மான் கீ அவாசு பிரதிக்யா

மான் கீ அவாசு பிரதிக்யா (Mann Kee Awaaz Pratigya) என்பது ஓர் இந்திய தொலைக்காட்சித் தொடராகும், இது ஸ்டார் பிளஸில் ஒளிபரப்பப்பட்டது.[1] இந்தத் தொடர் 7 டிசம்பர் 2009 இல் திரையிடப்பட்டது மற்றும் 27 அக்டோபர் 2012 அன்று முடிவடைந்தது.[2] இதில் பூஜா கோர் மற்றும் அர்ஹான் பெல் ஆகியோர் நடித்திருந்தனர் . தொடரின் புதிய பதிப்பு மான் கீ ஆவாசு பிரதிக்யா 2 15 மார்ச் 2021 அன்று ஸ்டார் பாரத் மற்றும் உத்ஸவ் பாரத் (யுகே/ஐரோப்பா மட்டும்) டைரக்டர்ஸ் குட் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டது.[3]

கதை தொகு

தன் உரிமைக்காக போராட எந்த எல்லைக்கும் போகும் ஒரு பெண்ணான பிரதிக்யாவின் கதை இது. அலகாபாத்தில் பரவலாக அறியப்பட்ட தாக்கூர் குடும்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. கிருஷ்ணாவின் தந்தை சஜ்ஜன் சிங் ,தாக்கூர்ஸ் பாரம்பரியம் மற்றும் மூடநம்பிக்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு நபராவார்.இதற்கு நேர்மாறாக, சக்சேனா குடும்பம் பாரம்பரியமானது, ஆனால் அவர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள். அவர்களின் மகள்களான பிரதிக்யா மற்றும் ஆருசி ஆகியோர் கல்வி கற்பதில் ஆர்வம் உடையவர்கள். கிருஷ்ணா தாக்கூர் மற்றும் பிரதிக்யா சக்சேனா இணை ஆரம்பத்தில் பொருந்தவில்லை என்றாலும் இறுதியில் காதலிக்கிறார்கள்.

கிருஷ்ணன், பிரதிக்யாவினால் இரகசியாமக ஈர்க்கப்படுகிறார், அவன் அவளை திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்துகிறான். பிரதிக்யாவைப் பாதுகாக்க, அவளுடைய சகோதரர் ஆதர்ஷ் கிருஷ்ணனின் சகோதரி கோமலை மணக்கிறார். ப்ரதிக்யா தனது திருமணத்தில் விருப்பமில்லாமல் இருக்கிறார், ஆனால் காலப்போக்கில் அவள் கிருஷ்ணனின் உண்மையான அன்பை உணர்ந்தாள்.

கிருஷ்ணனின் சகோதரர் சக்தி, அவரது மனைவி கேசரின் மன உறுதியை இழக்கச் செய்கிறார். இதன் விளைவாக, பிரதிக்யா சக்தி மற்றும் கேசரின் மகன் சமரைப் பராமரிக்கத் தொடங்குகிறார். தாக்கூர் குடும்பத்தின் சொத்தை அபகரிக்க விரும்பும் மென்காவை, சக்தி திருமணம் செய்து கொள்கிறார். அபிமன்யு சிங் யாதவ், சஜ்ஜன் சிங்கின் சட்டவிரோத மகன் என்ற விசயம் வெளிப்பட்டு தனது உரிமைகளை கோரி, குடும்பத்திற்கு எதிராக திட்டமிடத் தொடங்கினார்.

பிரதிக்யாவும் கிருஷ்ணாவும் சமரை அதிகாரப்பூர்வமாக தத்தெடுக்கிறார். பிரதிக்யா கர்ப்பமாகி, ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து, முழு குடும்பமும் கொண்டாடுகிறது.

தழுவல்கள் தொகு

இது மராத்தியில் ஸ்டார் பிரவாவில் தேவயானி என மறு ஆக்கம் செய்யப்பட்டது.[4] இது தெலுங்கில் ஸ்டார் மாவில் பவித்ரா என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது.[5]

தயாரிப்பு தொகு

வெளியீட்டு பணி தொகு

தொடரின் தொடக்கத்திற்கு முன், டிசம்பர் 2009 இல், மும்பையில் உள்ள நாரிமன் பாயிண்ட்டில் மேரி பிரதிக்யா என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது. அதில் முன்னணி கதாப்பத்திரமான பூஜா கர் , 500 பெண்களுடன் இணைந்து பெண்களைப் பகடி செய்வதற்கு எதிராக மனிதச் சங்கிலி விழிப்புணார்வு ஏற்படுத்தினர்.[6]

நடித்தல் தொகு

வரவேற்பு தொகு

விமர்சகர்கள் தொகு

இந்தியன் எக்ஸ்பிரஸ், "இது ஒரு சிறந்த நாடகப் படைப்பு ஆகும். கதாப்பத்திரங்களின் வடிவமைப்பு, கதைக் கருவிலும் இந்த நாடகத் தொடர் சிறப்பான நிலையில் உள்ளது எனக் கூறியது.[7]

நவம்பர் 2010 இல், டெக்கான் ஹெரால்ட் , "பெண்களைப் பகடி செய்வதற்கு எதிரான கதைக்களம் கொண்ட இந்த நாடகம் ஸட்டர் பிளசில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. தற்போது இருக்கும் சூழ்நிலைகளில் ஒரு பெண் தனது குடும்பத்தினர், மற்றும் சுற்றத்தார்களால் அவமானப் படுவதையும், சுய மரியாதையினை இழப்பவர்கள் எனும் கதைக்குப் பதிலாக எவ்வாறு சுயமாக முன்னேறுகிறார் என்பதனை விளக்குவதாக இது உள்ளது" என நேர்மறையான விமர்சனம் தந்தது.[8]

சான்றுகள் தொகு

  1. "Pavitra Rishta, Pratigya, Taarak Mehta lead Apsara awards nomination". என்டிடிவி.
  2. "Pratigya to go off air". The Times Of India.
  3. "Athar Siddiqui undergoes hard training for Mann Ki Awaaz Pratigya 2". The Times of India.
  4. "TV viewers give Marathi TV serials inspired by Hindi soaps a thumbs up". The Times of India. Archived from the original on 18 பிப்ரவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "Small Talk: Soap sensibility". தி இந்து. Archived from the original on 26 February 2021. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
  6. "Pratigya Initiates 'Mere Pratigya". www.businesswireindia.com (in ஆங்கிலம்). Archived from the original on 16 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  7. "Who is the prime-time leader?". The Indian Express.
  8. "Displaced concern - Regressive Serials". Deccan Herald.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்_கீ_அவாசு_பிரதிக்யா&oldid=3775173" இலிருந்து மீள்விக்கப்பட்டது