மான் கத்தூரி
மான் கத்தூரி (Deer musk) என்பது தொடர்ச்சியாக வாசனை தரக்கூடிய பொருளாகும். இது ஆண் மானின் வால்குதியில் உள்ள சுரப்பிகளிலிருந்து பெறப்படுகிறது.
பொதுவாக " கத்தூரி " என்று குறிப்பிடப்படுவது கத்தூரி மான்களிடமிருந்து பெறப்பட்டாலும், கத்தூரி என்பது ஆப்பிரிக்கப் புனுகுப்பூனை ("சிவெட் கத்தூரி") போன்ற பிறவிலங்குகளிடமிருந்தும் பல்வேறு செயற்கை வகையான "மஸ்கி" பொருட்களையும் இச்சொல் குறிப்பிடுகிறது. இந்தப் பொருட்களும் கத்தூரி மானிடமிருந்து பெறப்படும் கஸ்தூரி போன்று சில பண்புகளைக் கொண்டுள்ளது.
மான் கத்தூரிக்கான தேவை கத்தூரி மான் மக்கள் தொகை கடுமையாகக் குறைந்துள்ளது. கத்தூரி உற்பத்தி செய்யும் ஏழு இனங்களில் ஆறு ஆபத்தானவை எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.
கலாச்சார வரலாறு
தொகுகத்தூரி என்ற பெயரின் சொற்பிறப்பியல், இந்தியச் சமஸ்கிருத மொழியிலிருந்து முசுகா, ('"சிறிய சோதனை") மத்திய பாரசீக مشک மசுக், பிந்தைய கிரேக்கம் μόσχος ( மொஸ்கோஸ் ), பிந்தைய லத்தீன் மசுகசு மத்திய பிரெஞ்சு மசுக் மற்றும் மத்திய ஆங்கில மசுக்,[1] என்பதிலிருந்து இதன் வணிகப் பாதையினை அறியலாம்.
கத்தூரி மான் இப்பகுதியில் மிகவும் அருகிய இனமாக உள்ளது. இந்த மான்களிலிருந்து வரும் வாசனை சுரப்பிகள் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. இந்த வாசனைச் சுரப்பிகளைப் பயன்படுத்தி வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவை பாரம்பரிய மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.
பாரம்பரியக் காலத்தில் மான் கத்தூரி மேற்கத்திய உலகில் அறியப்படவில்லை. இது குறித்த எந்த தகவலும் கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை வெளி உலகுக்குத் தெரியவில்லை. தல்மூத் (பிராச்சோட் 43) எனப்படும் ஆபிரகாம் குறித்த அதிகாரத்தில் விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட வாசனை என்று முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 6ஆம் நூற்றாண்டின் கிரேக்க ஆய்வாளர் காஸ்மாஸ் இண்டிகோபிளஸ்டஸ் இதனை இந்தியாவிலிருந்து பெறப்பட்ட ஒரு தயாரிப்பு என்று குறிப்பிட்டார்.[2] இதன் பின்னர் அரபு மற்றும் பைசாந்தியப் பேரரசின் வாசனைத் திரவிய தயாரிப்பாளர்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் இது ஒரு பாலுணர்வைத் தூண்டுவதாக நன்கு அறியப்பட்டது. அப்பாசியக் கலீபகத்தில் இது மிகவும் மதிக்கப்பட்டது. பகுதாது கலீபாக்கள் இதைப் பகட்டாகப் பயன்படுத்தினர். 9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அல்-கிந்தி இதை இவரது ஏராளமான வாசனை திரவியங்களில் சேர்த்துக் கொண்டார். மேலும் இது கிழக்கிலிருந்து அரேபியக் கப்பல்மூலம் கொண்டு வரப்பட்ட முக்கியமான ஆடம்பர பொருட்களில் ஒன்றாகும்.
மான் கத்தூரி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து பல வாசனைத் திரவியங்களில் இது ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இது வாசனைத் திரவியத்தை நீண்டகால சக்தியை ஒரு நிர்ணயிப்பாக வழங்கக் காரணமாக உள்ளது. இதன் விலை அதிகமாக இருந்தபோதிலும், கத்தூரி ஆல்கஹால் கரைசல் 1979 வரை நறுமணப் பொருள்களில் பயன்படுத்தப்பட்டது. கத்தூரி மான் அருகிவரும் எனக் பாதுகாக்கப்படுவதால், காட்டுத் தாவரம் மற்றும் விலங்குகள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம் (CITES). இன்று இயற்கை கத்தூரியின் வர்த்தகத்தினைப் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் சட்டவிரோதமாகக் கத்தூரி மான் வேட்டையாடுதல் மூலம் வர்த்தகம் தொடர்கிறது.[3]
அறுவடை
தொகுகத்தூரி மான் மொசிடே குடும்பத்தைச் சேர்ந்தது. பாக்கித்தானில் இருந்து சீனா வரை இமயமலையில் வெள்ளை வயிற்றுக் கத்தூரி மான் காணப்படுகிறது. மான் கத்தூரி பெற, மான் கொல்லப்பட்டு, "கத்தூரி நெற்று" என்றும் அழைக்கப்படும் இதன் சுரப்பி பெறப்படுகிறது. கத்தூரி காய்களை அறுவடை செய்வது மோசசு பேரினச் சிற்றினங்களுக்கு முக்கிய அச்சுறுத்தலாகும்.
சீனாவில், குள்ள கத்தூரி மான், அல்பைன் கத்தூரி மான் மற்றும் சைபீரியக் கத்தூரி மான் ஆகியவற்றிலிருந்து கத்தூரி காய்கள் தற்போது சீன மக்கள் குடியரசின் பார்மகோபொயாவின்படி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.[4] இருப்பினும், 99%க்கும் அதிகமான பயன்பாட்டில் இருப்பது வெளியிடப்படாத செயற்கை கலவை கத்தூரி என்பது அதிகாரப்பூர்வ தகவலாகும்.[5]
பண்புகள்
தொகுமான் கத்தூரி இருண்ட ஊதா நிறமுடையது. உலர்ந்த, மென்மையானது மற்றும் தொடுவதற்குத் தெளிவற்றது. சுவை கசப்பானது. என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் கூற்றுப்படி, "கத்தூரியானது எந்தவிதமான எடை இழப்பும் இல்லாமல் மில்லியன் கன அடி காற்றில் தெளிவான வாசனை தரக்கூடியது. மேலும் இதன் வாசனை அதிக ஊடுருவல் மட்டுமல்லாமல், அறியப்பட்ட வேறு எந்த பொருளையும் விடத் தொடர்ந்து நிலைத்திருக்கும் தன்மையுடையது".[6] வாசனை கொள்கையின் கூடுதலாக, கத்தூரியில் அம்மோனியா, கொழுப்பு, கொலஸ்ட்ரால், கசப்பான பிசின் பொருள் மற்றும் பிற விலங்கு பொருட்களையும் கொண்டது.
வியட்நாமின் டோன்கின் கத்தூரி மிகவும் தரம் உயர்ந்த கத்தூரி ஆகும். இதைத் தொடர்ந்து அசாம் மற்றும் நேபாள கத்தூரியும், ரஷ்ய மற்றும் சீன இமயமலைப் பகுதிகளைச் சேர்ந்த கார்படின் கத்தூரி தரம் குறைந்ததாகக் கருதப்படுகிறது.[3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Merriam-Webster's Online Dictionary: musk". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 2007-04-07.
- ↑ Groom, Nigel (1997). New Perfume Handbook. Springer. pp. 219–220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7514-0403-9.
- ↑ 3.0 3.1 Rowe, David J. (Ed.); Philip Kraft (2004). "Chapter 7. Aroma Chemicals IV: Musks". Chemistry and Technology of Flavours and Fragrances. Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-2372-X.
- ↑ "麝香 / MOSCHUS". Pharmacopoeia of the People's Republic of China. db.ouryao.com. 2015. பார்க்கப்பட்ட நாள் 10 December 2018.
- ↑ state key laboratory of bioactive substance and function of natural medicines. ""人工麝香研制及其产业化"荣获国家科学技术进步一等奖". Archived from the original on 20 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 December 2018.
发现了天然麝香中关键药效物质—抗炎多肽蛋白质类成分……作为国家保密品种, 自1994年推广以来,在全国31个省市760家企业应用,销售的433种中成药中,有431种完全用人工麝香替代了天然麝香,替代率达99%以上……相当于少猎杀900万头雄麝
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Dalby, Andrew (2000). Dangerous Tastes: The Story of Spices. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-23674-5.