மாலிப்டினம் இருபாசுபைடு

வேதிச் சேர்மம்

மாலிப்டினம் இருபாசுபைடு (Molybdenum monophosphide) என்பது MoP2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

மாலிப்டினம் இருபாசுபைடு
Molybdenum diphosphide
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/Mo.2P
    Key: YDGMHDVXDKIUNP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Mo].[P].[P]
பண்புகள்
MoP2
வாய்ப்பாட்டு எடை 157.90 g·mol−1
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி 5.35 கி/செ.மீ3
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

மாலிப்டினம் தனிமத்துடன் சிவப்பு பாசுபரைச் சேர்த்து ஒரு மூடிய குழாயிலிட்டு 550பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் மாலிப்டினம் இருபாசுபைடு உருவாகும்.

Mo + 2P → MoP2

பண்புகள்

தொகு

மாலிப்டினம் இருபாசுபைடு செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில் கருப்பு நிறப் படிகங்களாக A21am என்ற இடக்குழுவுடன் உருவாகிறது.[3][4] தண்ணீரில் இது கரையாது. காற்றில் சூடுபடுத்தப்பட்டால் சிதைவடையும். மாலிப்டினம் மோனோபாசுபைடையும் வெள்ளை பாசுபரசையும் கொடுக்கிறது.

4MoP2 → 4MoP + P4

பயன்கள்

தொகு

மாலிப்டினம் இருபாசுபைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Mellor, Joseph William (1971). Supplement to Mellor's Comprehensive Treatise on Inorganic and Theoretical Chemistry: suppl. 1, pt. 1. N (in ஆங்கிலம்). Longmans, Green and Company. p. 345. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
  2. Yu, Pei; Luo, Fengting; Chen, Shijian (25 May 2024). "Porous MoP2/MoS2 hierarchical nanowires for efficient hydrogen evolution reaction in full pH range". Journal of Alloys and Compounds 985: 174024. doi:10.1016/j.jallcom.2024.174024. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S092583882400611X. பார்த்த நாள்: 11 March 2024. 
  3. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 35. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
  4. Inorganic Chemistry, Series One: Transition metals, pt. 1 (in ஆங்கிலம்). Butterworths. 1972. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8391-1008-8. பார்க்கப்பட்ட நாள் 11 March 2024.
  5. Wu, Tianli; Pi, Mingyu; Zhang, Dingke; Chen, Shijian (1 October 2016). "Three-dimensional porous structural MoP2 nanoparticles as a novel and superior catalyst for electrochemical hydrogen evolution". Journal of Power Sources 328: 551–557. doi:10.1016/j.jpowsour.2016.08.050. பன்னாட்டுத் தர தொடர் எண்:0378-7753. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0378775316310497. பார்த்த நாள்: 11 March 2024.