மிசாமீஸ் ஒக்சிடென்டல்

பிலிப்பீன்சின் வடக்கு மின்டன்னோவில் உள்ள ஒரு மாகாணம்

மிசாமீஸ் ஒக்சிடென்டல் (Misamis Occidental) என்பது பிலிப்பீன்சின் மின்டனவின், வடக்கு மின்டனவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இது 1959 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இதன் தலைநகரம் ஒரோகுயெட்டா ஆகும். இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஹெர்மினியா எம் ரமைரோ (Herminia M. Ramiro) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,055.22 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக மிசாமீஸ் ஒக்சிடென்டல் மாகாணத்தின் சனத்தொகை 602,126 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 60ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 47ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 290 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 26ஆம் மாகாணம் ஆகும். அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் 462 கிராமங்களும், 22 மாநகராட்சிகளும் உள்ளன.

மிசாமீஸ் ஒக்சிடென்டல்
மாகாணம்
மாகாண அமைவிடம்
மாகாண அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்வடக்கு மின்டனவு
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

மேற்கோள்கள் தொகு

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

மேற்கோள்கள் தொகு