மியாட் மருத்துவமனை

சென்னையில் உள்ள தனியார் பன்னோக்கு மருத்துவமனை

மியாட் மருத்துவமனை (MIOT Hospital) அல்லது மியாட் பன்னாட்டு மருத்துவமனை (MIOT International Hospital) என்று பரவலாக அறியப்படும் எலும்பியல் மற்றும் காயவியலுக்கான மெட்ராஸ் நிறுவனம் (Madras Institute of Orthopaedics and Traumatology) என்பது இந்தியாவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஒரு பன்னோக்கு மருத்துவமனை. இது மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், இடைநுழை இதயவியல், எலும்பியல், காயவியல் ஆகியவற்றுக்கான சிறப்பு மருத்துவமனையாகும். பி. வி. ஏ. மோகன்தாஸ், இந்த மருத்துவமனையை 1999 பிப்ரவரியில், பதினான்கு (14) ஏக்கர் (5.7 ஹெக்டேர்) நிலத்தில், ரூ 500,000 ஆரம்ப முதலீட்டில் ஜெர்மன் ஒத்துழைப்புடன் நிறுவினார்.[1] இந்த மருத்துவமனையில் 1000 படுக்கைகள் உள்ளன, 170 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.[2] ஒவ்வோராண்டும் கிட்டத்தட்ட 3,500 வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது மருத்துவமனையின் மொத்த நோயாளிகளில் இருபத்தைந்து (25%) விழுக்காடாகும். வெளிநாட்டு நோயாளிகளில் பெரும்பாலானோர் வடக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.[3]

மியாட் மருத்துவமனை
அமைவிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள் 13°1′16.392″N 80°11′8.830″E / 13.02122000°N 80.18578611°E / 13.02122000; 80.18578611
மருத்துவப்பணி தனியார்
நிதி மூலதனம் தனியார்
வகை பன்னோக்கு
அவசரப் பிரிவு தொடர்பு 105710
படுக்கைகள் 1000
நிறுவல் பிப்ரவரி 1999
வலைத்தளம் மியாட் பன்னாட்டு மருத்துவமனை {{{Name}}}
பட்டியல்கள்

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியாட்_மருத்துவமனை&oldid=3817893" இலிருந்து மீள்விக்கப்பட்டது