மிதப்பான்கள் (floaters) என்பவை கண்ணின் ஒளிபுகும் திண்நீர்ம விழிப் பின்புறத்தில் (vitreous humour) உள்ள படிவுகளைக் குறிக்கும். இவை, வெவ்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும், சேர்ப்புகளிலும், அசைதன்மைகளிலும், ஒளி விலகல் எண்களுடனும் காணப்படும்.[1][2] இளவயதில், விழிப்பின்புறம் ஒளிபுகக் கூடியதாக இருக்கிறது. ஆனால், வயதாக வயதாக அதில் ஒழுங்கின்மைகள் சிறிது சிறிதாக அதிகரிக்கின்றன. பலரது கண்களிலும் காணப்படும் பொதுவான மிதப்பான்கள் என்பவை நம் கண்களின் பின்புறம் உள்ள திண்நீர்ம பின்புறத்தில் நடக்கும் சீர்கேட்டு மாற்றங்களால் நடக்கிறது. மிதப்பான்களைக் கண்டுணரும் தன்மை "மையோடெசோப்சியா" (myodesopsia) என்று அழைக்கப்படுகிறது.[3] அல்லது பின்வரும் பெயர்களுடன் அழைக்கப்படுகின்றன: myodaeopsia, myiodeopsia, myiodesopsia.[1] அவை, "பறக்கும் பூச்சிகள்" என்று இலத்தீன் பொருளுடன் கூடிய Muscae volitantes என்ற பெயருடனும் அழைக்கப்படுகின்றன. மிதப்பான்கள் விழித்திரையில் ஏற்படுத்தும் நிழலின் காரணமாகவே நமது கண்களுக்குத் தெரிகின்றன[4] அல்லது சில சமயங்களில் அவற்றின் வழியே புகுந்து செல்லும் ஒளியின் விலகல் தன்மையால் தெரிகின்றன. அவை தனித்தோ கூட்டாக சேர்ந்தோ அல்லது பலவற்றுடன் சேர்ந்தோ ஒருவரது பார்வைப் புலனில் தெரியலாம். அவை புள்ளிகளாகவோ, நூல் போன்றோ, சிலந்திவலையின் பகுதிகள் போன்றோ பார்ப்பவரின் கண்களில் மிதந்து தோன்றும்.[2] இவை கண்களுக்குள்ளாகவே இருப்பதால் இவை ஒளியியற் கண்மாயம் (optical illusion) கிடையாது. ஆனால், இவை கண்ணோடு தோன்றும் நிகழ்வாகும்.

மிதப்பான்
Floater
நீல வானத்தின் முன்னாள் பாவனையாக்கப்பட்ட மிதப்பான்கள்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகண்ணியல்
ஐ.சி.டி.-10H43.9
ஐ.சி.டி.-9379.24
நோய்களின் தரவுத்தளம்31270
மெரிசின்பிளசு002085

இதனையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Cline D; Hofstetter HW; Griffin JR. Dictionary of Visual Science. 4th ed. Butterworth-Heinemann, Boston 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-9895-0
  2. 2.0 2.1 "Facts about floaters". National Eye Institute. December 2007. Archived from the original on 2008-04-23. பார்க்கப்பட்ட நாள் February 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. கிரேக்கத்திலிருந்து μυιώδης பரணிடப்பட்டது 2013-04-16 at Archive.today "fly-like" (Myiodes was also the name of a fly-deterring deity) and ὄψις "sight."
  4. American Academy of Ophthalmology. "Floaters and Flashes: A Closer Look" (pamphlet) San Francisco: AAO, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56055-371-5

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதப்பான்&oldid=3792179" இலிருந்து மீள்விக்கப்பட்டது