மாணிக்காபுரம்
மாணிக்காபுரம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு ஊராட்சியாகும்[4]. இக்கிராமம் தொன்மையான நதிக்கரை நாகரிகங்களில் ஒன்றான கொடுமணல் நாகரிகத்தைக் கொண்டிருக்கும் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
மாணிக்காபுரம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மாணிக்காபுரம் குளம்
தொகுநொய்யல் ஆற்றில், காசிபாளையம் தடுப்பணையில் இருந்து, ஆறு கிலோ மீட்டர் நீளமுள்ள அகலமான ஓடை வழியாக இக்குளத்துக்குத் தண்ணீர் வருகிறது. 120 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளமாக, இது உள்ளது. 8.9 மில்லியன் கன அடி நீர் தேங்கும் கொள்ளளவு கொண்டது; 6,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இக்குளத்துக்கு, நொய்யல் ஆற்றில் இருந்து தண்ணீர் பிரித்து அனுப்பும் தடுப்பணை, சாயக்கழிவு நீர் பிரச்னை காரணமாக, இரண்டு இடங்களில் உடைக்கப்பட்டது. இதனால், பல ஆண்டுகளாகக் குளத்துக்குத் தண்ணீர் வராமல் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-03-01.