மால்சிரஸ்
மால்சிரஸ் (Malshiras), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டம், மால்சிரஸ் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமும்,பேரூராட்சியும் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான சோலாப்பூருக்கு கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், பண்டரிபுரத்திற்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதன் அருகமைந்த நகரம் அக்லூஜ் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் பண்டரிபுரத்தில் உள்ளது.
மால்சிரஸ் | |
---|---|
ஆள்கூறுகள்: 17°55′N 74°57′E / 17.92°N 74.95°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | சோலாப்பூர் |
தாலுகா | மால்சிரஸ் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,985 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்திய மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 413107 |
தொலைபேசி குறியீடு எண் | 02185 |
வாகனப் பதிவு | MH-45 |
அருகமைந்த நகரம் | அக்லூஜ் |
சராசரி கோடைக்கால வெப்பம் | 45 °C (113 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 12 °C (54 °F) |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, மால்சிரஸ் பேரூராட்சியின் மக்கள் தொகை 21985 ஆகும். அதில் 11378 ஆண்கள் மற்றும் பெண்கள் 10607 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 932 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.56% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 78.96% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,814 மற்றும் 282 ஆகவுள்ளனர்.[1]