மனிதர்

இருகால் பாலூட்டி
(மாந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மனிதர்[1]
புதைப்படிவ காலம்:.2–0 Ma
Pleistocene - Recent
மனிதர்கள் பயனீர் பிளேக் சித்தரிக்கப்பட்டுள்ளன
Not rated
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Hominidae
பேரினம்:
Homo (genus)
இனம்:
H. sapiens
துணையினம்:
H. s. sapiens
முச்சொற் பெயரீடு
Homo sapiens sapiens
L, 1758

மனித இனம் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தை சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படித் தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்குமுன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு (abstract reasoning), மொழி (Language), உண்முக ஆய்வு, பிரச்சனைகளைத் தீர்த்தல் (Problem Solving), உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனித இனம், வேறெந்த உயிரினங்களைவிடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். மனிதர்கள் உலகம் முழுவதும் பரந்து உள்ளனர். அன்டார்க்டிக்கா தவிர்த்த ஏனைய எல்லாக் கண்டங்களிலும் மனிதர் பெருந்தொகையாக வாழ்கின்றனர். ஜூலை 2008 நிலைப்படி, 6.7 பில்லியனுக்கு மேற்பட்ட தொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். மொத்தமாக ஏழு பில்லியன் சனத்தொகையுடன் மனித இனம் இவ்வுலகில் வாழும் மிகப்பெரிய பாலூட்டி இனங்களுக்குள் ஒன்றாகத் திகழ்கின்றது. மனித இனத்தின் மிகப்பெரிய அளவிலான சனத்தொகை ஆசியாவிலும் (61 %),மீதி சனத்தொகை அமெரிக்கா (14 %),ஆபிரிக்கா (14 %),ஐரோப்பா (11 %) மற்றும் ஓசியானியா (0 .5 %) போன்ற கண்டங்களிலும் வாழ்கின்றனர். மனிதரில், ஹோமோ சேப்பியென்சு சேப்பியெசு எனும் ஒரு துணையினம் மட்டுமே உள்ளது.

பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களைப் போலவே, மனிதனும் ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புகள் அடங்குகின்றன. மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.

சொல்லிலக்கணமும் விளக்கமும்

தொகு

மன் என்பதற்குத் தமிழில் நிலைத்த என்பது பொருளாகும். வடமொழியும் இதே பொருளில் மனுஷ் என்று மனித இனத்தைச் சுட்டிற்று. பூமியை ஆளப் பிறந்தவர்கள் என்பது பின்னாளில் விளக்கப் பொருளாயிற்று. மன் என்பதிலிருந்தே மன்னன் என்னும் சொல்லும் தோன்றிற்று. மனிதர்களை ஆள்பவன் மன்னன் என்பதன் விரிவே அது. ஆங்கிலத்திலும் இவ்வாறே மன் என்பது மேன் என்று ஆயிற்று. ஆக, உலக மொழிகளில் பலவற்றில் இந்த உட்கூற்றுடனே மனிதனைக் குறித்த சொற்கள் தோற்றம் பெற்றன.

தனது தகவல்களையும், கருத்துக்களையும் பேச்சு (மற்றும் எழுத்து ) மூலம் வெளிப்படுத்தும் மனித ஆற்றலானது மற்றய உயிரினங்களுடன் ஒப்பிட முடியாத ஒன்றாகும். மற்றய விலங்கினங்களின் மூடிய குறி அமைப்புகளை போலல்லாமல் மனிதர்களின் மொழி திறந்த அமைப்புடையது அத்துடன் குறிப்பிட்ட அளவு ஒலிகளையும் சொற்களையும் கொண்டு முடிவற்ற எண்ணிக்கையான அர்த்தங்களை உருவாக்கும் வல்லமை படைத்தது.

வாழ்விடமும் சனத்தொகையும்

தொகு

ஆதி மனிதக் குடியிருப்புகள் நீர் எவ்வளவு அருகாமையில் இருக்கின்றது என்பதை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டன. அத்துடன் வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை வளங்கள், பயிரிடுவதற்கான ஏற்ற நிலம், கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற சூழல் என்பனவற்றோடு வேட்டையாடுவதற்கு தகுந்த விலங்கு பல்வகைமை கொண்ட சூழல் என்பனவும் கருத்தில் கொள்ளப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தனது வாழ்க்கை முறைகளை நீர்ப்பாசனம், கட்டுமானம், போக்குவரத்து, பண்டங்கள் உற்பத்தி, காடழிப்பு என்பனவற்றின் மூலம் மனிதன் புவியை மாற்றும் வல்லமை படைத்தவன். இவ்வாறான திட்டமிட்ட மாற்றங்கள் வெப்பநிலைக்கு ஏற்றவாறு தனது உறைவிடம் மற்றும் ஆடைகளை மேம்படுத்தல், கைஇருப்பில் இருக்கும் உணவின் அளவை அதிகரித்தல், வளங்களையும் மற்றும் அருகாமையில் உள்ள குடியிப்புகளையும் இலகுவாக அணுகுதல் போன்ற குறிக்கோள்கள்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.

பெரிய அளவிலான வர்த்தக மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் வருகையால் வளங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என்ற தேவை குறையத் தொடங்கியதுடன் பல இடங்களில் இந்தக் காரணி சனத்தொகையின் வளர்ச்சிக்கோ, வீழ்ச்சிக்கோ இனிமேலும் பின்னாலிருக்கும் சக்தியாக இல்லாமல் போனது. ஆயினும் ஒரு மனித நடைமுறை மாறும்போது அதுவே சனத்தொகை மாற்றதிற்கு முக்கிய காரணியாக அமைந்தது.

தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை எல்லா கண்டங்களிலும் குடியேற வழிவகுத்ததுடன் எல்லாத் தட்பவெட்ட நிலைகளுக்கும் ஏற்ப அவனை மாற்றிக்கொள்ளுவதற்கு உதவியது. இறுதி நூற்றாண்டுக்குள் மனிதர்கள் பாரிய குடியேற்றங்கள் சாத்தியமில்லாத போதிலும், அண்டார்ட்டிக்கா, பெருங்கடல் ஆழங்கள் மற்றும் விண்வெளி போன்றவற்றை ஆராய்ந்துள்ளனர்.

அண்டார்டிகா மற்றும் விண்வெளி போன்ற இடங்களில் மனிதனின் வாழ்வது மிகவும் பணச்செலவு மிக்கதும் குறிப்பிட்ட காலவரையரைக்கும் உட்பட்டதாகும். தற்போது இவ்விடங்கள் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டும் உபயோகிக்கப்படுகிறது.1969க்கும் 1972க்கும் இடையில் இரண்டு மனிதர்கள் ஒரே தடவையில் நிலவில் குறிப்பிட்ட நேரத்தை செலவழித்துள்ளனர். அன்றிலிருந்து ஆடி 2012 வரை எந்த மனிதனும் எந்த ஒரு இயற்கையான விண்வெளி உடலிலும் கால்தடம் பதிக்கவில்லை. இருப்பினும் 2000 மாம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினால் குறிப்பிட்ட அளவு மனித நடமாட்டம் விண்வெளியில் காணப்படுகிறது. அத்துடன் மனிதனினால் உருவாக்கப்பட்ட சில விண்வெளி ஓடங்கள் குறிப்பான சில விண்வெளி உடல்களுக்கு பயணம் செய்துள்ளன.

1800 ஆம் ஆண்டளவில் ஒரு பில்லியனிலிருந்த மனித சனத்தொகை தற்போது எழு பில்லியனை கடந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உலக சனத்தொகையின் 39 .7 % மக்கள் நகர்புறங்களை அண்டி வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டது. இந்த அளவு 21 ஆம் நூற்றாண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

வரலாறு

தொகு
 
அழிந்துபோன ஓமினிட்டுகள்.

ஆப்பிரிக்காவில் ஓமோ (Homo) என்ற பேரினமானது ஹோமினின் என்ற இனக்குழுவிலிருந்து பிரிந்து தோன்றியதாகும்.மனித இனமானது ஒமினிட்டுகள் (Hominids) (பெரும் மனிதக்குரங்கு) வழி வந்த சிம்பன்சி பரம்பரையிலிருந்து தோன்றிய உயர் இனமாகும். ஹோமோ செப்பைன்ஸ் என அழைக்கப்படும் தற்கால மனிதர்கள் குழுக்களாக வாழும் அளவிற்கு முன்னேறி கண்டங்களிலும் பெருந்தீவுகளிலும் வாழ்ந்தனர். பின்னர் 125,000–60,000 ஆண்டுகளுக்கு முன் யுரேசியா வை வந்தடைந்தனர்[2][3]. பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னரும், அமெரிக்காவுக்கு 15,000 ஆண்டுகளுக்கு முன்னரும், தூரத்து தீவுகளுான ஹவாய், ஈஸ்டர் தீவுகள், மடகாசுகர், மற்றும் நியூசிலாந்துக்கு 300 முதல் 1280 ஆண்டுகளுக்கு முன்னரும் குடியமர்ந்தனர்[4][5].

மனிதப்பரிணாமம் (ஆங்கிலம்:Human Evolution) எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஒரு உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக ஓமோ (Homo) பேரினத்தின் கூர்ப்பு வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது ஒமினிட்டுகளின் (Hominids) ஒரு இனமாக ஓமோ சப்பியென்சுகளின் (Homo Sapiens) தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதப்பரிணாமம் குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் இயற்பிய மானிடவியல், உயர்விலங்கினவியல், தொல்லியல், மொழியியல், கருவியல், மரபியல் என்பன அடங்குகின்றன.[6]

 
ஓமினோய்டுகள் பொது மூதாதையொன்றின் வழிவந்தவை.

உயிரியல்

தொகு

உளவியல்

தொகு

மனித மைய நரம்பு மண்டலத்தின் முக்கியமான மைய பகுதியாக மனித மூளை செயற்படுவதுடன் மொத்த சுற்று நரம்பு மண்டலத்தையும் கட்டுப்படுத்தும் உறுப்பாக செயற்படுகிறது. மனித மூளையானது சுவாசம்,உணவு சமிபாடு போன்ற எண்ணாமல் தானாக நிகழ்கிற நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கு மேலதிகமாக நினைவுகள், பகுத்தறிவு மற்றும் கற்பனைவாதம் போன்ற மேம்பட்ட சிக்கலான நிகழ்வுகளையும் ஆள்கிறது.இவ்வகையான புலனுணர்வுகள் மனம் எனும் எண்ணக்கருவை உருவாக்குவதுடன் இதன் நடத்தை ரீதியான விளைவுகள் உளவியல் துறையில் விரிவாக ஆராயப்பட்டும் படிக்கப்பட்டும் வருகின்றன.

பொதுவாக இவ்வகையான சிக்கலான நடவடிக்கைகளை கையாளக்கூடிய ஆற்றல் கொண்ட மனித மூளை இதுவரை அறியப்பட்ட விலங்குகளிலேயே அதிக நுண்ணறிவு ஆற்றல் கொண்டதாக உள்ளது .இவ்வுலகில் உள்ள ஏனைய சில விலங்குகளாலும் அவைகளின் உள்ளுணர்வு மற்றும் விகடம் என்பவற்றைக் கொண்டு எளிய கட்டமைப்புகள் ,கருவிகள் பொன்றவற்றை உருவாக்க முடிந்தாலும் .மனிதனின் இம்மூளை கட்டமைப்பானது எல்லாவற்றிலும் மிக பரந்ததாகவும் மிக சிக்கலானதாகவும் கருதப்படுகிறது .அத்துடன் இது காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக மேம்பட்ட மாற்றங்களை அடைந்து வருகிறது.

உறக்கமும் கனவுகளும்

தொகு

மனிதர்கள் வழமையாக பகலில் அவர்களது நாளாந்த செயல்பாடுகளையும் இரவில் உறங்குதல் எனும் செயற்பாட்டையும் மேட்கொள்கின்றனர். ஒரு வயதுக்கு வந்த மனிதன் சராசரியாக எழு தொடக்கம் ஒன்பது மணித்தியாலங்களும் ஒரு குழந்தை சராசரியாக ஒன்பது தொடக்கம் பத்து மணித்தியாலங்களும் தூங்க வேண்டும். இருப்பினும் இச்சராசரி தூக்கத்தை விட குறைந்த அளவு தூக்கத்தை பெறுவது பல மனிதர்களிடையே வழமையாக காணப்படுகிறது. இவ்வாறு தேவையான உறக்கத்தை பெறாமல் இருப்பது உடல் சுகாதாரதிற்கு உகந்ததல்ல. தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மனித உறக்கத்தை நான்கு மணித்தியாலங்கள் கட்டுப்படுத்துவது மனிதர்களுக்கு குறைவான நினைவாற்றல், உடல் அசௌகரியம் போன்ற உடலியல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தின் போது கனவுகள் ஏற்படுகின்றது. கனவுகளின் போது மனிதர்கள் தொடர்ச்சியான புலன்கள் சார்ந்த படங்கள் மற்றும் ஒலிகளை அனுபவிக்கிறார்கள். அத்துடன் கனவு காணும் நபர் கனவை அவதானிப்பவர் என்பதை விட அக்கனவில் தானும் ஒரு கதாபாத்திரமாக (உண்மையில் நடப்பது போன்று)உணருவர். கனவுகள் அனேகமாக துரித கண் இயக்கத் தறுவாய்( REM phase of sleep) தூக்கத்தின் போது ஏற்படுகின்றது, அத்துடன் இவை மனித மூளையின் தண்டில் உள்ள போன்ஸ் எனும் அமைப்பினால் தூண்டப்படுகின்றன.

கலாச்சாரம்

தொகு

மனிதர்கள் பெரிய சிக்கலான சமூக குழுக்களாக வாழ முனைகின்றனர். ஏனைய எல்லா விலங்குகளையும் விட ,மனிதர்கள் சுய வெளிப்பாடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து பரிமாறவும், சிந்தனைகளை வெளிப்படுத்துவதுடன் குழுவாக இணைந்து செயற்படவும் நிபுணத்துவம் பெற்றுள்ளதால் ஒத்துழைப்பு மற்றும் போட்டியிடும் குழுக்கள் கொண்ட சிக்கலான சமூக கட்டமைப்புகளை மனிதர்கள் உருவாக்கியுள்ளனர். மனித குழுக்களின் அளவுகள் ஒரு தனி குடும்பத்தில் இருந்து ஒரு பெரிய நாடு வரை பரந்து காணப்படுகிறது. மனிதர்களுக்கு இடையிலான சமூக பரிவரத்தனைகள் ஆனது சிறந்த கலாச்சார மதிப்புகள், சமூக நெறிகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை போன்ற விடயங்களை உருவாக்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட விடயங்கள் மனித சமூகத்தின் அடிப்படை மூலங்களாக திகழ்கிறது.

கலாச்சாரமானது மனிதர்களின் சிக்கலான அடையாள(அடிப்படை ) நடத்தைகள் என இங்கு வரையறுக்கபடுகிறது. உதாரணமாக பிறப்பிலேயே மனிதர்களுடன் உடனிணைந்து காணப்படாமலும், சமூக தொடர்புகள் மூலம் மட்டுமே கற்றுக்கொள்ள கூடியதுமான அனைத்து நடத்தைகளும் ஆகும். மொழி, சடங்கு, சமூக அமைப்பு, மரபுகள், நம்பிக்கைகள், தொழில்நுட்பம் என்பவை இவற்றுள் அடங்கும்

மொழி

தொகு

தனது தகவல்களையும், கருத்துக்களையும் பேச்சு (மற்றும் எழுத்து ) மூலம் வெளிப்படுத்தும் மனித ஆற்றலானது மற்றய உயிரினங்களுடன் ஒப்பிட முடியாத ஒன்றாகும். மற்றய விலங்கினங்களின் மூடிய குறி அமைப்புகளை போலல்லாமல் மனிதர்களின் மொழி திறந்த அமைப்புடையது அத்துடன் குறிப்பிட்ட அளவு ஒலிகளையும் சொற்களையும் கொண்டு முடிவற்ற எண்ணிக்கையான அர்த்தங்களை உருவாக்கும் வல்லமை படைத்தது.

குடியிருப்புகள் மற்றும் மக்கள்தொகை

தொகு

தொடக்ககாலத்தில் மனித குடியேற்றங்களானது நீர்நிலைகளின் அருகாமை, வாழ்க்கை முறைகள், பிழைப்புக்காக இயற்கை வளங்களை பயன்படுத்துதல், விளைவிற்குரிய சாகுபடி நிலம் மற்றும் கால்நடை மேய்த்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நிகழ்ந்தது.ஆயினும் மனித இனமானது தங்களின் இருப்பிடங்களை தொழில்நுட்ப அறிவைக் கொண்டு நீர்ப்பாசனம், நகர கட்டமைப்புகள், போக்குவரத்து, உற்பத்தி‌ பொருட்கள், காடழிப்புகள் போன்றவற்றின் மூலம் மாற்றியமைத்து வாழ தகவமைத்துக்கொண்டனர்.

 
2016 ல் ஓர் இரவுப்பொழுதில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிழற்படம்.படத்தில் பிரகாசமான பகுதி அடர்த்தியான மக்கள்தொகை வாழிடங்களை காட்டுகிறது

குறிப்புகள்

தொகு
  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. "Hints of Earlier Human Exit From Africa". Science News. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1126/science.1199113. Archived from the original on 2011-04-27. பார்க்கப்பட்ட நாள் 2011-05-01.
  3. Paul Rincon Humans 'left Africa much earlier' BBC News, 27 January 2011
  4. Lowe, David J. (2008). "Polynesian settlement of New Zealand and the impacts of volcanism on early Maori society: an update" (PDF). University of Waikato. பார்க்கப்பட்ட நாள் 29 April 2010.
  5. Appenzeller Tim (2012). "Human migrations: Eastern odyssey". Nature 485: 24–26. doi:10.1038/485024a. பப்மெட்:22552074. 
  6. Heng HH (May 2009). "The genome-centric concept: resynthesis of evolutionary theory". Bioessays 31 (5): 512–25. doi:10.1002/bies.200800182. பப்மெட்:19334004. 

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதர்&oldid=4111391" இலிருந்து மீள்விக்கப்பட்டது