மாதுலுவாவே சோபித்த தேரர்

மாதுலுவாவே சோபித்த தேரர் (Maduluwawe Sobitha Thero, சிங்களம்: මාදුළුවාවේ සෝභිත හිමි; 29 மே 1942 - 8 நவம்பர் 2015) சிங்கள பௌத்த பிக்கு ஆவார். இவர் இலங்கை கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.[1][2][3][4]


மாதுலுவாவே சோபித்த தேரர்
Maduluwawe Sobitha Thero
வண. மாதுலுவாவே சோபித்த தேரர் (2015)
பதவிகோட்டே நாக விகாரையின் விகாராதிபதி
சுய தரவுகள்
பிறப்பு
பத்திர தேவாகே இரத்தினசேகரா

(1942-05-29)29 மே 1942
பாதுக்கை, இலங்கை
இறப்பு8 நவம்பர் 2015(2015-11-08) (அகவை 73)
சமயம்பௌத்தம்
தேசியம்இலங்கையர்
பெற்றோர்(s)பத்திர தேவாகே அப்புகாமி,
கரலினகாமி
பாடசாலைதேரவாத பௌத்தம்
தர்மா பெயர்(கள்)வண. மாதுலுவாவே சோபித்த தேரர்
கோயில்நாக விகாரை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை

2015 சனவரியில் மகிந்த ராசபக்ச அரசைப் பதவியில் இருந்து அகற்ற இவர் முக்கிய பங்காற்றினார். 2015 சனவரி அரசுத் தலைவர் தேர்தலில் ராசபக்சவிற்கு எதிராக எதிரணிக் கூட்டு வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

சோபித தேரர் தனது 13வது அகவையில் பௌத்த விகாரை வாழ்வைத் தொடங்கினார்.[5] 1962 ஆம் ஆண்டில் பௌத்த குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[5]

மறைவு தொகு

சுகவீனம் காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சோபித்த தேரர் 2015 நவம்பர் 8 அன்று காலமானார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Raine Wickrematunge (21 May 2013). And Then They Came for Me: The Lasantha Wickrematunge Story. AuthorHouse. பக். 182–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4817-8991-2. http://books.google.com/books?id=NEVJWr8Vpz0C&pg=PA182. 
  2. "Sobhitha Thero suspects moves to stop him". BBC. 7 October 2010. http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/10/101007_sobhitha.shtml. பார்த்த நாள்: 23 August 2014. 
  3. "I’m prepared to be the common candidate at presidential election – says Ven. Maduluwawe Sobitha Thero". lankafirst.lk இம் மூலத்தில் இருந்து 23 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140823234605/http://newsfirst.lk/english/2014/06/prepared-common-candidate-presidential-election-ven-maduluwawe-sobitha-thero/40749. பார்த்த நாள்: 23 August 2014. 
  4. T. D. S. A. Dissanayaka (1994). The politics of Sri Lanka. Swastika (Private) Ltd.. பக். 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-955-572-001-4. http://books.google.com/books?id=x2VuAAAAMAAJ. 
  5. 5.0 5.1 "People’s monk dead". 9 நவம்பர் 2015. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=135005. பார்த்த நாள்: 9 நவம்பர் 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Ven. ​Maduluwawe Sobhitha Thera passes away". டெய்லி மிரர். 8 நவம்பர் 2015. http://www.dailymirror.lk/94421/ven-maduluwawe-sobhitha-thera-passes-way. பார்த்த நாள்: 8 நவம்பர் 2015.