மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை
மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MS Swaminathan Research Foundation) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சென்னையில் இயங்கும் ஓர் இலாப நோக்கற்ற அரசு சார்பற்ற அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளையானது கிராமப்புறங்களில் ஏழைப் பெண்களின் வேலைவாய்ப்பை நேரடியாக இலக்காகக் கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்கி ஊக்குவிக்கிறது. சமமான மற்றும் நிலையான சமூக மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் நிலைப்புத் தன்மைக்கு இவர்களின் செயற்பாட்டு முறைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகப்படுத்துகின்றன. மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இலச்சினை தொடர்ச்சியையும் மாற்றத்தையும், வெளிப்படையான-முடிவு, பல பக்க மற்றும் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியின் மாதிரியைத் தூண்டுவதற்கு அழைப்பு விடுப்பதையும் குறிக்கிறது.
வரலாறு
தொகுமா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை 1988ஆம் ஆண்டில் அறக்கட்டளையின் தலைவரான முனைவர் மா. சா. சுவாமிநாதனால் நிறுவப்பட்டது. 1970ஆம் ஆண்டில், நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் ச. வெ. இராமன், நிலையான வளர்ச்சியின் குறிக்கோள்களை உணர ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கும்படி சுவாமிநாதனைத் கேட்டுக்கொண்டார். இதுவே இப்போது "பசுமைப் புரட்சி" என்று குறிப்பிடப்படுகிறது. 1988ஆம் ஆண்டில், உலக உணவுப் பரிசைப் பெற்ற பிறகு, சுவாமிநாதன் மா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையைத் தொடங்க தனக்கு வழங்கப்பட்ட 200,000 அமெரிக்க டாலர் பரிசைப் பயன்படுத்தினார். சுவாமிநாதன் தற்போது சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தில் யுனெசுகோவின் தலைவராகவும், இந்திய வேளாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார்.[1] இந்த அறக்கட்டளைக்கு 1996 ஆம் ஆண்டில் நீலக் கிரகப் பரிசு வழங்கப்பட்டது/[2]
திட்டங்கள்
தொகுமா. சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஐந்து முதன்மையான திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.[3] அவை பின்வருமாறு:
- கரையோர அமைப்பு ஆராய்ச்சி,
- உயிரியற் பல்வகைமையும் உயிரி தொழில்நுட்பமும்
- சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் மற்றும் உணவு பாதுகாப்பு,
- பாலினம் மற்றும் மேம்பாடு,
- தகவல் நுட்பவியல்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ M. S. Swaminathan Research Foundation, about us பரணிடப்பட்டது 2007-02-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The Laureates 1996 | Blue Planet Prize". The Asahi Glass Foundation (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
- ↑ Gopalkrishnan Gita (2000), M.S. Swaminathan - "One Man’s Quest for a Hunger-Free World", Education Development Center, Inc "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2007-03-17. பார்க்கப்பட்ட நாள் 2007-03-17.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)