்றும் வேவ் ஆடியோ தரவு ஆகியவற்றை ஆதரிக்கிறது.
  • BestCrypt, வர்த்தகரீதியான விண்டோஸ்/லினக்ஸ் வட்டு குறியீடாக்க மென்பொருள், குறியீடாக்கம் செய்த ஒரு தொகுதியை இன்னொன்றுக்குள் ஒளிப்பதை ஆதரிக்கிறது.
  • FreeOTFE இலவச திறந்த ஆதார விண்டோஸ்/பாக்கெட்பிசி/லினக்ஸ் வட்டு குறியீடாக்க மென்பொருள், ஒரு குறியீடாக்கத் தொகுதியை இன்னொன்றுக்குள் ஒளிப்பதை ஆதரிக்கிறது. இரண்டாம் குறியீடாக்க தொகுதி இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் இது விட்டு வைப்பதில்லை. இது அநேகமாக எந்த புள்ளிவிவர பகுப்பாய்வையும் எதிர்க்கிறது (தரவினை படங்கள் அல்லது ஒலிக் கோப்புகளுக்குள் மறைத்து வைக்கும் கருவிகள் போல் அல்லாமல், அவற்றில் ஒப்பீட்டளவில் கண்டறிவது எளிது).
  • OpenStego. OpenStego எந்த வகை கோப்பையும் படங்களுக்குள் பொதிப்பதற்கான ஒரு திறந்த ஆதார (GPL) நிரல்/நூலகம். தற்போது ஜாவாவில் எழுதப்பட்டிருக்கும் இது 24 bpp படங்களை ஆதரிக்கிறது.
  • PCopy பரணிடப்பட்டது 2009-08-18 at the வந்தவழி இயந்திரம் மறைசெய்தியியல் கட்டளைவரிக் கருவி, PNG மற்றும் BMP போன்ற இழப்பற்ற படங்களை உருவாக்கும் பயனர்க்கு எளிய வழிகாட்டியைக் கொண்டிருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்கள் RLE, Huffman அழுத்தம், உறுதியான XOR குறியீடாக்கம் மற்றும் மொத்த கோப்பகங்களையும் செலுத்துவதற்கு வழிவகை செய்யும் Hive காப்பக வடிவமைப்பு ஆகியவை ஆகும்.
  • P2Stego விண்டோஸ் அடிப்படையிலான மறைசெய்தியியல் மென்பொருள், செய்தி உரையை குறியீடாக்குவதையும் பயன்படுத்திக் கொள்கிறது.
  • Phonebook FS பரணிடப்பட்டது 2012-02-09 at the வந்தவழி இயந்திரம் மறுக்கத்தக்க குறியீடாக்கம் கொண்டு உங்களது வட்டுகளைப் பாதுகாக்கிறது.
  • Stego and Winstego பரணிடப்பட்டது 2009-05-24 at the வந்தவழி இயந்திரம். வார்த்தை இடைவெளிச் சமநிலை செய்யப்பட்ட வெற்று உரையாலான ஸ்டிகனோகிராபி.
  • Stego-0.5 பரணிடப்பட்டது 2009-08-16 at the வந்தவழி இயந்திரம், LSB நிரல்திட்டத்திற்கான GNOME/GTK+ அடிப்படையிலான GUI. உரிமம் (GPL)
  • Steghide லினக்ஸ் மற்றும் பிற இயங்கு தளங்களுக்கான இலவச .jpeg மற்றும் .wav குறியீடாக்கம்.
  • SteGUI Linux மற்றும் Steghide க்கான இலவச GUI.
  • Thumbnail Steganography இது ஒரு புதுவகை மறைசெய்திமுறை. மறைசெய்தியை கண்டறியும் செயல்முறையை தன்னியக்கம் செய்ய முயற்சிப்பதை கடினமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. சிற்றளவு படத்தில் (png) இருந்து கோப்பினை எடுக்க வேண்டுமென்றால் ஆரம்ப படத்தையும் (jpg, gif, போன்றவை) இது கோருகிறது. திறந்த ஆதார மென்பொருளான இது ஜாவாவில் எழுதப்பட்டுள்ளது.
  • Trojan பரணிடப்பட்டது 2010-03-04 at the வந்தவழி இயந்திரம். படங்களுக்குள் தரவை மறைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மறைசெய்தியியல் மென்பொருள். தரவின் ஆதாரம் பல்வேறுவகையாய் இருக்கலாம்: உரை செய்திகள் அல்லது பைனரி கோப்புகள்.
  • TrueCrypt. விண்டோஸ்/லினக்ஸ் வட்டு குறியீடாக்க மென்பொருள். ஒரு குறியீடாக்கத் தொகுதியை இன்னொன்றுக்குள் ஒளிப்பதை ஆதரிக்கிறது. இரண்டாம் குறியீடாக்க தொகுதி இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் இது விட்டு வைக்காது. இது அநேகமாக எந்த புள்ளிவிவர பகுப்பாய்வையும் எதிர்க்கிறது (தரவினை படங்கள் அல்லது ஒலிக் கோப்புகளுக்குள் மறைத்து வைக்கும் கருவிகள் போல் அல்லாமல், அவற்றில் ஒப்பீட்டளவில் கண்டறிவது எளிது).
  • Examples—மறைசெய்தியியல் செயலுறுத்தங்களுக்கான உதாரணங்கள், Disappearing Cryptography ஆசிரியரான பீட்டர் வேய்னரிடம் இருந்து.
  • NetTools தரவை படங்கள், காப்பகங்கள், ஒலிகள், உரைக் கோப்புகள், மீயுரை, மற்றும் பட்டியல்களில் ஒளிப்பதன் மூலமான மறைசெய்தியியல்.
  • Qtech Hide & View v.01. விண்டோஸ்க்கான மிகப்புதிய BPCS-மறைசெய்தியியல் நிரல். பட மறைசெய்தியியல். பயன்படுத்த இலவசம்.
  • SteganoG பரணிடப்பட்டது 2009-12-28 at the வந்தவழி இயந்திரம். ஒரு உரைக் கோப்பை ஒரு .bmp கோப்பிற்குள் மறைப்பதற்கான ஒரு எளிய நிரல்.
  • Downloadable hideimage. படத்துக்குள் ஒளிக்கும் மென்பொருள், PHP Interface உடனும் கிடைக்கிறது. உரிமம் அவசியமில்லை.
  • Vecna பரணிடப்பட்டது 2009-08-26 at the வந்தவழி இயந்திரம். எந்த கோப்பையும் எந்த படத்திற்குள்ளும் ஒளிக்கிறது. விளைபொருள் PNG வடிவத்தில் தான் எப்போதும் இருக்கும். ஜாவாவில் எழுதப்பட்டது. GPL
  • Virtual Steganographic Laboratory (VSL). ஸ்டிகனோகிராபி மற்றும் ஸ்டிகனாலிஸிஸ் இரண்டுக்குமே பயன்படுத்தக் கூடிய, இயங்குதளம் சாராத வரைகலை தொகுதி வரைபடக் கருவி. இலவசமாய் கிடைக்கிறது. எளிமையான GUI உடன் செருகு-சாதன கட்டுமானத்தையும் வழங்குகிறது.
  • OutGuess பரணிடப்பட்டது 2011-09-22 at the வந்தவழி இயந்திரம். மறை தகவல்களை தரவு ஆதாரங்களின் உபரி பிட்டுகளுக்குள் செலுத்த அனுமதிக்கும் ஒரு உலகளாவிய மறைசெய்தியியல் மென்பொருள் சாதனம்.

ஸ்டிகனாலிஸிஸ் கருவிகள்

தொகு
  • StegAlyzerSS பரணிடப்பட்டது 2009-06-14 at the வந்தவழி இயந்திரம். அறிந்த மறைசெய்தி உத்திகளில் இருக்கும் கையொப்பங்களை சந்தேகத்திற்குரிய கணினி ஊடகங்களில் இருக்கும் கோப்புகளில் உள்ளவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மறைசெய்தியியல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஒரு தன்னியக்கம் செய்யப்பட்ட மென்பொருள் சாதனம்.
  • Steganography Analysis and Research Center (SARC). பாதுகாப்பு முதுகெலும்பாய் விளங்கும் ஒரு சிறப்பு மையம், மறைசெய்தியியல் கண்டறிவு மற்றும் அகற்றத்திற்கான கருவிகளை வழங்குவதோடு மறைசெய்தியியல் ஆய்வாளருக்கான சான்றிதழ் பயிற்சியும் வழங்குகிறது.
  • StegDetect பரணிடப்பட்டது 2007-09-12 at the வந்தவழி இயந்திரம். ஏழு மறைசெய்தியியல் பயன்பாடுகள் மூலம் படங்களில் பொதிக்கப்பட்டிருக்கும் மறை செய்திகளைத் தானாகக் கண்டறிந்து விடும் கருவி.
  • StegSpy. ஐந்து மறைசெய்தியியல் பயன்பாடுகள் மூலம் பொதிக்கப்பட்டிருக்கும் மறை செய்திகளைக் கண்டறியும் கருவி.
  • StegSecret. ஜாவா அடிப்படையிலான பல இயங்குதளங்களுக்கான ஸ்டிகனோலிஸிஸ் கருவி. மிக அறிந்த ஸ்டிகனோகிராபி பயன்பாடுகள் கொண்டு பொதிக்கப்பட்ட மறை செய்திகளைக் கண்டறிகிறது. EOF, LSB, DCTs மற்றும் பிற உத்திகளைக் கண்டறிகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைசெய்தியியல்&oldid=3937330" இலிருந்து மீள்விக்கப்பட்டது