மலைப்பட்டு
மலைப்பட்டு (Malaipattu) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
மலைப்பட்டு | |
---|---|
மலைப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 12°55′57″N 80°01′02″E / 12.9324°N 80.0171°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
ஏற்றம் | 32.3 m (106.0 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,078 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
புறநகர்ப் பகுதிகள் | அமரம்பேடு, சோமங்கலம், மண்ணிவாக்கம் |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சட்டமன்றத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 32.3 மீ. உயரத்தில், (12°55′57″N 80°01′02″E / 12.9324°N 80.0171°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு மலைப்பட்டு அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், மலைப்பட்டு ஊரின் மக்கள்தொகை 1,078 ஆகும். இதில் 551 பேர் ஆண்கள் மற்றும் 527 பேர் பெண்கள் ஆவர்.[2]
சமயம்
தொகுஇந்துக் கோயில்
தொகுகல்யாண சீனிவாச பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று இவ்வூரில் அமைந்துள்ளது.[3] மேலும், கன்யாகுமரி ஜய அனுமன் கோயில் என்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்றும் இக்கோயிலுக்கு அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.
அரசியல்
தொகுமலைப்பட்டு பகுதியானது, திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ கோ செங்குட்டுவன் / Ko Senguttuvan (2016-05-01). கூவம் - அடையாறு - பக்கிங்காம் : சென்னையின் நீர்வழித்தடங்கள் / Cooum - Adyar - Buckingham: Chennaiyin Neervazhithadangal. Kizhakku Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84149-80-2.
- ↑ "Malaipattu Village Population - Sriperumbudur - Kancheepuram, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 23 October 2024.
- ↑ "Kalyana Srinivasa Perumal Temple, Malaipattu, Chennai suburb". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-23.