மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள்
மலையடிப்பட்டி குடைவரைக் கோயில்கள், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் உள்ளது. இங்கு இரு குடைவரைகள் உள்ளன. அதில் ஒன்று சிவனுக்கும் மற்றொன்று அனந்தபத்ம சுவாமிக்கும் அமைக்கப்பட்டள்ளது.
அமைவிடம்
தொகுமலையடிப்பட்டி குடைவரை இக்குடைவரைக் கோயில், புதுக்கோட்டை நகரத்திற்கு வடக்கே 41 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிபி 9-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இக்குடைவரைக் கோயில், கிபி 16-ஆம் வரை விரிவாக்கப்பட்டது.
கோயில்கள்
தொகுகி. பி. 730 இல் இங்குள்ள மலையைக் குடைந்து வாகீசர் என்று அழைக்கப்படும் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இது பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் குவாவன் சாத்தன் என்னும் முத்தரையரால் குடையப்பட்டதாகும். தமிழ்நாட்டின் மிகப் பழமையான எழுவர் அன்னையர் சிற்பங்கள் இங்கு உள்ளன. பெருமாள் கோயிலானது காலத்தால் சிவன் கோயிலுக்கு பிந்தையதாக கருதப்படுகிறது. இங்குள்ள பெருமாள் கோயில் மூலவர் அனந்தபத்மசுவாமி, தாயார் கமலவள்ளி நாச்ச்சியார் என்று அழைக்கப்படுகின்றனர். இங்கு நரசிம்மர், திருமாள், அனந்த சயனமூர்த்தி, ஆதிசேசன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கபட்டுள்ளன. மூலவர் 15 உயரமாக செதுக்கபட்டுள்ளார்.[1] இக்குடைவரைகளுக்கு அருகில் சமணப் படுக்கைகளும் உள்ளன.
கல்வெட்டுகள்
தொகுபூச்சிக்குடியைச் சேர்ந்தவர் ஆவுடையப்ப தேவன் என்பவராவார். இவருக்கு தற்போதைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருநெடுங்களத்து விலைமாதுவுடன் உறவு இருந்தது. தேவன் அம்மாதுவின் வீட்டில் இருந்தபோது, அவள்பிராமணர் ஒருவரை வரச்செய்து உறவில் இருந்துள்ளார். இதனால் சினமுற்ற ஆவுடையப்பதேவன் அந்த இருவரையும் வெட்டிக் கொன்றார். பின்னர் அங்கிருந்து மலையப்பட்டிக்குப் புறப்பட்டார். அப்போது அவருக்கு இரு கண்களிலும் பார்வை இழப்பு ஏற்பட்டது. தான் செய்த தவறால் தன் பார்வை பறிபோனதாக கருதி வருந்தினார். தனக்கு பார்வை மீண்டும் வந்தால் தன் வயலை வாகீசருக்கு எழுதிவைப்பதாக வேண்டிக் கொண்டார். அதன் பிறகு பார்வை திரும்பக் கிடைத்தது. அதனால் மகிழ்ந்த ஆவுடையப்ப தேவன் தம் காணியான குடிகாட்டை வாகீசருக்கு எழுதி அதைக் கல்வெட்டாக கோயிலில் பொறித்தார்.[2]
போக்குவரத்து வசதிகள்
தொகுதிருச்சி - கீரனூர் - கிள்ளுக்குடி வழியாக 17 கிமீ தொலைவிலும், மற்றொரு பாதையான திருச்சி - துவாக்குடி - பொய்யாக்குடி - அசூர் - செங்கலூர் வழியாகவும் செல்லலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆ.திலகவதி (2024-03-16). "மலையடிப்பட்டி குடைவரை!".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "பார்வையிழப்பின் மூவருலா". 2024-05-05.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)