மால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

மால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதி (Maldaha Uttar Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். மால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ள இந்திய மக்களவைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மால்டா மக்களவைத் தொகுதி 2009இல் நீக்கப்பட்டது. மால்தாக வடக்கு மற்றும் மால்தாக தெற்கு என இரு மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.[2]

மால்தாகா வடக்கு
WB-7
மக்களவைத் தொகுதி
Map
மால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது2009
மொத்த வாக்காளர்கள்1,425,428[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
காஜென் முர்மு
கட்சி பாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

மால்தாகா வடக்கு மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண் 7) பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

# பெயர் மாவட்டம் உறுப்பினர் கட்சி
43 கபீபூர் (ப.கு.) மால்டா ஜாயெல் முர்மு பாஜக
44 காசோல் (SC) சின்மோய் தேப் பர்மன் பாஜக
45 சஞ்சல் நிஹார் ரஞ்சன் கோஷ் அஇதிகா
46 அரிசுசந்திரபூர் தாஜ்முல் ஹொசைன் அஇதிகா
47 மலாட்டிபூர் அப்துர் ரஹீம் போக்ஸி அஇதிகா
48 இரட்டுவா சமார முகர்ஜி அஇதிகா
50 மால்தாலா (ப.இ.) கோபால் சந்திர சகா பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர் [3] கட்சி
2008 வரை: பார்க்க மால்டா
2009 மௌசம் நூர்[4] இந்திய தேசிய காங்கிரசு
2014
2019 ககன் முர்மு பாரதிய ஜனதா கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

தொகு

பொதுத் தேர்தல் 2024

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: மால்தாகா வடக்கு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ககன் முர்மு 5,27,023 37.18 0.43
திரிணாமுல் காங்கிரசு பிராசன் பானர்ஜி 4,49,315 31.7  0.31
காங்கிரசு மொசுடக் ஆலம் 3,84,764 27.14  4.61
நோட்டா நோட்டா 7288 0.51 0.08
வாக்கு வித்தியாசம் 77,708 5.48
பதிவான வாக்குகள் 14,17,589 76.03 4.36
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Archived from the original on 6 June 2014. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.
  2. 2.0 2.1 "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 27 May 2009.
  3. "Maldaha Uttar Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  4. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  5. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S257.htm

மேலும் காண்க

தொகு