மாஸ்டர் செஃப் தமிழ்

மாஸ்டர் செஃப் தமிழ் என்பது சன் தொலைக்காட்சியில் 7 ஆகத்து 2021ஆம் ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சமையல் போட்டி நிகழ்ச்சி ஆகும். இது ஆஸ்திரேலிய நாட்டில் ஒளிபரப்பான 'மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா' என்ற நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றி எண்டெமோல் ஷைன் குரூப் மற்றும் இன்னோவேடிவ் பிலிம் அகாடமி போன்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

மாஸ்டர் செஃப் தமிழ்
வகைசமையல் நிகழ்ச்சி
மூலம்மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா
வழங்கல்விஜய் சேதுபதி
நீதிபதிகள்
  • ஹரிஷ் ராவ்
  • ஆர்த்தி சம்பத்
  • கௌசிக் எஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்30
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எண்டெமோல் ஷைன் இந்தியா
இணை தயாரிப்பாளர்
சரவண பிரசாத்
படப்பிடிப்பு தளங்கள்புதுமையான திரைப்பட நகரம், பெங்களூர்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 45-55 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்எண்டெமோல் ஷைன் குரூப்
இணை தயாரிப்பு
இன்னோவேடிவ் பிலிம் அகாடமி
விநியோகம்சன் குழுமம்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 ஆகத்து 2021 (2021-08-07) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்மாஸ்டர் செஃப் ஹிந்தி
மாஸ்டர் செஃப் தெலுங்கு

இந்த நிகழ்ச்சியை பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி என்பவர் தொகுத்து வழங்குகின்றார்.[1][2] இந்த நிகழ்ச்சி முதலில் மே 2021 இல் ஒளிபரப்பப்படவிருந்தது, இருப்பினும் 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்றுநோய் காரணமாக இந்த நிகழ்ச்சி 7 ஆகஸ்ட் 2021 இல் ஒளிபரப்பப்பட்டது.[3][4]

பருந்துப்பார்வை தொகு

இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கலந்துகொள்ளவார்கள். மூன்று சமையல்கலை நிறுவனர்கள் மூலம் அவர்கள் தேர்ச்சி பெற்று அதில் ஒரு வெற்றியாளர் மாஸ்டர்ஷெஃப் பட்டத்தையும் 25 லட்சம் ரொக்கப் பரிசையும் பெறுவார்.[5][6]

பருவம் 1 தொகு

மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியின் முதல் பருவத்தை நடிகர் விஜய் சேதுபதி[7] என்பவர் தொகுத்து வழங்க, சமையல்கலை நிறுவனர்கள் ஆன ஹரிஷ் ராவ், ஆர்த்தி சம்பத் மற்றும் கௌசிக் எஸ் ஆகியோர் நீதிபதிகளாக உள்ளனர்.[8][9]

தயாரிப்பு தொகு

2021 இன் முற்பகுதியில் சன் குழுமத்தால் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மற்றும் மொழிகளுக்கான தயாரிப்பு உரிமையைப் பெற்றது.[10][11] அத்துடன் முதல் கட்டமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கத்து. தமிழில் இந்த நிகழ்ச்சி முதலில் மே 2021 இல் ஒளிபரப்பப்படவிருந்தது, இருப்பினும் 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்றுநோய் காரணமாக இந்த நிகழ்ச்சி 7 ஆகஸ்ட் 2021 இல் ஒளிபரப்பப்பட்டது.

தெலுங்கு மொழியில் நடிகை தமன்னா எனப்வர் தொகுத்து வழங்குகின்றார்.[12][13] ஜூன் 2021 இல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு சன் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் நடைபெற்றது.[14][15]

நிகழ்ச்சியின் பருவங்கள் தொகு

பருவங்கள் தொகுப்பாளர் நீதிபதிகள் முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு அத்தியாயங்கள் போட்டியாளர்கள் வெற்றியாளர் 2வது வெற்றியாளர் குறிப்பு
1 2 3
1 விஜய் சேதுபதி ஹரிஷ் ராவ் ஆர்த்தி சம்பத் கௌசிக் எஸ் 7 ஆகத்து 2021 14 நவம்பர் 2021 30 14 தேவகி விஜயராமன் நித்யா பிராங்க்ளின் [16][17][18]

சர்வதேச ஒளிபரப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "'MasterChef Tamil' will make you think: Vijay Sethupathi". தி இந்து (in ஆங்கிலம்). 2021-07-12. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  2. "MasterChef Tamil to go on air from August on SUN TV; Actor Vijay Sethupathi to host". www.pinkvilla.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-12. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  3. "Abhi Tailor to MasterChef Tamil: TV shows which were affected by Covid-19 second wave". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
  4. "'Masterchef Tamil' set for an appetising journey in August". New Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  5. "Vijay Sethupathi and Tamannaah start shooting for MasterChef Tamil and Telugu". www.updatenews360.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-28. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  6. "MasterChef Tamil: Here's what we know about the Vijay Sethupathi-hosted show so far". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
  7. "Vijay Sethupathi set to host MasterChef Tamil". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  8. "Aarthi Sampath, Harish Rao and Koushik S to judge Vijay Sethupathi's MasterChef Tamil". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-14. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
  9. "Watch: Vijay Sethupathi and Tamannaah Bhatia in fun 'MasterChef Tamil' promo". www.thenewsminute.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-30. பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
  10. "MasterChef Tamil Promo: Vijay Sethupathi opts for a traditional look as he gears up to host the cooking show". www.pinkvilla.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-02. Archived from the original on 2021-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  11. "'MasterChef Australia' season 13 releases in Indian languages". www.wionews.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-02. பார்க்கப்பட்ட நாள் 2021-07-13.
  12. "Tamannaah Bhatia shares BTS photo from MasterChef India Telugu, writes 'coming soon'". The Indian Express (in ஆங்கிலம்). 2021-06-27. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
  13. "Tamannaah makes TV debut as MasterChef Telugu presenter". Deccan News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-16. Archived from the original on 2021-06-28. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
  14. "Vijay Sethupathi And Tamannaah Bhatia Team Up For MasterChef Promo Shoot". www.filmibeat.com (in ஆங்கிலம்). 2021-06-30. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
  15. "MasterChef Tamil is one of the most exciting projects in my career: Actor-host Vijay Sethupathi". Times Of India (in ஆங்கிலம்). 2021-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-28.
  16. "Vijay Sethupathi to host 'MasterChef Tamil'". தி இந்து (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
  17. "Meet the judges of the highly anticipated 'MasterChef Tamil' which hits screens in August". www.indulgexpress.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-25.
  18. "Vijay Sethupathi hosted MasterChef Tamil show to premiere on August 7". Times Of India (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-07-30.
  19. "Shakthi TV Guide". shakthitv.lk.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்டர்_செஃப்_தமிழ்&oldid=3751370" இலிருந்து மீள்விக்கப்பட்டது