மலேசிய சிற்றெலி

மலேசிய சிற்றெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபோடைப்ளா
குடும்பம்:
தலாபிடே
பேரினம்:
யூராசுகாப்டர்
இனம்:
யூ. மலேயனசு
இருசொற் பெயரீடு
யூராசுகாப்டர் மலேயனசு
(சாசென், 1940)
மலேசிய சிற்றெலி பரம்பல்

மலேசிய சிற்றெலி (Malaysian mole)(யூராசுகாப்டர் மலேயனசு) என்பது தால்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது தீபகற்ப மலேசியாவின் மலைப்பகுதிகளில் காணப்படும் அகணிய உயிரி. இது தென்பகுதியில் அறியப்பட்ட சிற்றெலிசிற்றினமாகும்.[1]

வகைப்பாட்டியல்

தொகு

இந்த சிற்றினம் முன்பு குளோசு சிற்றெலி (ஈ. குளோசி) அல்லது (அறிமுகப்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்பட்டது) இமயமலை சிற்றெலி (ஈ. மைக்ரோரசு) கிளையினமாக வகைப்படுத்தப்பட்டது. ஆனால் 2008ஆம் ஆண்டு ஆய்வில் குறிப்பிடத்தக்க உருவவியல் மற்றும் மரபணு வேறுபாட்டைக் கண்டறிந்து, இதை ஒரு தனிச் சிற்றினமாகப் பிரித்தனர்.[1][2][3]

பரவல்

தொகு

இந்த சிற்றினம் கடல் மட்டத்திலிருந்து 1,300 முதல் 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள கேமரன் மலைப்பகுதியில் மட்டுமே காணப்படுவதாக அறியப்படுகிறது. தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோட்டங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்களுடனான இந்த சிற்றினத்தின் தொடர்பு வேறு எந்த சிற்றெலி சிற்றினங்களிலிருந்தும் அரியப்படவில்லை. டார்ஜீலிங்கிலிருந்து தற்செயலாக மலேசியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோரசு சிற்றெலி, கேமரூன் மலைப்பகுதி தேயிலைத் தோட்டங்களில் உருவானது. சில வகைப்பாட்டியல் இதை ஈ. மைக்ரோரசின் துணையினமாக விவரிக்கின்றனர். இருப்பினும், பிற சிற்றெலி இனங்களிலிருந்து இதன் கனமான உருவவியல் மற்றும் மரபணு வேறுபாடு, வகைபிரித்தல் ஆய்வுகள் இது ஈ. குளோசியுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையதாகக் கண்டறிந்தது, மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சிற்றினமாக இதன் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளது.[3]

விளக்கம்

தொகு

மண்டை ஓட்டின் மிகப்பெரிய நீளத்திற்கு மேல் கடைவாய்ப்பற்களின் ஒப்பீட்டு அளவு யூரோசுகேப்டர் பேரினத்தில் இது மிகப்பெரியது.[3]

பாதுகாப்பு

தொகு

மலேசிய சிற்றெலி என்பது கேமரன் மலைப்பகுதியில் காணப்படும் சிற்றினமாக இருக்கலாம். ஏனெனில் சிற்றெலிகளுக்கு உகந்த குளிர் வெப்பநிலை இங்கு இருப்பது காரணமாகும். மலேசியாவின் தாழ் நிலப் பகுதிகள் பெரும்பாலும் வெப்பமண்டல காலநிலை காரணமாகப் பொருத்தமான வாழ்விடமாக இல்லை.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Explore the Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.
  2. Kawada, Shin-ichiro; Shinohara, Akio; Yasuda, Masatoshi; Oda, Sen-ichi; Liat, Lim Boo (December 2005). [109:ksotmm2.0.co;2 "Karyological study of the Malaysian mole, Euroscaptor micrura malayana (Insectivora, Talpidae) from Cameron Highlands, Peninsular Malaysia"]. Mammal Study 30 (2): 109–115. doi:10.3106/1348-6160(2005)30[109:ksotmm]2.0.co;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1343-4152. http://dx.doi.org/10.3106/1348-6160(2005)30[109:ksotmm]2.0.co;2. 
  3. 3.0 3.1 3.2 3.3 Kawada, S.; Yasuda, M.; Shinohara, A.; Lim, B. (2008) (in en). Redescription of the Malaysian Mole as to be a True Species, Euroscaptor malayana (Insectivora, Talpidae)(Biodiversity Inventory in the Western Pacific Region II. Indonesia and Malaysia). https://www.semanticscholar.org/paper/Redescription-of-the-Malaysian-Mole-as-to-be-a-True-Kawada-Yasuda/c1451cf2adee5d9246d66d13f0debd6a0ce428c3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_சிற்றெலி&oldid=3438056" இலிருந்து மீள்விக்கப்பட்டது