மாலிக் மக்புல் திலங்கானி
மாலிக் மக்புல் (Malik Maqbul) (மாலா யுகந்தருடு ), [1] கான்-இ-ஜஹான் மக்புல் திலங்கனி [2] மற்றும் ஜஹான் கான் [3] ) (இ. 1369) காக்கத்தியப் பேரரசின் இந்தியத் தளபதி ஆவார். பிரூசு சா துக்ளக்கின் கீழ் தில்லி சுல்தானகத்தின் பிரதம அமைச்சராக பணியாற்றினார்( ஆ. 1351–1388 ). [4] இவர் தில்லி சுல்தானகத்தின் சேவையில் ஐதராபாத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் தில்லி சுல்தானகத்தின் சார்பாக இன்றைய தெலங்கானாவின் அனைத்து பகுதிகளையும் ஆட்சி செய்து ஆட்சி செய்தார். [5]
மாலிக் மக்புல் | |
---|---|
கல்லறை | கான்-இ ஜஹான் திலங்கனியின் கல்லறை |
வாரங்கலில் பணிகள்
தொகுமாலிக் மக்புல்லின் மற்றொரு பெயர் கோனா கன்னப்பா என்பதாகும். பிரதாபருத்ரனின் கீழ் காக்கத்திய பேரரசின் தளபதியாக இருந்தார் ஆ. 1289–1323 ). மரனாவின் மார்க்கண்டேய புராணம் (தெலுங்கு) இவரை "கன்னவிபுடு" என்று பெயரிடுகிறது. மேலும், காகத்தியர்களின் தலைநகரான வாரங்கல் கோட்டையின் தளபதி என்றும் விவரிக்கிறது. மாலா தேவுடு ("இறைவன்" என்று பொருள்) என்ற பெயரும் இவருக்குண்டு. இது இவர் படிநிலையில் மிகவும் உயர்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. [1]
கியாசுதீன் துக்ளக்கின் மகனும் தளபதியுமான உலுக் கான் 1323 இல் வாரங்கலைக் கைப்பற்றிய பிறகு, உலுக் கான் சுல்தானகத்தின் புதிய மாகாணமான "தெலிங்" (தெலங்கானா) மாகாணத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். கன்னப்பா பிடிக்கப்பட்டு இசுலாமிற்கு மாறி, மாலிக் மக்புல் என்ற பெயருடன் புதிய ஆட்சியில் இடம் பெற்றார். உலுக் கான் பின்னர் தில்லிக்குப் புறப்பட்டபோது, மாலிக் மக்புலின் பொறுப்பில் வாரங்கலை விட்டுச் சென்றார். உலுக் கான் கியாசுதீன் துக்ளக்கிற்குப் பிறகு முகம்மது பின் துக்ளக் என்ற பெயரில் தில்லியின் புதிய சுல்தானாக பதவியேற்றார். [1] [6]
முஸ்லிம் ஆளுநர்கள் தங்களை ஆள்வதை அங்குள்ள பிரபுக்கள் எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். உலுக் கான் வெளியேறிய உடனேயே ராஜமன்றியைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியும், 1325 இல் கிருஷ்ணா ஆற்றுக்கு தெற்கே உள்ள பகுதியும், 1330 இல் பத்ராச்சலம் பகுதியும், 1330-1335 க்கு இடையில் மேற்கு தெலுங்கானாவும் கை நழுவியது. [7] கிளர்ச்சிகளை அடக்குவதற்காக சுல்தான் 1334 இல் தென்னிந்தியாவில் ஒரு இராணுவத்தை வழிநடத்திச் சென்றார். ஆனால் அவரது இராணுவம் ஒரு தொற்றுநோயால் தாக்கப்பட்டது. எனவே அவர் தில்லிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [8] விரைவில், வாரங்கலும் வெளியேறியது. மாலிக் மக்புல் தில்லிக்குத் தப்பி ஓடினார். தொற்றுநோய் காரணமாக தனது இராணுவத்தில் குறிப்பிடத்தக்க இழப்புகளை எதிர்கொண்ட சுல்தான் தெலங்கானாவை மீட்க முடியாத நிலையில் இருந்தார். [9]
தில்லியில் தொழில்
தொகுமாலிக் மக்புல் ஆரம்பத்தில் முல்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டு பஞ்சாப் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டார். [10]
தில்லி திரும்பிய பிறகு, மக்புல் முகமது பின் துக்ளக்கின் நம்பிக்கையைப் பெற்றார். பரூச்சில் கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக குசராத்திற்கு ஒரு போர்ப் பயணத்தில் சுல்தானுடன் சென்றார். இவர் அனைத்து கிளர்ச்சியாளர்களையும் கொன்று மகத்தான செல்வத்தை கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து, தில்லி தர்பாரில் (அரச சபை) தன்னை இன்றியமையாதவராக ஆக்கிக் கொண்டதன் மூலம், இவர் நிதி அமைச்சராகவும், இறுதியாக, பிரூஸ் ஷா துக்ளக்கின் கீழ் தில்லி சுல்தானகத்தின் பிரதம அமைச்சராகவும் ஆனார்.[11] பிரூஸ் ஷா ஆறு மாதங்களாக சிந்து மற்றும் குசராத்தில் போரில் ஈடுபட்டிருந்தபோது, மக்புல் தில்லியைப் பாதுகாத்தார். [3] சுல்தானின் அரசவையில் இருந்த பிரபுக்களில் கணிசமான எண்ணிக்கையில் இவர் மிகவும் விரும்பப்பட்டவர். மேலும், சுல்தானின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டார். [12] சுல்தான் மக்புலை அண்ணன் என்றுதான் அழைப்பார். தில்லியின் உண்மையான ஆட்சியாளர் கான்-இ-ஜஹான் என்று சுல்தான் இவரை குறிப்பிட்டார். நிதி மற்றும் பொது நிர்வாகம் முற்றிலும் மக்புலுக்கு விடப்பட்டது. மக்புல் ஒருபோதும் தனது அதிகாரங்களை மீறவில்லை. மேலும் சுல்தானுக்கு மிகவும் நேர்மையானவராக இருந்தார். அவர் மாகாணங்களின் ஆளுநர்களிடமிருந்து பரிசுகளை வாங்கினாலும், அவற்றை அரச கருவூலத்தில் சேர்த்தார். அரசாங்க நிலுவைத் தொகையை வசூலிப்பதிலும் இவர் கடுமையாக இருந்தார். எவ்வாறாயினும், அவரது அதிகாரங்கள் தணிக்கையாளர் மற்றும் தலைமைக் கணக்காளர் ஆகியோரால் கட்டுப்படுத்தப்பட்டன. [13] இவரது இராணுவம் , வேலையாட்களின் செலவுகள், இவரது மகன்கள் மற்றும் மருமகன்களின் செலவுகளுக்கு 13 இலட்சம் தனித்தனியாக வழங்கப்பட்டது. மக்புல் 2000 காதலிகளையும் பராமரித்து வந்தார். [14]
வாரிசு
தொகுகிபி 1369 இல் மக்புல் இறந்த பிறகு, இவரது மகன் ஜௌனா கான் பிரதம அமைச்சர் ஆனார். [15]
ஜௌனா கான் தனது தந்தையைப் போலவே திறமையானவர். ஆனால் அவர் இராணுவத் தலைவர் அல்ல. சுல்தான் பிரூசு சாவின் வாழ்நாளில் தொடங்கிய வாரிசுக்கான மோதலில் இவர் தோல்வியடைந்தார். பின்னர் ஜௌனா கான் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். ஜுனன் ஷா என்றும் அழைக்கப்படும் இவர் ஏழு பெரிய மசூதிகளை தில்லியிலும் அதைச் சுற்றியுள்ள புகுதிகளிலும் கட்டினார். அதில் கிர்கி மஸ்ஜித் நன்கு அறியப்பட்டதாகும். [16]
நினைவுச்சின்னங்கள்
தொகுஜௌனா கான் தனது மாலிக் மக்புல் இறந்த பிறகு 1388 இல் ஓர் கல்லறையைக் கட்டினார். [17] [18] [19] இது தில்லியில் கட்டப்பட்ட முதல் எண்கோண கல்லறை ஆகும். இந்திய துணைக்கண்டத்தில் உள்ள இந்த கல்லறைக்கு முந்தைய எண்கோண கல்லறை முல்தானில் உள்ள ஷாருக்ன்-இ ஆலமின் கல்லறை மட்டுமே. கல்லறை நிஜாமுதீன் மேற்கின் வடமேற்கு மூலையில் உள்ளது. [20] கட்டிடத்தின் முக்கிய கல்லறை இன்று பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. [21]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Wagoner & Rice 2001, ப. 48.
- ↑ Khan-i-Jahan's Tomb - Tomb of Malik Maqbul Khan, Delhi Information, retrieved 17 April 2019
- ↑ 3.0 3.1 Kulke, Hermann; Rothermund, Dietmar (1998), A History of India (Third ed.), Routledge, p. 167, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-15482-0
- ↑ Jayapalan, N. (2001). History of India. Atlantic Publishers & Distributors (P) Limited. p. 70. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-928-1. பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
- ↑ Somasekhara Sarma 1945, p. 25, footnote 1.
- ↑ Rama Rao 1947, ப. 297.
- ↑ Jackson 1993, ப. 268.
- ↑ Jackson 1993, ப. 268–269.
- ↑ T. H. Beale and H. G. Keene, An Oriental Biographical Dictionary, W. H. Allen, 1894, p. 214
- ↑ Sultan Firoz Shah Tughlaq by M. Ahmed, 1978, Chugh Publications, New Delhi p. 46 and 95
- ↑ Jackson 1993, ப. 186.
- ↑ Medieval India; From Sultanat to the Mughals, S. Chandra, 2007, Har Anand Publications, p.122, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-241-1064-6
- ↑ The Cambridge Economic History of India, T. Raychaudhuri and I. Habib, Orient Longman, 2005, p. 90, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2730-0
- ↑ Medieval India; From Sultanat to the Mughals, S. Chandra, 2007, Har Anand Publications, p.161, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-241-1064-6
- ↑ Gaur, Abhilash (15 April 2007). "Sacred Seven". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/sacred-seven/article2275143.ece. பார்த்த நாள்: 3 May 2018.
- ↑ "Khan-i Jahan Maqbul Tilangani Mausoleum".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ Bunce, Fredrick W. 2004. Islamic Tombs in India: The Iconography and Genesis of Their Design. New Delhi: D.K. Printworld, 52-55
- ↑ Sharma, Y.D. 2001. Delhi and its Neighbourhood. New Delhi: Directory General Archaeological Survey of India, 27, 118.
- ↑ Tomb of Telanga nawab: Anon (1997) Delhi, The Capital of India; Asian Educational Services. pp. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1282-5, 9788120612822
- ↑ "The Tomb of Khan - i Jahan Tilangani: A forgotten gem".
{{cite web}}
: Missing or empty|url=
(help)
உசாத்துணை
தொகு- Jackson, Peter (1999), The Delhi Sultanate: A Political and Military History, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-54329-3
- Rama Rao, M. (1947), "The Fall of Warangal and After", Proceedings of the Indian History Congress, 10: 292–297, JSTOR 44137150
- Somasekhara Sarma, Mallampalli (1945), A Forgotten Chapter of Andhra History: History of the Musunūri Nāyaks, Andhra University/Ananda Press
- Wagoner, Phillip B.; Rice, John Henry (2001), "From Delhi to the Deccan: Newly Discovered Tughluq Monuments at Warangal-Sult̤ānpurand the Beginnings of Indo-Islamic Architecture in Southern India", Artibus Asiae, 61 (1): 77–117, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3249963, JSTOR 3249963