சிவகந்தவர்மன்

சிவகந்தவர்மன் என்பவன் முற்காலப் பல்லவர் மன்னர்களுள் அறியப்படும் இரண்டாம் பல்லவ மன்னனாவான். முற்காலப்பல்லவர்களில் முதலாமானவனின் பெயர் தெரியவில்லை.[1] அவனுடைய மகனே இந்த சிவகந்தவர்மன். இவனின் பெயர் முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட பிராகிருத மொழியில் காணப்படுகிறது.

பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணு பொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் I பொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் II பொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன் பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் II பொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) பொ. யு. 731 - 796
தந்திவர்மன் பொ. யு. 775 - 825
நந்திவர்மன் III பொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன் பொ. யு. 882 - 901
தொகு

பாரத்வாச கோத்திரம்

தொகு

இவன் தன்னையும் தன் முன்னோரையும் பாரத்துவாசர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டான். இவன் இளவரசனாக பதவியேற்று பத்தாம் வருடத்தில் விரிபரம் என்னும் சிற்றூரை இரண்டு பிராமணர்களுக்கு தானம் கொடுத்தவன். இதற்கான பட்டயச்சான்றும் உளது.[2] அதன்படி இப்பட்டயத்தை காஞ்சியில் வெளியிட்டான். அதை ஆந்திர நாட்டின் பல்லவர் பகுதியை ஆண்ட சிற்றரசனுக்கு அனுப்பியுள்ளான்.

அரசர்கெல்லாம் அரசன்

தொகு

இவன் வெளியிட்ட மற்றொரு பட்டயம் ஒன்றில் இவன் மகாராசாதிராசன் எனவும் அசுவமேதம், அக்னிட்ட ஓமம், வாஜபேயம் போன்ற யாகங்களை செய்தவன் என்று குறிப்பிடப்படுகிறான். ஹிரதவல்லி என்ற தெலுங்கு நாட்டைச் சேர்ந்த ஊரில் வெளியிடப்பட்ட இப்பட்டயத்தில் தன் தந்தையான பப்பதேவன் எனக் குறிப்பிடப்படும் பெயர் தெரியாத பல்லவ அரசனன் சில்லரேகக் கொடுங்கா என்னும் ஊரை சிலருக்கு தானம் கொடுத்ததை உறுதிப்படுத்தக் கொடுத்ததாக உள்ளது. இது இவன் எட்டாம் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டது.[3]

இவன் பேரரசன் என்று கொள்ளத்தக்க சான்றுகள்
  1. இவன் அசுவமேத யாகம் செய்தது.[4]
  2. இவனின் தந்தை காஞ்சியில் எந்த பட்டயமும் வெளியிடவில்லை. மேலும் ஒரு பட்டயத்தில் இவனுக்கு கீழ் அடங்கிய தெலுங்கு நாட்டு அரசனுக்கு அனுப்பப்பட்டுளதாக உள்ளது. அதன்படி இவன் தன் அரசை தெலுங்கு நாட்டிலிருந்து காஞ்சி வரையிலும் விரிவாக்கியவன் என்றும் காஞ்சியை தலைநகராகக் முதலில் கொண்ட பேரரசன் என்றும் அறியலாம். இதை வைத்து இவன் பேரரசனாக ஆண்டவன் என்று தெளிவு பெற முடிகிறது.[5]

சாதவாகண ராட்டிர வெற்றி

தொகு

இவன் காலத்தில் சாதவாகணர் ஆண்ட பகுதிகளை இக்குவாகர் மற்றும் பிருகத்பலாயணர் என்னும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆண்டனர். அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல்லவர்கள் அந்நாட்டின் தெற்கு மாகாணத்தை ஆண்டனர். பல்லவர்கள் இவர்கள் இருவரையும் தோற்கடித்தனர். இவனது காலத்திலே இது நடந்ததைக் கொண்டும் இவன் தன் கீழடங்கிய ஆந்திர சிற்றரசனுக்கு ஆணைப் பட்டயம் வழங்கியதைக் கொண்டும் இவனே இக்குவாகரையும் பிருகத்பலாயணரையும் வெற்றி கொண்டான் என்பது தெளிவு.[6]

காலம்

தொகு

மூலம் - சர்கார் என்பவர் வெளியிட்ட நூல்[7]

இவனது காலம் பொ.பி. 300 - 325 என்று கொள்ளத்தக்க சான்றுகள்
  1. இவன் வெளியிட்ட பட்டயத்தின் உரை பிராகிருதம் என்ற மொழியிலுள்ளது.
  2. வட மன்னர்களான குசானர்களை பின்பற்றி நாலாம் நூற்றாண்டு குப்தர்கள் தங்களை மகாராசாதிராசர் எனக்கூறிக்கொண்டதைப் போல் இவனும் தன்னைக் கூறிக் கொண்டமை.
  3. இவனுக்கு பின் வந்த பல்லவர்களான விட்னுகோபன் சமுத்திரகுப்தனுடன் பொ.பி. 350ல் போரிட்டனர்.[8]

மூல நூல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. இவனின் பெயர் பப்பதேவன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பப்ப என்றால் வெளியிட்ட மன்னனின் தந்தை எனவே பொருள்ப்டும்
  2. மயிதவோலுப் பட்டயம்
  3. ஹிரதவல்லிப் பட்டயம்
  4. அசுவமேத யாகம் தன் ஆட்சிப்பகுதிக்கு சுற்றியுள்ள அரசர்களால் தான் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டமையின் அறிகுறியாகவே வெளியிட முடியும். இதை ஒருவன் சுற்றியுள்ளவர்களின் அனுமதி இன்றி செயதால் சுற்றியுள்ள அரசர்கள் அனைவரும் பொய்யாக வெளியிட்டவன் பேரில் போர் தொடுப்பர்.
  5. Vide Hera's Study in Pallavan History, p 11
  6. Dr. K.G. Palacharl's Ancient History of the Andhra country, pp 157 - 158
  7. D.Sircar's "Successors of the Satavahanas", pp 164-166, 247-248
  8. Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகந்தவர்மன்&oldid=3244755" இலிருந்து மீள்விக்கப்பட்டது