மழவராயர்
மழவராயர் (Mazhavaraayas) எனப்படுவோர் மழநாட்டில் ஆட்சி செய்தவர்கள் ஆவர்.[1]
திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் கொள்ளிடத்திற்கு வடபால் மழநாடு என்னும் பகுதி இருந்தது. இது மேல் மழநாடு, கிழ் மழநாடு என்னும் இரண்டு பிரிவுகளை உடையது. மேல்மழ நாட்டிற்குத் திருத்தவத்துறை (லால்குடி) தலைநகராகவும், கீழ்மழ நாட்டுக்குத் திருமழபாடி தலை நகராகவும் இருந்தன. இதில் வாழும் அந்தணர்களுக்கு மழநாட்டுப் பீரகச் சரணத்தார் என்ற பெயர் வழங்கி வருகிறது. இந்த மழ நாட்டுத் தலைவர்களுக்கு மழவர், மழவராயர் என்ற பெயர்கள் உண்டு.[2] பண்டைக்காலத்தில் வாழ்ந்த மழவர், வாணர் முதலியோர்களை வென்றவர்களையும் மழவராயர், வாணராயர் எனப் பெயரிட்டு அழைத்தனர்.[3]
சோழர் மற்றும் பாண்டியர் ஆட்சியில் மழவராயர்
செம்பியன்மாதேவி என்பவர் சோழ மன்னன் சிவஞான கண்டராதித்தனின் பட்டத்து அரசி. இவர் சிற்றரசராக இருந்த மழவராயர் வம்சத்தை சார்ந்தவர். இவரால் அமைக்கப் பெற்ற பழம்பெரும் சிவாலயம் உள்ள ஊர் செம்பியன் மாதேவி என அழைக்கப்படுகிறது.[4]
பாண்டியர் ஆட்சியில் ஐய்யன் மழவராயர்[5][6],இராசாக்கள் நாயன் மழவராயர்[7], மாவலி வாணாதிராயர் குமாரர் சுந்நரத்தோளுடையாம் மழவராயர்[8], மாதவன் மழவராயர் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அரசவல்லிபுரப் பற்றை மாதவச் சதுர்வேதிமங்கலம் எனப் பெயர் மாற்றிப் பெருமாள் கோயிலில் பணிபுரியும் பட்டர்களுக்கு மழவராயர் எனும் பாண்டிய அரசனின் அதிகாரி வழங்கியுள்ளார். மாதவன் மழவராயர் கைக்கோளர் எனும் இனப் பிரிவைச் சார்ந்தவராகக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார். [9]
அரியலூர் பாளையக்காரர்கள்
அரியலூரைச் சேர்ந்த பாளையக்காரர்கள் ஆவர். இவர்கள் பள்ளி அல்லது வன்னியர் சாதியைச் சேர்ந்த படையாட்சியின் துணைப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.[10][11][12] இந்த பாளையக்காரர்களின் பெயர் நாயனார் ஆகும்.
அரியலூர் மழவராயர் குடியின் முன்னவர்களாக இராமநயினார், பூமி நயினார் என்னும் உடன் பிறந்தோர் இருவர் இருந்துள்ளனர். இவ்விருவரும் விசயநகரப் பேரரசில் கசபதி வம்சத்தின ரான திம்ம ராயரின் காலத்தில் அவர் துணையுடன், அரியலூர்ப் பகுதியை ஆண்டு வந்தனர். அரியலூரில் கோயில் கொண்டுள்ள ஒப்பில்லாத அம்மனின் அருளால், இராமநயினாரின் கால்வழியி னர், “குன்றை ஒப்பிலாத மழவராயர்” என்னும் பட் டத்தினைப் புனைந்து கொண்டனர். இம்மரபினைச் சேர்ந்த எட்டாவது மன்னர் அரங்கப்ப ஒப்பிலாத மழவராயர்.[1]
1735 ஆம் ஆண்டில், அரியலூரைச் சேர்ந்த ரங்கப்பா மழவராயர், ஒரு தேவாலயத்திற்கு 175 ஏக்கர் (71 ஹெக்டேர்) நிலத்தை வழங்கினார்.[13] கி. பி.1808 இல் மழவராயர் கள் அரியலூரில் ஆலந்துறையார் கோயில், சீனிவாசப் பெருமாள் கோயில் திருப்பணி செய்துள்ளனர். மழவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சீனிவாசப் பெருமாள் கோயிலில் கவின்மிகு தியான தசாவதாரச் சிற்பங்கள் உள்ளன..[14]
புனவாசல் பாளையக்காரர்கள்
புனவாசல் ஜமீன் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இது மழவராய பண்டாரத்தார் என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்ட ஒரு ஜமீன் ஆகும். 1879 ஆண்டில் 2527 ஏக்கர் பரப்பளவோடு இருந்த ஜமீன், அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 350 ரூபாய் 15 அணா 7 பைசா ஆகும்.[15][16][17]
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பட்டு மழவராயர் எனும் கள்ளர் குழுத்தலைவன் வாழ்ந்ததாகவும் அவரால் கோட்டைக் கட்டப்பட்டதாகவும் தஞ்சை அரசுப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. [4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 1. 2006. pp. [752].
- ↑ திருமங்கலம் கோயில் வரலாறு. 1955. pp. [6].
- ↑ Gyan Parampara Vol. 6. 2006. pp. [147].
- ↑ 4.0 4.1 சோழ நாட்டின் ஊர்-பெயர். 2020. pp. [26].
- ↑ திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் முதல் தொகுதி. 2005. pp. [1].
{{cite book}}
: Text "https://archive.org/details/digital.assets.thiruNelveeli_maavaddak_kalveddukaL_muthal_thokuthi/page/n13/mode/2up" ignored (help) - ↑ மதுரை மாவட்டக் கல்வெட்டுகள். 2005. pp. [276].
{{cite book}}
: Text "uhttps://archive.org/details/digital.assets.mathurai_maavaddak_kalveddukaL3/page/276/mode/2up" ignored (help) - ↑ பாபநாசம் வட்டக் கல்வெட்டுகள். 2004. pp. [59].
{{cite book}}
: Text "https://archive.org/details/digital.assets.paapaNaacham_vaddak_kalveddukaL/page/59/mode/2up" ignored (help) - ↑ Al̲akar kōyil. 1989. pp. [132].
- ↑ Avanam Journal Collections. 20150. pp. [73].
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ Hemingway, F. R,p.344 (1907). Madras District Gazetteers,Trichinopoly Vol. 1.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ Taylor,William,p. 165 (1835). Oriental Historical Manuscripts Vol.2.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ W.Francis,p.192 (2002). Gazetteer of South India, Volume 2.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ S. Jeyaseela Stephen (2008). Caste, Catholic Christianity, and the Language of Conversion: Social Change and Cultural Translation in Tamil Country, 1519-1774.
- ↑ வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 15. 2009. pp. [552].
- ↑ கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. pp. 91.
- ↑ தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி). 1989. pp. [552].
- ↑ தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும குறிப்புரையும் (முதல் தொகுதி). 1989. pp. [159].