மாந்தாதா அல்லது மாந்தாத்திரி (Mandhatri or Mandhata) (சமக்கிருதம்: मान्धातृ, Māndhātṛ), இந்து தொன்மவியலில் இவர் இச்வாகு குலத்தில் தோன்றிய மன்னரும், அயோத்தி மன்னர் யுவனசுவரின் மகனும் ஆவார்.[1] இவர் யாதவ குல மன்னர் சசபிந்துவின் மகளான சித்திரரதையை மணந்தவர்.[2] புராணகளின் படி, இவரது வழித்தோன்றல்கள் பிருகுத்சன், அம்பரீசன், முசுகுந்தன் ஆவார்.[3]

மாதாத்திரி
மாந்தாதா
விஷ்ணு பகவான் இந்திரன் வேடத்தில் மாந்தாதாவிற்கு சத்திரியனின் கடமைகளை எடுத்துரைக்கும் சித்திரம்
தகவல்
குடும்பம்யுவஸ்வா (தந்தை)
துணைவர்(கள்)பிந்துமதி சைத்திரரதி
பிள்ளைகள்பிருகுத்சன், அம்பரீசன், முசுகுந்தன்

ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் மன்னர் மாந்தாதாவின் குறிப்புகள் உள்ளது.[4]

மகாபாரத்தின் துரோண பருவத்தில், மாந்தாதா சூரிய வம்சத்தின் இச்வாகு குல மன்னராக கூறப்படுகிறது.[5][6]

இறப்பு

தொகு

மதுபுரியை ஆண்ட லவணாசூரன் எனும் அசுரனுடன் மாந்தாதா போரிடும் போது, லவணாசூரனுக்கு சிவபெருமான் அருளிய திரிசூலத்தால் மாந்தாதா கொல்லப்பட்டார். பிற்காலத்தில் லவணாசூரனை சத்ருக்கனன் போரில் கொன்றார்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. John Dowson (1870), A classical dictionary of Hindu Epic and religion, geography, history, and literature, Trübner & Co., pp. 197–8
  2. Pargiter 1972, ப. 150.
  3. Pargiter 1972, ப. 93.
  4. Pargiter 1972, ப. 102-4.
  5. மன்னன் மாந்தாதா! - துரோண பர்வம் பகுதி – 062
  6. Mahabharata, III.126

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தாதா&oldid=3801627" இலிருந்து மீள்விக்கப்பட்டது