தந்திவர்மன்

தந்திவர்மன் (கி.பி 777 - 830) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன் ஆவார். இவர் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவார். இவர் பாரத்துவாச கோத்திரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலக குலோத்பவர் தந்திவர்மன் எனவும் " கோவிசைய தந்திவிக்கிரமவர்மன் " எனவும் கல்வெட்டுகளினல் குறிக்கப்பட்டுள்ளார்.[1] தந்திவர்மனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டப்பெயரும் வைரமேகன் என்னும் வேறு பெயரும் உண்டு. இவர் கடம்ப மன்னர் குலத்தில் பிறந்த[2] அக்கள நிம்மடி என்னும் இளவரசியை மணந்துகொண்டவர். திருச்சிராப்பள்ளி வட்டத்தில் இன்று ஆலம்பாக்கம் என வழங்கும் தந்திவர்ம மங்கலத்திலுள்ள கைலாசநாதர் கோயிலை இவன் கட்டியுள்ளார். இங்கு ஏரி ஒன்றை வெட்டி அதற்கு மாற்பிடுகு ஏரி எனப்பெயரும் வைத்துள்ளார். புதுக்கோட்டையில் குளத்தூர் வட்டத்தில் இக்காலம் மலையடிப்பட்டனம் என்று வழங்கும் திருவாலத்தூர் மலைக்கோயில் இவர் காலத்தில் விடேல்விடுகு முத்தரையனாகிய குவாவன் சாத்தனால் கட்டப்பட்டது. திருச்சிக்கு வடக்கே திருவெள்ளறை எனும் ஊரிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணறும் செங்கற்பட்டு வட்டத்தில் உத்தரமல்லூரிலுள்ள வைரமேகத் தடாகமும் இவர் காலத்தே வெட்டப்பட்டவை. தந்திவர்மனுக்கு இராட்டிரகூட அரசன் கோவிந்தனும், பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் வரகுண மகாராசனும் பகைவர்களாயிருந்தனர்.[3]இவரது ஆறாம் ஆண்டு ஆட்சி காலத்திய கல்வெட்டு ஒன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொண்டூர் என்னும் கிராமத்தில் உள்ள பெருமாளின் சிலை அருகே உள்ளது. அதில் "விண்ணக்கோவரையர் என்பர் ஏற்றுக்குன்றனர் படாரியர்க்கு தினமும் அரிசி உணவு சமைப்பதற்காக பதினாறு கழஞ்சி பொன் வழங்கியதை "குறிப்பிடுகிறது .

பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணு பொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் I பொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் II பொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன் பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் II பொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) பொ. யு. 731 - 796
தந்திவர்மன் பொ. யு. 775 - 825
நந்திவர்மன் III பொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன் பொ. யு. 882 - 901
தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. திருவல்லிக்கேணி கோவிலுள்ள தந்திவர்மன் கல்வெட்டு,, Epigraphic Indica, vol.VIII., NO.29
  2. Sailendra Nath Sen (1999 (Second Edition)). Ancient Indian history and Civilization. New Age International (P) Ltd., Publishers, New Delhi. p. 449. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-1198-3. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. வைசுந்தரேச வாண்டையார், 30 கல்வெட்டுகள், பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு நான்காம் பதிப்பு 2009. பக்.2
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்திவர்மன்&oldid=3127638" இலிருந்து மீள்விக்கப்பட்டது