மிசா பாரதி

இந்திய அரசியல்வாதி

மருத்துவர் மிசா பாரதி (Dr. Misa Bharti) (நீ யாதவ்) பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவியின் மகளாவர். 2014ஆம் ஆண்டில், இவர் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் தோல்வியுற்றார். இவரை வெற்றிகொண்டவர் பாஜகவில் சேர்ந்த ஆர்ஜேடி அதிருப்த்தியாளரான ராம் கிருபால் யாதவ் ஆவர். மிசா பாரதி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பாடலிபுத்ரா தொகுதியிலிருந்து சுமார் 38000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். 2016ஆம் ஆண்டு ஜீன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில்பீகாரைச் சேர்ந்த ராம் ஜெத்மலானியுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிசா பாரதி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்கவை, பீகார்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
8 ஜீலை 2016
முன்னையவர்பவன் குமார் வர்மா, ஜனதா தளம் (ஒருங்கிணைந்த)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்சைலேசு குமார் (தி.1999)
உறவுகள்Lalu Prasad Yadav (Father)
Rabri Devi (Mother)
Tejashwi Yadav (Sibling)
Tej Pratap Yadav (Sibling)
Tej Pratap Singh Yadav (Brother-in-law)
பிள்ளைகள்3

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

மிசா பாரதி 1976 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். உள்நாட்டு பாதுகாப்பு அவசரக்கால கால பராமரிப்பு சட்டத்தின்கீழ் (மிசா) லாலு சிறையில் அடைக்கப்பட்டதன் நினைவாக மிசா எனப் பெயரிடப்பட்டார். இவர் தனது பெற்றோரின் ஒன்பது குழந்தை. ஏழு மகள்களில் மூத்தவர். இவரது சகோதரர்கள் இருவர்.[2] மிசா 1993ஆம் ஆண்டில் டாடா ஸ்டீல் ஒதுக்கீட்டில் பாட்னா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மகப்பேறு மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்ற மிசா மருத்துவப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர் வரிசையில் இடம் பிடித்தார்.[3][4][5][6][7]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மிசா பாரதி 1999ஆம் ஆண்டு திசம்பர் 10ஆம் நாள் கணினி பொறியாளரான சைலேசு குமாரை மணந்தார்.[6] இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள், உள்ளனர். மிசா துடுக்கான மனநிலை உடையவராக அறியப்படுகிறது.[8]

அரசியல் வாழ்க்கை தொகு

மிசா பாரதி 2014 மக்களவைத் தேர்தலில் பாடலிபுத்ராவிலிருந்து இராச்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டார். லாலு யாதவின் நம்பகமான தோழரான இராம் கிருபால் யாதவிடம் தோற்றார். ஜூன் 2016ல் மாநிலங்களவைத் தேர்தலுக்கான ராச்டிரிய ஜனதா தளக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். பீகாரைச் சேர்ந்த ராம் ஜெத்மலானியுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] மிசா மீண்டும் 2019 மக்களவைத் தேர்தலில் பாடலிபுத்ராவில் மீண்டும் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான ராம் கிருபால் யாதவிடம் தோற்றார்.[10][7][11]

மேற்கோள்கள் தொகு

  1. "Piyush Goyal, Chidambaram, Suresh Prabhu, Sharad Yadav elected to Rajya Sabha". 3 June 2016. Archived from the original on 12 August 2017. பார்க்கப்பட்ட நாள் 25 October 2017 – via The Economic Times.
  2. Anand ST Das (11 July 2017). "Tej, Tejashwi and Misa: Here's all you need to know about Lalu’s children". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/nation/2017/jul/11/tej-tejashwi-and-misa-heres-all-you-need-to-know-about-lalus-children-1627350.html. பார்த்த நாள்: 15 June 2019. 
  3. "Misha pal in JD(U), may fight Tej in polls". Archived from the original on 2018-09-09. பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
  4. "Now, Laloo Yadav secures MBBS seat for his second daughter through backdoor". 27 April 1998 இம் மூலத்தில் இருந்து 2018-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180703221400/https://www.indiatoday.in/magazine/indiascope/story/19980427-now-laloo-yadav-secures-mbbs-seat-for-his-second-daughter-through-backdoor-826271-1998-04-27. 
  5. Ltd, Interaction One Pvt. "Seven things you didn’t know about Misa Bharti - Republic World" (in en-US). Republic World இம் மூலத்தில் இருந்து 2017-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107055218/http://www.republicworld.com/s/2815/seven-things-you-didnt-know-about-misa-bharti. 
  6. 6.0 6.1 "A marriage made in 1, Anne Marg". Archived from the original on 2018-07-03. பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
  7. 7.0 7.1 "Misa rumblings in Lalu paradise". The Telegraph. 21 November 2015. https://m.telegraphindia.com/states/bihar/misa-rumblings-in-lalu-paradise/cid/1328615. பார்த்த நாள்: 18 June 2019. 
  8. "Another double for grandfather Lalu". Archived from the original on 2018-07-04. பார்க்கப்பட்ட நாள் 2018-07-03.
  9. "P Chidambaram, Suresh Prabhu get straight road to RS, polls hot up in five states". Archived from the original on 29 June 2016. பார்க்கப்பட்ட நாள் 25 October 2017.
  10. "Lok Sabha elections 2019: Misa Bharti vs Ram Kripal Yadav in Pataliputra". The Telegraph. 23 May 2019. https://m.telegraphindia.com/india/lok-sabha-elections-2019-misa-bharti-vs-ram-kripal-yadav-in-patliputra/cid/1690829. பார்த்த நாள்: 18 June 2019. 
  11. "Patliputra". News 18. https://www.news18.com/lok-sabha-elections-2019/bihar/patliputra-election-result-s04p31/. பார்த்த நாள்: 18 June 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசா_பாரதி&oldid=3800641" இலிருந்து மீள்விக்கப்பட்டது