மாங்கனீசு(III) அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

மாங்கனீசு(III) அசிட்டேட்டு (Manganese(III) acetate) என்பது Mn(O2CCH3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசின் அசிட்டேட்டு உப்பான இக்குடும்பத்தை ஒருங்கிணைவு அணைவுச் சேர்மங்களின் குடும்பம் என்றும் வகைப்படுத்தலாம். இவை அனைத்தும் பழுப்பு நிறத்தில் திண்மங்களாக காணப்படுகின்றன. அசிட்டிக் அமிலம் நீர் போன்ற கரைப்பான்களில் இவை கரைகின்றன. கரிம வேதியியல் வினைகளில் பொதுவாக இவை ஆக்சிசனேற்றும் முகவர்களாக பயன்படுகின்றன [1].மாங்கனீசு டிரையசிட்டேட்டு இருநீரேற்று; மாங்கனீசு(III) அசிட்டேட்டு இருநீரேற்று, மாங்கனிக்கு அசிட்டேட்டு போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.

மாங்கனீசு டிரையசிட்டேட்டு
Manganese triacetate
Mn3O(OAc)6.png
Manganese(III) acetate dihydrate CAS 19513-05-4.jpg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு டிரையசிட்டேட்டு
வேறு பெயர்கள்
மாங்கனீசு டிரையசிட்டேட்டு இருநீரேற்று; மாங்கனீசு(III) அசிட்டேட்டு இரு நீரேற்று, மாங்கனிக்கு அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
19513-05-4 (இருநீரேற்று) Yes check.svgY[scifinder]
26935-72-8 (HMn3O(OAc)8 polymer) Yes check.svgY
993-02-2 (நீரிலி) Yes check.svgY
ChemSpider 141084 Yes check.svgY
InChI
  • InChI=1S/3C2H4O2.Mn/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3 Yes check.svgY
    Key: AHSBSUVHXDIAEY-UHFFFAOYSA-K Yes check.svgY
  • InChI=1/3C2H4O2.Mn/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3
    Key: AHSBSUVHXDIAEY-DFZHHIFOAL
யேமல் -3D படிமங்கள் Image
Image

அணைவுச் சேர்மம்

பப்கெம் 160554
SMILES
  • [Mn+3].O=C([O-])C.[O-]C(=O)C.[O-]C(=O)C
  • o1c(C)[o+][Mn-3]6(O23)([OH2+])([o+]c(C)o4)[o+]c(C)o[Mn-3]24([OH2+])([o+]c(C)o5)[o+]c(C)o[Mn-3]135([OH2+])[o+]c(C)o6 அணைவுச் சேர்மம்
பண்புகள்
C6H9MnO6•2H2O
வாய்ப்பாட்டு எடை 268.13 கி/மோல் (இருநீரேற்று)
தோற்றம் பழுப்பு தூள்
அடர்த்தி 1.049 கி.செ,மீ−3, நீர்மம்; 1.266 கி.செ.மீ−3, திண்மம்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R36/37/38, R62, R63
S-சொற்றொடர்கள் S26, S37/39
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கட்டமைப்புதொகு

Mn (O 2 CCH 3 ) 3 மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய சேர்மங்கள் சரிபார்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக மாங்கனீசு(III) அசிடேட்டு அடிப்படை குரோமியம் அசிடேட்டு மற்றும் அடிப்படை இரும்பு அசிடேட்டு ஆகியவற்றை நினைவூட்டும் வகையிலான கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இந்த காரணத்திற்காக, மாங்கனீசு(III) அசிடேட்டு சில நேரங்களில் அடிப்படை மாங்கனீசு அசிடேட்டு என குறிப்பிடப்படுகிறது. [Mn3O(O2CCH3)6Ln]X என்பது மூலக்கூற்று வாய்ப்பாடாகும். இதிலுள்ள L என்பது ஈந்தனைவியையும் X என்பது எதிர்மின் அயனியையும் குறிக்கிறது. ஒருங்கிணைவுப் பலபடியான [Mn3O(O2CCH3)6]O2CCH3.HO2CCH3 சேர்மமும் படிகமாக்கப்படுகிறது [2].

தயாரிப்புதொகு

மாங்கனீசு(III) அசிடேட்டு பொதுவாக இருநீரேற்றாகப் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் சில சூழ்நிலைகளில் நீரிலி வடிவமும் பயன்படுத்தப்படுகிறது. அசிட்டிக் அமிலத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு மற்றும் மாங்கனீசு(II) அசிடேட்டு ஆகியவற்றை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் மாங்கனீசு(III)அசிட்டேட்டு இருநீரேற்று தயாரிக்கப்படுகிறது [3]. அசிட்டிக் நீரிலியை வினைக்குள் சேர்ப்பது நீரிலி வடிவத்தை உருவாக்குகிறது [1][2]. இது Mn (OAc) 2 இலிருந்து தொடங்கி மின் வேதியியல் முறையிலும் தயாரிக்கப்படுகிறது [4].

பயன்கள்தொகு

மாங்கனீசு டிரையசிட்டேட்டு ஒற்றை எலக்ட்ரான் ஆக்சிஜனேற்றியாக பயன்படுத்தப்படுகிறது . லாக்டோன்களை உருவாக்குவதற்காக இதனுடன் அசிட்டிக் அமிலத்தை சேர்ப்பதன் மூலம் ஆல்கீன்களை ஆக்சிசனேற்ற முடியும் [3].

 

இந்த செயல்முறை • CH 2 CO 2 H என்ற இயங்குறுப்பு இடைநிலை உருவாக்கம் வழியாக தொடரும் என்று கருதப்படுகிறது, பின்னர் அது ஆல்க்கீனுடன் வினைபுரிகிறது, அதன்பிறகு கூடுதல் ஆக்சிசனேற்றப் படிகள் மற்றும் இறுதியாக வளையம் மூடல் வினை நிகழ்கிறது [1]. ஆல்க்கீன் சமச்சீராக இல்லாதபோது, முக்கியத் தயாரிப்புப் பொருள் ஆல்க்கீனின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகிறது. மேலும் ஆரம்ப நிலையான இயங்குறுப்பு உருவாக்கத்தில் உறுதியாக (ஆல்க்கீனின் இரண்டு கார்பன்களில்) ஒத்துப்போகிறது, . அதன்பிறகு நிலையான இடைநிலையின் மீது வளையம் மூடல் தொடர்கிறது [5]. ஈனோன்களுடன் வினைபுரியும் போது அடுத்த பக்கத்திலுள்ள கார்பனைலின் கார்பன் ஆல்க்கீன் பகுதியுடன் வினைபுரிகிறது. இது α'- அசிட்டாக்சி ஈனோன் தோன்ற வழிவகுத்தது [6]. இந்த செயல்பாட்டில் கார்போனைலுக்கு அடுத்த கார்பன், மாங்கனீசால் ஆக்சிசனேற்றப்படுகிறது, அதன்பிறகு அசிடேட்டு மாங்கனீசிலிருந்து அதற்கு மாற்றப்படுகிறது [7]. இது α கார்பனில் அதேபோல β- கீட்டோ எசுத்தர்களை ஆக்சிசனேற்ற முடியும், மேலும் இந்த இடைநிலை ஆலைடுகள் மற்றும் ஆல்க்கீன்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளுடன் வினைபுரிய இயலும். கீட்டோ எசுத்தரின் வளையமாக்கல் மூலக்கூற்றின் பகுதி ஒரே கட்டமைப்பில் வேறு எங்கும் ஒரு ஆல்க்கீனுடன் வளையமாவது இந்த முறையின் நீட்சியாகும் [8].

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Snider, Barry B. (2001). "Manganese(III) Acetate". Encyclopedia of Reagents for Organic Synthesis. Wiley. DOI:10.1002/047084289X.rm018. 
  2. 2.0 2.1 Hessel, L. W.; Romers, C. (1969). "The Crystal Structure of “Anhydrous Manganic Acetate"". Recueil des Travaux Chimiques des Pays-Bas 88: 545-552. doi:10.1002/recl.19690880505. 
  3. 3.0 3.1 E. I. Heiba, R. M. Dessau, A. L. Williams, P. G. Rodewald (1983). "Substituted γ-butyrolactones From Carboxylic Acids And Olefins: γ-(n-octyl)-γ-butyrolactone". Org. Synth. 61: 22. doi:10.15227/orgsyn.061.0022. 
  4. Yılmaz, M.; Yılmaz, E. V. B.; Pekel, A. T. (2011). "Radical Cyclization of Fluorinated 1,3-Dicarbonyl Compounds with Dienes Using Manganese(III) Acetate and Synthesis of Fluoroacylated 4,5-Dihydrofurans". Helv. Chim. Acta 94 (11): 2027–2038. doi:10.1002/hlca.201100105. 
  5. Fristad, W. E.; Peterson, J. R. (1985). "Manganese(III)-mediated γ-lactone annulation". J. Org. Chem. 50 (1): 10–18. doi:10.1021/jo00201a003. 
  6. Dunlap, Norma K.; Sabol, Mark R.; Watt, David S. (1984). "Oxidation of enones to α'-acetoxyenones using manganese triacetate". Tetrahedron Letters 25: 5839–5842. doi:10.1016/S0040-4039(01)81699-3. 
  7. Williams, G. J.; Hunter, N. R. (1976). "Situselective α'-acetoxylationof some α,β-enones by manganic acetate oxidation". Can. J. Chem. 54 (24): 3830–3832. doi:10.1139/v76-550. 
  8. Snider, B. B.; Patricia, J. J.; Kates, S. A. (1988). "Mechanism of manganese(III)-based oxidation of β-keto esters". J. Org. Chem. 53: 2137–2141. doi:10.1021/jo00245a001.