மானோங் (ஆங்கிலம்: Manong; மலாய்: Manong) என்பது மலேசியா, பேராக் மாநிலம், கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) அமைந்துள்ள ஒரு சிறுநகரம் ஆகும். பேராக் ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள நகரம், பேராக் மாநிலத்தின் அரச நகரமான கோலாகங்சார் பெருநகரத்தில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

மானோங்
Manong
பேராக்
கோலாகங்சார் மாவட்டத்தில் மானோங்
கோலாகங்சார் மாவட்டத்தில் மானோங்
Map
மானோங் is located in மலேசியா
மானோங்
      மானோங்
ஆள்கூறுகள்: 4°36′53.58″N 100°52′30.77″E / 4.6148833°N 100.8752139°E / 4.6148833; 100.8752139
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்கோலாகங்சார்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
33800
மலேசிய தொலைபேசி எண்+60-5-7430000
போக்குவரத்துப் பதிவெண்கள்P

உலு கெனாஸ் நீர்வீழ்ச்சி (Ulu Kenas) போன்ற பல சூழல் சுற்றுலா தலங்களுடன், இந்த நகரம் சில பழைய கடை கட்டிடங்களுடன் மிகவும் அமைதியான சூழ்நிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் வாழும் மக்களுக்கு பேராக் ஆறு இன்றும் ஒரு முக்கியப் போக்குவரத்து அமைப்பாக உள்ளது.[2]

இயற்கை சூழல்

தொகு

மானோங் நகரில் லதா உலு கெனாஸ் நீர்வீழ்ச்சி, குவார் நீர்வீழ்ச்சி (Lata Guar), பத்து பெச்சா நீர்வீழ்ச்சி (Lata Pecah Batu) மற்றும் உலு செலியாங் நீர்வீழ்ச்சி (Lata Ulu Jeliang) போன்ற பல அடுக்கு நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

பாடாங் ராகுட் (Padang Ragut) எனும் குவார் நீர்வீழ்ச்சி; இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை புகைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான இடமாகத் திகழ்கின்றது. மலைகளுடன் கூடிய பசுமையான வயல்வெளியைப் பின்னணியாகக் கொண்ட இந்த நகரம், நியூசிலாந்து நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.[3]

கம்போங் ஆரா பஞ்சாங் (Kampung Ara Panjang) எனும் கிராமப் பகுதியில் ஆரா பாஞ்சாங் எனும் வெந்நீர் ஊற்று உள்ளது. இது பிரதான சாலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதுவே கோலாகங்சார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே வெந்நீர் ஊற்றாகும். கழிப்பறைகள், ஓய்வறைகள், கடைகள் மற்றும் குளியல் குளங்கள் போன்ற பல வசதிகள் அங்கு வழங்கப்படுகின்றன.[4]

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Jarak dari Kuala Kangsar ke Manong". www.pandujalanterbaik.com. பார்க்கப்பட்ட நாள் 13 January 2024.
  2. "Pekan Manong". Sungai Perak. பார்க்கப்பட்ட நாள் 13 January 2024.
  3. Pink, Encik (14 February 2018). "Manong Kuala Kangsar Perak". Encik Pink (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 January 2024.
  4. "Manong, Perak". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 January 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானோங்&oldid=3995431" இலிருந்து மீள்விக்கப்பட்டது