மிண்டனாவோ இருவாய்ச்சி

மிண்டனாவோ இருவாய்ச்சி
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
புசெரோடிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பெனிலோபிடிசு
இனம்:
பெ. அபினிசு
இருசொற் பெயரீடு
பெனிலோபிடிசு அபினிசு
டுவீடேல், 1877
வேறு பெயர்கள்

பெனிலோபிடிசு பாணினி அபினிசு

மிண்டனாவோ இருவாய்ச்சி

மிண்டனாவோ இருவாய்ச்சி (Mindanao hornbill)(பெனிலோபிடிசு அபினிசு), சில சமயங்களில் மிண்டனாவோ டாரிக்டிக் இருவாய்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தெற்கு பிலிப்பீன்சில் உள்ள மிண்டனாவோ, தினகட், சியர்காவோ மற்றும் பசிலன் ஆகிய இடங்களில் உள்ள மழைக்காடுகளின் விதானத்தில் காணப்படும். இது நடுத்தர-சிறிய இருவாய்ச்சி ஆகும். அனைத்து பிலிப்பீன்சு டாரிக்டிக் இருவாய்ச்சி வழக்கிலும் உள்ளது போல, இது பி. பானினியின் துணையினமாகக் கருதப்படுகிறது. சமர் இருவாய்ச்சி பெரும்பாலும் மிண்டானாவோ இருவாய்ச்சியின் துணையினமாகச் சேர்க்கப்படுகிறது.

துணை இனங்கள் தொகு

இரண்டு துணையினங்கள் உள்ளன:

  • பெ. அ. அபினிசு (பரிந்துரைக்கப்பட்ட துணையினம்). மிண்டனாவோ, தினாகத் மற்றும் சியர்கோ தீவுகளில் காணப்படுகிறது.
  • பெ. அபினிசு பாசிலானிகா. பசிலன் தீவில் காணப்படுகிறது.

நடத்தை தொகு

இது சமூகமானது மற்றும் பெரும்பாலும் இணையாகவோ அல்லது சிறிய குழுக்களாகவோ காணப்படுகிறது. இந்தப் பறவைகள் சத்தமில்லாத, இடைவிடாத தா-ரிக்-டிக் அழைப்பை வெளியிடுகின்றன. இவை அடர்த்தியான பசுமையானக் காடுகளில் இருப்பதால் இவற்றைக் கண்டுபிடிப்பது கடினம்.

உணவு தொகு

மிண்டனாவோ இருவாய்ச்சியின் முக்கிய உணவு பழம். இது பூச்சி, வண்டு, எறும்பு மற்றும் மண்புழுக்களை (அரிதாக) உண்ணும்.

வளரிடத்தில் தொகு

மிண்டனாவோ இருவாய்ச்சி சிற்றினத்தின் வகைப்பாட்டியல் சிக்கல்கள் காரணமாக மிண்டனாவோ இருவாய்ச்சி பெரும்பாலும் உயிரியல் பூங்காக்களில் பெனிலோபிடிசு பானினி என்று பெயரிடப்படுகிறது. இலண்டன் மிருகக்காட்சிசாலையில் பறவை ஒன்று இவ்வாறு பெயரிட்டு வைக்கப்பட்டிருந்தது. பிலிப்பீன்சுக்கு வெளியே மிண்டனாவோ இருவாய்ச்சிகள் மிகக் குறைவு. ஆங்காங்கு விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்கா பெண் பறவை ஒன்று உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2020). "Penelopides affinis". IUCN Red List of Threatened Species 2020: e.T61623294A184679044. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T61623294A184679044.en. https://www.iucnredlist.org/species/61623294/184679044. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிண்டனாவோ_இருவாய்ச்சி&oldid=3788600" இலிருந்து மீள்விக்கப்பட்டது