மல்லூர்பட்னா

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிற்றூர்

மல்லூர்பட்னா (Malurpatna) என்பது இந்தியாவின், கருநாடகத்தின், ராமநகரம் மாவட்டம், சென்னபட்டனம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

மல்லூர்பட்னா
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்இராமநகரம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
562160

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான இராமநகரத்திற்கு தெற்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னபட்டனத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான பெங்களூரில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மல்லூர்பட்னாவில் மொத்தம் 721 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகையானது 2958 ஆகும். அதில் ஆண்களின் எண்ணிக்கை 1446 என்றும், பெண்களின் எண்ணிக்கை 1512 என்றும் உள்ளது. கிராம மக்களின் கல்வி விகிதம் 57.0 % என உள்ளது.[1]

வரலாறு தொகு

இந்த ஊரானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மணலூர் என்ற தமிழ்பெ பெயரில் அழைக்கப்பட்டது. மணலூர் பட்டினம் என்கிற ஊர் பெயர் பின்னர் மருவி மல்லூர் பட்னா என்று இன்றைக்கு அழைக்கப்படுவதாக தெரிகின்றது. இது அக்காலத்தில் கங்க நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. சோழர் காலத்தில் கங்கநாடு சோழர்கலால் கைப்பற்றப்படபோது மணலூரும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டபகுதியாக ஆனது. சோழர் காலத்தில் அருமொழி ஈஸ்வரம் என்ற பெயரில் சிவன் கோயில் கட்டப்பட்டது. மேலும் இராசராச சோழன் காலத்தில் ஒரு பெருமாள் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. அந்தப் பெருமாளை ஜெயம் கொண்ட சோழ விண்ணகர் ஆழ்வார் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. இந்த பெருமாள் கோயில் ஊர் மக்களால் நாராயணசுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில்களில் இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் பல தமிழ்கல்வெட்டுகள் காணப்படுகின்றன.[2]

குறிப்புகள் தொகு

  1. "Malurpatna Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-25.
  2. "Log into Facebook". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-25. {{cite web}}: Cite uses generic title (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லூர்பட்னா&oldid=3800669" இலிருந்து மீள்விக்கப்பட்டது