மா. எ. வாட்சு
மாரிசு எமிக்டியசு வாட்சு (Maurice Emygdius Watts) (1878 சூன் 11 - 1933 பிப்ரவரி 22) இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும், அரசு ஊழியரும் மற்றும் நிர்வாகியுமாவார். இவர் 1925 முதல் 1929 வரை திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றினார்.
மாரிசு எமிக்டியசு வாட்சு | |
---|---|
திருவிதங்கூரின் திவான் (பிரதம அமைச்சர்) | |
பதவியில் 1925–1929 | |
ஆட்சியாளர் | சேது லட்சுமி பாயி ( அரசப் பிரதிநிதி சித்திரை நிருநாள் |
முன்னையவர் | டி. இராகவய்யா |
பின்னவர் | வி. எஸ். சுப்ரமணிய ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருவிதாங்கூர் | 18 சூன் 1878
இறப்பு | 22 பெப்ரவரி 1933 இலண்டன் | (அகவை 54)
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுதிருவிதாங்கூர் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரான பிராங்க் வாட்சு என்பவருக்கு 1878 சூன் 11 அன்று வாட்சு பிறந்தார். [1] இவர் சென்னையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர், சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1901 இல் சென்னை மாகாண அரசுச் சேவையில் நுழைந்தார். [2]
இறப்பு
தொகுவாட்சு 1933 பிப்ரவரி 22 அன்று இலண்டனில் தனது 54 வயதில் இறந்தார். [2] திருவனந்தபுரம் நகரத்தின் நந்தன்கோடு புறநகரில் உள்ள ஒரு பகுதிக்கு வாட்சு குடும்பத்தின் நினைவாக பெயரிடப்பட்டது.
குடும்பம்
தொகுவாட்சின் சகோதரி டோரதியா என்ரியத் வாட்சு திருவாங்கூர் அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு ஆசிரியராக இருந்தார். [3] 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் குடியேறினார். அங்கு அவர் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களைக் கழித்தார்.