மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு

மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு (மலாய்: Kementerian Pembangunan Usahawan Dan Koperasi Malaysia; ஆங்கிலம்: Ministry of Entrepreneur Development and Cooperative Malaysia) என்பது மலேசியாவின் தொழில் முனைவோர் மேம்பாடு; கூட்டுறவு மேம்பாடு ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இயங்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.

மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு
Ministry of Entrepreneur and Cooperatives Development
Kementerian Pembangunan Usahawan Dan Koperasi

(MEDAC)
துறை மேலோட்டம்
அமைப்பு31 ஆகத்து 1957; 67 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்Block E4/5, Government Complex Parcel E, Federal Government Administrative Center, 62668 புத்ராஜெயா
02°56′34.2″N 101°42′31.7″E / 2.942833°N 101.708806°E / 2.942833; 101.708806[2]
பணியாட்கள்634 (2023)[1]
ஆண்டு நிதிMYR 732,351,400 (2022 - 2023)[1]
அமைச்சர்
  • * இவோன் பெனடிக்
    (Ewon Benedick),
    துணை அமைச்சர்
துணை அமைச்சர்
அமைப்பு தலைமை
  • * சுராயினி அகமட்
    (Suriani binti Dato' Ahmad),
    பொதுச் செயலர்
வலைத்தளம்www.medac.gov.my%20www.medac.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களைத் திட்டமிடுதல்; ஒருங்கிணைத்தல்; செயல்படுத்துதல்; மற்றும் கண்காணித்தல் (To Plan, Coordinate, Implement and Monitor Entrepreneur Development Programs) ஆகியவற்றுக்கு இந்த அமைச்சு முன்னுரிமை வழங்குகிறது.

வரலாறு

தொகு

1974-ஆம் ஆண்டில் மலேசிய பொது நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு அமைச்சு (Ministry of Public Corporation Coordination) நிறுவியதில் இருந்து மலேசிய தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் வரலாறு தொடங்குகிறது. அது பின்னர் 1976-ஆம் ஆண்டில் பொது நிறுவனங்களின் அமைச்சாக (Ministry of Public Enterprises) மாற்றப்பட்டது.

மலேசியாவின் பொது நிறுவனங்களான மாரா (Majlis Amanah Rakyat); மலேசிய நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ஊடா (Urban Development Authority of Malaysia); மாநில பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (State Economic Development Corporation) போன்ற நிறுவனங்களைக் கவனிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் பொது நிறுவனங்களின் அமைச்சு பொறுப்பு வகித்தது.

தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு

தொகு

8 மே 1995-இல் பொது நிறுவனங்களின் அமைச்சகத்திற்கு பதிலாக தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு (Ministry of Entrepreneur Development) நிறுவப்பட்டது. மார்ச் 27, 2004-இல் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சிற்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு (Ministry of Entrepreneur Development and Cooperatives) என்று ஒரு புதிய பெயர் வழங்கப்பட்டது.

2009-இல் நஜிப் துன் ரசாக் மலேசியாவின் பிரதமரான பிறகு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு ரத்து செய்யப்பட்டது. அதன் பங்களிப்புகள் பிரிக்கப்பட்டு மற்ற மற்ற அமைச்சுகளால் உள்வாங்கப்பட்டன.

நிறுவனங்கள்

தொகு
  • மலேசிய சிறு நடுத்தர நிறுவனக் கழகம்
    • (Small Medium Enterprise Corporation Malaysia)
    • (Perbadanan Perusahaan Kecil Sederhana Malaysia)
  • மலேசிய சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி வங்கி
    • (Small Medium Enterprise Development Bank Malaysia)
    • (Bank Perusahaan Kecil dan Sederhana Malaysia Berhad)[3]
  • மலேசிய உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் மையம்
    • (Pusat Inovasi dan Kreativiti Global Malaysia)
    • (Malaysian Global Innovation and Creativity Centre) (MaGIC)
  • வணிக குழு பொருளாதார நிதி (தெக்குன்)
    • (Business Group Economic Fund)
    • (Tabung Ekonomi Kumpulan Usaha Niaga) (TEKUN)[4][5]
  • நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்
    • (Urban Development Authority)
    • (Perbadanan Pembangunan Bandar)[6]
  • மக்கள் கூட்டுறவு வங்கி
    • (People's Cooperative Bank)
    • (Bank Kerjasama Rakyat Malaysia Berhad) (Bank Rakyat)[7]
  • மலேசிய கூட்டுறவு ஆணையம்
    • (Malaysian Cooperative Commission)
    • (Suruhanjaya Koperasi Malaysia)[8]
  • தேசிய தொழில் முனைவோர் நிறுவனம்
    • (National Institute of Entrepreneurship)
    • (Institut Keusahawana Negara) (INSKEN)
  • வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு தொழில்சார் பயிற்சி மற்றும் கல்வி
    • (Professional Training and Education for Growing Entrepreneurs) (PROTEGE)
    • (Latihan dan Pendidikan Profesional untuk Usahawan yang Berkembang)

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Ministry of Entrepreneur and Co-operatives Development (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 28 April 2023.
  2. "Its geographical coordinates are 2° 56' 34.2 North, 101° 42' 31.7 East and its original name is Persiaran Perdana (Presint 4)". www.poskod.com. பார்க்கப்பட்ட நாள் 28 April 2023.
  3. "SME Bank was established in 2005 is now one of the nation's leading Development Financial Institution (DFI) wholly-owned by the Ministry of Finance and regulated by Bank Negara Malaysia (BNM)". www.smebank.com.my.
  4. Tekun Diminta Kurangkan Kerenah Dalam Pemberian Pinjaman - Khairy
  5. "Intipati bajet sulung Najib", Malaysiakini.com, 23 Oktober 1009.
  6. "UDA was incorporated on 20 June 1995 and became UDA Holdings Sdn Bhd, before renaming to UDA Holdings Berhad in 1999 and floating as a publicly limited company on the Main Board of the Kuala Lumpur Stock Exchange". www.uda.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 April 2023.
  7. "Bank Rakyat was established on 28 September 1954 under the Cooperative Ordinance 1948 (known as the Cooperative Societies Act 1993). Today, Bank Rakyat is the biggest Islamic cooperative bank in Malaysia with assets totaling RM115.06 billion as at the end of December 2021". www.bankrakyat.com.my. பார்க்கப்பட்ட நாள் 28 April 2023.
  8. "Malaysia Co-operative Societies Commission of Malaysia (SKM) is an entity that was incorporated on January 1, 2008. SKM was formerly known as the Co-operative Development Department of Malaysia (JPK)". பார்க்கப்பட்ட நாள் 28 April 2023.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு