மால்டா மக்களவைத் தொகுதி

மால்டா மக்களவைத் தொகுதி (Malda Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் மால்டாவினை மையமாகக் கொண்டது. இது 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டது. இந்த இடம் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மிகவும் செல்வாக்கான இடமாக இருந்தது.

மால்டா
முன்னாள் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது1951
நீக்கப்பட்டது2009
ஒதுக்கீடுபொது

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

மால்டா மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]

  • அபீபூர் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 39)
  • ஆரைடங்கா (சட்டப்பேரவைத் தொகுதி எண். 44)
  • மால்டா (சட்டப்பேரவை தொகுதி எண். 45)
  • இங்கிலீஷ்பஜார் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 46)
  • மணிக்சக் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 47)
  • சுசாப்பூர் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 48)
  • கலியாசக் (சட்டப்பேரவைத் தொகுதி எண். 49)

மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மால்டா நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டது. தற்போதைய அரசியலமைப்பு சட்டமன்றத் தொகுதிகள் புதிய தொகுதிகளில் ஒன்றின் ஒரு பகுதியாக இருக்கும். இப்புதிய மக்களவைத் தொகுதிகள் மால்டா வடக்கு மக்களவைத் தொகுதி, மால்டா தெற்கு மக்களவைத் தொகுதி ஆகும்.[2]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் ஆண்டு
மக்களவை உறுப்பினர்கள் கட்சி
1952 சுரேந்திர மோகன் கோஷ் இந்திய தேசிய காங்கிரஸ்
1957 ரேணுகா ரே
1962
1967 உமா ராய்
1971 தினேஷ் சந்திர ஜோர்டர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1977
1980 ஏ. பி. ஏ. கானி கான் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
1984
1989
1991
1996
1998
1999
2004
2006^ அபு ஹசீம் கான் சவுத்ரி

அடுத்தடுத்த ஆண்டுகளில் இப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மால்டா வடக்கு மக்களவைத் தொகுதி மற்றும் மால்டா தெற்கு மக்களவைத் தொகுதியைப் பார்க்கவும்.

தேர்தல் முடிவுகள்

தொகு

இடைத்தேர்தல் 2006

தொகு

2006 செப்டம்பர் 13 அன்று இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது, இது தற்போதைய எம். பி. ஏ. பி. எ. கானி கான் சவுத்ரியின் மரணத்தால் அவசியமானது. இந்த இடைத்தேர்தலில், காங்கிரசு கட்சியின் அபு அசீம் கான் சவுத்ரி தனது நெருங்கிய போட்டியாளரான இந்தியப் பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் சைலன் சர்க்காரை 84,391 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2006, இந்திய நாடாளுமன்ற இடைத்தேர்தல்: மால்டா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அபு காசிம் கான் சவுத்ரி 437,161 50.67
இபொக (மார்க்சிஸ்ட்) சைலன் சர்கார் 353,770 41.00
பா.ஜ.க பிசுவப்ரியா ராய் சவுத்ரி 45,737 5.30
சுயேச்சை அதுல் சந்திர மண்டல் 13,875 1.61
சுயேச்சை அதார் இரகுமான் 12,328 1.42
வாக்கு வித்தியாசம் 84,391
பதிவான வாக்குகள் 8,62,888 77.5%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha" (PDF). Volume III Details For Assembly Segments Of Parliamentary Constituencies. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2010-10-01.
  2. "Press Note, Delimitation Commission" (PDF). Assembly Constituencies in West Bengal. Delimitation Commission. பார்க்கப்பட்ட நாள் 2008-10-28.
  3. "Bye Election of Parliament Constituency of West Bengal - 7-Malda". 19 September 2006. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்டா_மக்களவைத்_தொகுதி&oldid=4118411" இலிருந்து மீள்விக்கப்பட்டது