மாதோகர் கோட்டை, அரியானா
மாதோகர் கோட்டை (Madhogarh Fort) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தின் மகேந்திரகர் மாவட்டத்திலுள்ள மாதோகர் கிராமத்திற்கு அருகில், ஆரவல்லி மலைத்தொடரிலுள்ள மாதோகர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். [1] மகேந்திரகரிலிருந்து இது 12 கிலோமீட்டர்கள் (7.5 mi) தொலைவில் அமைந்துள்ளது மகேந்திரகரில் இருந்து, சத்னாலி சௌக் வழியாக அல்லது மகேந்திரகர்- சத்னாலி- லோகாரு சாலை வழியாக அடையலாம்.
மாதோகர் கோட்டை | |
---|---|
உள்ளூர் பெயர் माधोगढ़ का किला | |
அமைவிடம் | அரியானாவில் மாதோகர் கோட்டையின் அமைவிடம் |
ஆள்கூற்றுகள் | 28°17′52″N 76°1′59″E / 28.29778°N 76.03306°E |
கட்டப்பட்டது | 18ஆம் நூற்றான்டின் முதல்பாதி |
க்காக கட்டப்பட்டது | முதலாம் மாதோ சிங் |
கட்டிட முறை | இந்துக் கட்டிடக்கலை |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
மாதோகர் கிராமத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்வமுள்ள பல பழைய அவேலிகள் உள்ளன. இது செகாவதி அவேலிகளின் பாணியில் உள்ளூர் இந்து கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.
வரலாறு
தொகு18 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், பல்வந்த் சிங் என்பவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் இப்பகுதியை வைத்திருந்தபோது, முதலாம் மாதோ சிங் என்பவரால் இது நிறுவப்பட்டது. கோட்டைக்கு "மாதோகர்" என பெயரிடப்பட்டது; "மாதோகர்" என்றால் "மாதோவின் கோட்டை" என்று பொருள். 1755 ஆம் ஆண்டில், சுதந்திர முகலாயத் தலைவரான இஸ்மாயில் பேக்கைத் தாக்கியபோது, இந்தூர் மகாராஜா கந்தே ராவ் ஓல்கரின் கீழ் இந்த பகுதி இராஜபுத்திரர்களிடமிருந்து மராட்டியப் பேரரசுக்குச் சென்றது.[2]
சுற்றுலா அம்சம்
தொகுசுற்றுலா செல்பவர்களுக்கு இது மிகவும் முக்கிய இடமாகும். மழை மற்றும் குளிர்காலத்தில் இங்கு செல்வது நல்லது. பனிமூட்டத்தின் போது உள்ளூர் மக்களால் "சிறிய முசோரி" என்றும் அழைக்கப்படுகிறது. புஜூர்க் மக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்த கோட்டை கி.பி 16-17 இல் கட்டப்பட்டது எனவும், சுவாய் மாதோ சிங் என்பவர் செய்ப்பூருக்கும் தில்லிக்கும் இடையில் ஓய்வெடுக்க இக்கோட்டையைக் கட்டினார் எனவும் அறியப்படுகிறது. மேலும் அவரது பெயரில் கிராமத்திற்கு மாதோகத் என்றும் பெயரிடப்பட்டது. அந்த காலத்தில் தில்லிக்கும் செய்ப்பூருக்கும் இடையில் மாதோகத் வர்த்தக மையமாக வலுவாக இருந்தது. மலைக்கு கீழே பனியாக்கள் (தொழில் செய்பவர்கள்) மூலம் கட்டப்பட்ட பல அவேலிகள் இன்றும் உள்ளன. இங்கு "ஜல்பாரி" என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
கட்டிடக்கலை
தொகுஇந்த கோட்டை அரியானாவில் உள்ள ஒரு சில மலைக்கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும். கட்டிடக்கலை இந்து இராஜபுத்திர கட்டிடக் கலையைச் சேர்ந்தது.
மலைகளில் உள்ள பாறைகளை வெட்டியதன் மூலம் படிக்கட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே கோட்டையை அணுகுவது கடினம். [3] இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: மலையின் உச்சியில் ஒரு மேல் பகுதி, ஒரு பாழடைந்த பிரதான அமைப்பு மற்றும் மலையின் உச்சிக்கு கீழே ஒரு சிறிய பகுதி. கோட்டையானது மலையைச் சுற்றி உயரமான மற்றும் அடர்த்தியான சுவரால் சூழப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றி பல கொத்தளங்கள் உள்ளன. கோட்டையின் பகுதிகளுக்கு கீழே, தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. மேல் வளாகத்தில் தண்ணீர் தொட்டியுடன் இணைக்கப்பட்டதாகத் தோன்றும் சில அறைகள் உள்ளன.
பாதுகாப்பு மற்றும் மேலும் மேம்பாடு
தொகுஅரியானா அரசு மாதோகர் கோட்டையை ஒருங்கிணைத்து ஒரு ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. [4] [5] [6] சுற்றுலாப் பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில், மகேந்திரகர் கோட்டை மற்றும் மாதோகர் கோட்டை ஆகிய இரண்டும் பிஞ்சூர் தோட்டத்தின் வரிசையில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 100 கோடி ரூபாயில் திட்டத்தில் ரூ 30 கோடி 2018-19 நிதியாண்டில் மாதோகர் கோட்டைக்காக ஏற்கனவே வெளியிடப்பட்டது. [7]
பிரபலமான கலாச்சாரத்தில்
தொகுஇதன் அழகிய இடத்தின் காரணமாக, இந்தியப் பின்னணிப் பாடகர் உதித் நாராயணின் மகன் ஆதித்ய நாராயண் பாடிய பிரபலமான பாடலான "ஜிட் பிட் கிட் பிட்" ,கவுன் கிட்னே பானி மே மற்றும் ஜல்பாரி: தி டெசர்ட் மெர்மெய்ட் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டன.
சான்றுகள்
தொகு- ↑ "Gazetteer of Mahandragarh 1988" (PDF). Haryana Revenue Department. Archived from the original (PDF) on 11 November 2014. பார்க்கப்பட்ட நாள் 12 Nov 2014.
- ↑ RBS Visitors Guide India - Rajasthan: Rajasthan Travel guide. Data and Expo India Pvt. Ltd.
- ↑ Sohan Singh Khattar and Reena Kar, 2021, Know Your State Haryana, Arihant Publications, pp 308.
- ↑ Haryana to develop new tourist spots
- ↑ "Convention facilities to be set up". Archived from the original on 11 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ Haryana govt to give a boost to tourism
- ↑ No dearth of fund to develop tourism, UNI India, 8 Dec 2018.