மலேசிய வணிக நிறுவனங்கள் ஆணையம்

மலேசிய வணிக நிறுவனங்கள் ஆணையம் (மலாய்: Suruhanjaya Syarikat Malaysia (SSM); ஆங்கிலம்: Companies Commission of Malaysia) (CCM); என்பது மலேசியாவின் பெருநிறுவன வணிகம் (Corporate Business) மற்றும் பொது வணிக விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் மலேசிய நடுவண் அரசு சார்ந்த சட்டப்பூர்வ ஆணையம் (Malaysian Statutory Body) ஆகும்.

மலேசிய வணிக நிறுவனங்கள் ஆணையம்
Companies Commission of Malaysia
Suruhanjaya Syarikat Malaysia(SSM)

துறை மேலோட்டம்
அமைப்பு4 செப்டம்பர் 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-09-04)
ஆட்சி எல்லை மலேசியா தீபகற்ப மலேசியா, மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள், சபா & சரவாக்
தலைமையகம்Menara SSM, KL Sentral, கோலாலம்பூர்
பொறுப்பான அமைச்சர்கள்
  • சலாவுடின் அயூப்
    (Salahuddin Ayub)[1]
  • பூசியா சாலே
    (Fuziah Salleh)
அமைப்பு தலைமை
  • அசுமான் உசேன்
    (Azman Bin Hussin)
    (2022 சூன் 1 முதல்)
மூல அமைப்புமலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு
வலைத்தளம்www.ssm.com.my
அடிக்குறிப்புகள்
மலேசிய வணிக நிறுவனங்களின் ஆணையச் சட்டம் 2001
Companies Commission of Malaysia Act 2001

இந்த ஆணையம் இணையத் தகவல் சேவையை (SSM e-Info Services) அறிமுகப்படுத்தி உள்ளது. வணிக நிறுவனங்கள் [இணையத்தளம்] வழியாக நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.[2]

முன்பு இயங்கிய வணிக நிறுவனங்களின் பதிவாளர் அமைப்பு (Registrar of Companies); மற்றும் வணிகப் பதிவாளர் அமைப்பு (Registry of Business); ஆகியவற்றின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டது.

பொது தொகு

மலேசியாவில் உள்ள வணிக நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் (Incorporate Companies); வணிக நிறுவனங்களைப் பதிவு செய்வதல் (Register Businesses); வணிக நிறுவனங்கள் தொடர்பான வணிகத் தகவல்களை (Provide Company and Business Information) பொது மக்களுக்கு வழங்குதல்; போன்றவை மலேசிய வணிக நிறுவனங்கள் ஆணையத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.[3]

இந்த ஆணையம் இணையத் தகவல் சேவையை (SSM e-Info Services) அறிமுகப்படுத்தி உள்ளது. [இணையத்தளம்] வழியாக நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.[2]

பெருநிறுவனச் சட்டங்கள் தொகு

இந்த ஆணையம் மலேசியாவில் பெருநிறுவன (Corporate Business) நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முன்னணி ஆணையமாகும். வணிகப் பதிவு மற்றும் பெருநிறுவனச் சட்டங்கள் (Corporate Legislation) கடைபிடிக்கப் படுவதை உறுதி செய்வதற்காக, கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளையும் இந்த ஆணையம் மேற்கொள்கிறது.[4]

மலேசியாவின் வணிக நிறுவனங்கள் ஆணையம்; 2003-ஆம் ஆண்டில், வணிக நிறுவனங்கள் சட்டம் 1998-இல் (Companies Act 1998) மதிப்பாய்வைத் தொடங்கியது. அந்த மதிப்பாய்வு, மலேசியாவில் வணிகம் செய்ய விரும்புவர்களுக்கான விண்ணப்பச் செயல்முறையை எளிதாக்குவது; வணிக முதலீட்டுச் செலவுகளைக் குறைப்பது; ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

வணிக நிறுவனங்கள் சட்டம் 1998, இறுதியில் வணிக நிறுவனங்கள் சட்டம் 2016 (Companies Act 2016) எனும் புதிய சட்டத்தின் மூலமாக மாற்றப்பட்டது. அந்தப் புதியச் சட்டத்தில் சில பெரிய மாற்றங்களும் செய்யப்பட்டன. இரு இயக்குநர்களுக்குப் பதிலாக ஒரே ஓர் இயக்குநர் மட்டும் ஒரு வணிக நிறுவனத்தை (Company Limited) பதிவு செய்யலாம் எனும் மாற்றமே ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது.[5]

வணிக நிறுவனங்கள் சட்டம் 2016 தொகு

வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிகத்தை பதிவு செய்து கொள்ள கீழ்க்காணும் முறைகளைத் தேர்வு செய்யலாம்:

  • தனி உரிமையாளர் அல்லது கூட்டுரிமை வணிக நிறுவனம்
  • பங்குகள் மூலம் வரையறுக்கப்பட்ட வணிக நிறுவனம்; உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட வணிக நிறுவனம்; வரம்பற்ற வணிக நிறுவனம்
  • வரையறுக்கப்பட்ட கூட்டுரிமை வணிக நிறுவனம்

மேற்கோள்கள் தொகு

  1. "Malaysia's Prime Minister Muhyiddin Yassin and cabinet resign". CNBC. பார்க்கப்பட்ட நாள் 16 August 2021.
  2. 2.0 2.1 "SSM e-Info". www.ssm-einfo.my. பார்க்கப்பட்ட நாள் 26 May 2023.
  3. "SSM's role is to improve corporate governance by serving as an enforcement and monitoring agent, handling company incorporation and business registration as well as providing company and business information to the public". malayacorporate.com. பார்க்கப்பட்ட நாள் 26 May 2023.
  4. "Review of Companies Act underway", Daily Express, 5 August 2003, பார்க்கப்பட்ட நாள் 11 March 2010
  5. "Companies Act 2016, Companies Regulations 2017 has eased cost of doing business". www.nst.com.my. 13 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-08-29.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு