மின்னாம்பள்ளி ஊராட்சி, புதுச்சத்திரம்
மின்னாம்பள்ளி ஊராட்சி (Minnampalli Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3] இந்த ஊராட்சி, நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [4] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.
மின்னாம்பள்ளி | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். உமா, இ. ஆ. ப |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | நாமக்கல் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | நாமக்கல் |
சட்டமன்ற உறுப்பினர் |
பி. இராமலிங்கம் (திமுக) |
மக்கள் தொகை | 15,831 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள புதன்சந்தையிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் சாலையில் இரண்டு கல் தொலைவில் இவ்வூர் அமைந்திருக்கிறது. பள்ளி என்னும் பொதுக்கூறு இதன் பெயரில் உள்ளது. பள்ளி என்பதற்குக் காரணம் சமண முனிவர்கள் வசித்த இடம் எனவும் கால்நடைகள் நிறைந்திருந்த இடம் எனவும் இருவகையாகக் குறிப்பிடுவர். மின்னாம் என்பதை மின்+ஆம் எனப் பிரிக்கலாம். மின் எனில் மின்னமரம் எனக் குறிக்கப்படும் ஒரு மரத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மின்னமரங்கள் நிறைந்திருந்த ஊர் என்பதால் இந்தச் சிறப்புக்கூறு உருவாகியிருக்கலாம். இங்கு உடையார், பறையர், அருந்ததியர், கொங்கு வேளாளக் கவுண்டர் ஆகிய சாதியினர் மிகுதியாக வசிக்கின்றனர். இவ்வூரில் முக்கியத் தொழில் உழவே ஆகும். சேகோ பேக்டரி எனப்படும் ஜவ்வரிசி ஆலைகள் நான்கு உள்ளன. மாரியம்மன், காமாட்சியம்மன், அங்காள பரமேஸ்வரி எனப்படும் பெரியாண்டவன் ஆகிய கடவுள்களின் கோயில்கள் உள்ளன. சிறப்பான கலையரங்கம் ஒன்று இங்கு செயல்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது.
அடிப்படை வசதிகள்
தொகுதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[4]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 170 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 12 |
கைக்குழாய்கள் | 10 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 15 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | 1 |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 38 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 5 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 7 |
விளையாட்டு மையங்கள் | 1 |
சந்தைகள் | 1 |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 24 |
ஊராட்சிச் சாலைகள் | 17 |
பேருந்து நிலையங்கள் | |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 14 |
சிற்றூர்கள்
தொகுஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[5]:
- நைனாமலை பள்ளிப்பட்டி
- சாத்தநாய்க்கனூர்
- மின்னாம்பள்ளி
- அண்ணா நகர்
- இருளப்பட்டி
- கொண்டமநாய்க்கனூர்
- சந்தைபேட்டை
- கணவாய்பட்டி
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ 4.0 4.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.