மாவுலின்னாங்
மாவுலின்னாங் என்னும் கிராமம், இந்திய மாநிலமான மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இங்கு வாழும் மக்கள் தாய்வழி சமூகத்தை பின்பற்றுகின்றனர்.[2] இது ஆசியாவிலேயே சுத்தமான கிராமம் என்று அறியப்படுகிறது.[3]
மாவுலிநாங் Mawlynnong | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேகாலயா |
மாவட்டம் | கிழக்கு காசி மலை மாவட்டம் |
வட்டம் | பைனுர்ஸ்லா |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
இது பைனுர்ஸ்லா வட்டாரத்துக்கும், சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
புவியியல்
தொகுஇது சில்லாங்கின் தெற்கில் 90 கி.மீ தொலைவில், இந்தியா-வங்காளதேசம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.[5]
மக்கள்
தொகுஇங்கு ஏறத்தாழ 500 மக்கள் வசிக்கின்றனர்.[6]
2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இங்கு 95 வீடுகள் உள்ளன.[7] இங்கு வாழும் அனைவரும் கல்வி கற்றிருக்கின்றனர்.[8] இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். முக்கியப் பயிர் பாக்கு ஆகும்.[8] இவர்கள் காசி இன மக்கள் ஆவர்.[6]
தாய்வழி சமூகம்
தொகுகாசி இன மக்கள், தங்கள் சொத்துக்களை கடைசி பெண்களுக்கே எழுதி வைப்பர். இங்கு தலைமுறையானது பெண்களை முன்னிறுத்தி இருக்கிறது. மகள்கள் தாயின் பெயரை தன் பெயருடன் சேர்த்து எழுதுவது வழக்கம்.[9]
தூய்மை
தொகுஇந்த ஊர் தூய்மைக்கு பெயர் பெற்றது.[10] இங்கு சேர்க்கப்படும் கழிவுகளை மூங்கில் கூடைகளில் சேகரித்து, குழிக்குள் போட்டு, உரமாக பயன்படுத்துகின்றனர். டிஸ்கவர் இந்தியா என்ற பயண இதழ், இந்த ஊரை ஆசியாவின் சுத்தமான கிராமம் என்று 2003ஆம் ஆண்டில் அறிவித்தது.[8] The phrase has since caught on. Moasunep Kichu's documentary on the village, for instance, is called Asia's Cleanest Village.[11]
சுற்றுலா
தொகுஇது சுற்றுலாத் தலமாகும். இங்கு வேர்களால் ஆன பழைமையான பாலம், சிறு முனையின் மீது சமன்பட்டு நிற்கும் பாறை ஆகியன உள்ளன. ஊர் முழுவதும் செடி,கொடி, மரங்களால் நிரம்பியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான குடில்கள் உள்ளன.
சான்றுகள்
தொகு- ↑ IAY Report for Financial year 2010-2011
- ↑ Kingdom of girls: Women hold power in this remote Indian village" 'வாஷிங்டன் போஸ்ட். April 17th 2015. Retrieved on June 6, 2015.
- ↑ "Asia's Cleanest Village is in Meghalaya".
- ↑ Electoral roll of Pynurla (ST) constituency, Election Department, Government of Meghalaya.
- ↑ Magical Mawlynnong பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Meghalaya Tourism
- ↑ 6.0 6.1 Nieves, Evelyn. "Girls Rule in an Indian Village" (). த நியூயார்க் டைம்ஸ். June 3, 2015. Retrieved on June 5, 2015.
- ↑ Availability of MGNrega data on MGNREGA soft MIS[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 8.0 8.1 8.2 Eco Destination பரணிடப்பட்டது 2011-12-09 at the வந்தவழி இயந்திரம், Department of Tourism, Government of Meghalaya
- ↑ Where women of India rule the roost and men demand gender equality" 'தி கார்டியன். January 18th 2011. Retrieved on June 6, 2015.
- ↑ Mawlynnong - the cleanest village of Asia பரணிடப்பட்டது 2016-06-04 at the வந்தவழி இயந்திரம், India-north-east.com
- ↑ Asia's Cleanest Village by EMMRC K, 2013-06-21, பார்க்கப்பட்ட நாள் 2015-04-20