மிகை வளர்ச்சி

மிகை வளர்ச்சி (Hypertrophy) என்பது, உயிரணுக்கள் தமது பருமனில் அதிகரிப்பதால் இழையங்கள் அல்லது உறுப்புக்கள் அளவில் பெரிதாவதைக் குறிக்கும்[1][2]. மிகை வளர்ச்சி, மிகைப்பெருக்கத்திலிருந்து வேறுபடும். மிகை வளர்ச்சியில் உயிரணுக்களின் பருமன் அதிகரிக்கும் வேளை, மிகைப்பெருக்கத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கருத்தரிப்பின்போது, இயக்குநீரின் தூண்டலால் ஏற்படும் கருப்பைப் பருமன் அதிகரிப்பானது, கருப்பையகத்தில் ஏற்படும் மிகைப்பெருக்கம், மிகை வளர்ச்சி ஆகிய இரண்டினாலும் ஏற்படுவதாக இருக்கும்[3].

மிகை வளர்ச்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ம.பா.தD006984
மிகைப்பெருக்கத்திற்கும், மிகை வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்கும் விளக்கப்படம்.

ஏதாவது நோய் காரணமாக இதயத்தசையில் ஏற்படும் அதிகரிப்பு, உடல் கட்டுதல் காரணமாக எலும்புத்தசையில் ஏற்படும் அதிகரிப்பு போன்றனவும் மிகை வளர்ச்சியினால் ஏற்படும்[4].

தடய அறிவியல் நோக்கில் செய்யப்பட்ட, பிணக்கூறு ஆய்வு ஒன்றில், இதயத்தசையின் தடிமனைக் காட்டும் படம்

மேற்கோள்கள்

தொகு
  1. Access Medicine. "Cellular Pathology". McGraw-Hill Education. McGraw-Hill Global Education Holdings, LLC. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 5, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Access Medicine. "Understanding Cellular Adaptations". EpoMedicine. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 5, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Otto H. Schwarz, M.D. , William D. Hawker, B.S., M.D. (November 1950). "Hyperplasia and hypertrophy of the uterine vessels during various stages of pregnancy". American Journal of Obstetrics & Gynecology 60 (5): 967-976. doi:http://dx.doi.org/10.1016/0002-9378(50)90502-3. http://www.ajog.org/article/0002-9378(50)90502-3/abstract. 
  4. "Hypertrophy". Human Pathology. HumPath.com. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 5, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகை_வளர்ச்சி&oldid=2240937" இலிருந்து மீள்விக்கப்பட்டது