மாலினி ராஜூர்கார்
மாலினி ராஜுர்கர் (Malini Rajurkar-8 சனவரி 1941-6 செப்டம்பர் 2023) ஓர் இந்திப் பாடகர். இவர் குவாலியர் கரானா எனும் இந்துஸ்தானி இசைப் பாரம்பரிய பாடகர்.[1]
மாலினி ராஜூர்கார் | |
---|---|
மாலினி ராஜூர்கார் 2011-ல் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | இராசத்தான், இந்தியா | 8 சனவரி 1941
இறப்பு | 6 செப்டம்பர் 2023 ஐதராபாத்து, இந்தியா | (அகவை 82)
இசை வடிவங்கள் | பாரம்பரிய பாடல், தெய்வீகப்பாடல், நாட்டுப்புறப்பாட்டு |
தொழில்(கள்) | பாடகர், இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | குரல் பாட்டு, ஆர்மோனியம், தம்புரா |
இசைத்துறையில் | 1966–20?? |
வெளியீட்டு நிறுவனங்கள் | எச். எம். வி., சரிகம |
இளமை
தொகுமாலினி ராஜுர்கர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தார். அஜ்மீரில் உள்ள சாவித்திரி பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் கணித ஆசிரியராக இருந்துள்ளார். இங்கு இவர் இதே பாடத்தில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குக் கிடைத்த மூன்று ஆண்டு உதவித்தொகையைப் பயன்படுத்தி, அஜ்மீர் இசைக் கல்லூரியில் சங்கீத நிபுனை முடித்து, கோவிந்திராவ் ராஜுர்கர் மற்றும் அவரது மருமகன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இசையைப் படித்தார். வசுந்தராவ் ராஜூர்கரை மாலினி மணந்தார்.
நடிப்பு
தொகுமாலினி இந்தியாவின் முக்கிய இசை விழாக்களில் நிகழ்த்தினார். இதில் குணிதாசு சம்மேளன் (மும்பை), தான்சென் சமோராக் (குவாலியர்),[2] சவாய் கந்தர்வ விழா (புனே), மற்றும் சங்கர் லால் விழா (தில்லி) குறிப்பிடத்தக்கன.
மாலினி குறிப்பாகத் தப்பா மற்றும் தாரானா வகையின் மீதான தனது திறமையினை செலுத்தினார். இவர் மெல்லிசையிலும் பாட வல்லவர். இவரது மராத்தி நாட்டியகீதே, பாண்டு-நிருபதி ஜனக் ஜயா, நரவர் கிருஷ்ணாசமான், யா பவனில் கீத் புராணே பாடல்கள் பிரபலமாக உள்ளன.
இறப்பு
தொகுராஜூர்கர் 6 செப்டம்பர் 2023 அன்று தனது 82வது வயதில் ஐதராபாத்தில் காலமானார்.[3]
விருதுகள்
தொகு- சங்கீத நாடக அகாதமி விருது 2001[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "She is a connoisseur's delight". The Hindu. 19 March 2004 இம் மூலத்தில் இருந்து 9 May 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040509005604/http://www.hinduonnet.com/thehindu/fr/2004/03/19/stories/2004031901550400.htm. பார்த்த நாள்: 10 October 2014.
- ↑ Anant Maral Shastri#Saluting the Legends
- ↑ "Malini Rajurkar, Hindustani vocalist whose 'tappa' renditions were epic, passes away at 82". The Times of India. 2023-09-07. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/pune/malini-rajurkar-hindustani-vocalist-whose-tappa-renditions-were-epic-passes-away-at-82/articleshow/103447252.cms.
- ↑ "Sangeet Natak Academy awardee list". Sangeet Natak Academy. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.