மியான்மரின் வரலாறு

மியான்மரின் வரலாறு (பர்மா எனவும் அழைக்கப்படுகிறது) என்பது பர்மாவில் 13000 ஆண்டுகளுக்கு முன்னர் அறியப்பட்ட மனித குடியேற்றங்களின் காலம் முதல் தற்போதை காலம் வரையிலான வரலாற்றுக் காலத்தை உள்ளடக்கியது. பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின்படி, பர்மாவின் முந்தைய குடியேறிகள் திபெத்திய-பர்மிய மொழி பேசும் மக்களாவர். அவர்கள் பியூ நகரங்களுக்குத் தெற்கே பியாயி வரையில் வாழ்ந்துவந்தனர். அம்மக்கள் தேரவாத புத்தமத்தை ஏற்றுக்கொண்டனர்.

மற்றொரு குழுவான பாமர் மக்கள், 9 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டத்தில் ஐராவதி பள்ளதாக்கினுள் நுழைந்தனர். இவர்கள் பாகன் இராச்சியத்தை (1044–1287) உருவாக்கினார்கள். ஐராவதி கணவாய் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அப்போது முதல்முறையாக ஒன்றிணைக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில், பர்மிய மொழி மற்றும் பாமர் கலாச்சாரமானது, பியூவிற்கு மாற்றாக மெதுவாக மாறத் தொடங்கியது. 1287 ஆம் ஆண்டின் முதல் மங்கோலியப் படையெடுப்பிற்குப் பிறகு பல சிறிய இராச்சியங்களான அவா இராச்சியம், ஹன்தாவாடி இராச்சியம், மராக் யு இராச்சியம் மற்றும் ஷான் மாநிலம் என்பவை முக்கிய சக்திகளாக மாறி அந்தப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. அவை அடிக்கடி கூட்டணிகளை மாற்றி தோடர்ந்து போர்களில் ஈடுபட்டன.

16 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில், தான்கோ வம்சம் (1510-1752) நாட்டை மறுசீரமைத்து, குறுகிய காலத்திற்குள் தென்கிழக்கு ஆசிய வரலாற்றில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியது. பின்னர் தான்கோ மன்னர்கள் பல முக்கிய நிர்வாக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய ஆரம்பித்தனர், இதனால் 17 ஆம் நூற்றாண்டு மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிறிய, அமைதியான மற்றும் வளமான இராச்சியம் உருவாகியது.

18 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், கோன்பாங் வம்சம் (1752-1885) இராச்சியத்தை கைப்பற்றியது, மற்றும் தான்கோ வழியில் சீர்திருத்தங்களை தொடர்ந்ததால் வெளிப்புற மண்டலங்களில் மத்திய ஆட்சி அதிகரித்தது. மேலும் ஆசியாவில் அதிக கல்வியறிவுள்ள நாடுகளில் ஒன்றாக மாறியது. இந்த கோன்பாங் வம்சம் அனைத்து அண்டை நாடுகளுடனும் போரிட்டது. இதன் விளைவாக ஆங்கிலேய-பர்மியப் போர்கள் (1824-85) இறுதியில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு வழிவகுத்தன.

பிரித்தானிய ஆட்சியில் பல சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் நிர்வாக மாற்றங்களை கொண்டுவந்தது, இவர்கள் காலத்தில் விவசாய சமுதாயத்தினராக இருந்த பர்மிய மக்களின் நிலையை மாறியது. மிக முக்கியமாக, பிரித்தானிய ஆட்சி நாட்டின் எண்ணற்ற இனக் குழுக்களிடையே உள்ள வேறுபாடுகளை வெளிப்படுத்தியது. 1948 ஆம் ஆண்டில் பர்மா சுதந்திரம் பெற்றதில் இருந்து, பல்வேறு அரசியல் மற்றும் சிறுபான்மை குழுக்கள் மற்றும் மத்திய அரசாங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிளர்ச்சி குழுக்களை உள்ளடக்கிய மிக நீண்ட தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்களை சந்தித்தத நாடாகும். பர்மிய நாடு 1962 ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை பல்வேறு வழிகாட்டுதலின் கீழ் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. இதன் காரணமாக உலகில் குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக மியான்மர் உள்ளது.

முன்வரலாறு (9ஆம் நூற்றாண்டிற்கு முன்)

தொகு

முன்வரலாறு

தொகு

துவக்கக்கால தொல்பொருள் சான்றுகளின்படி பர்மாவில் கி.மு. 11,000- காலகட்டத்தின் ஆரம்பத்தில் மக்கள் இருந்தனர் எனக் கூறுகிறது. ஆரம்பகால குடியேற்றத்தின் பெரும்பாலான அறிகுறிகள் மத்திய உலர்ந்த மண்டலத்தில் காணப்படுகின்றன, அங்கு ஐராவதி ஆற்றின் அருகே உள்ள இடங்களில் பலச் சான்றுகள் சிதறிக் கிடக்கின்றது. ஐரோப்பாவில் கீழ் மற்றும் மத்திய பாலோலிதீகிக்கு இணையாக கருதப்பட்ட காலத்தில், பர்மாவில் கற்கால மக்கள் என்று கருதப்பட்ட அந்யாதியான் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.நியோலிதிக் அல்லது புதிய கற்காலத்தை சார்ந்தது என்று நம்பத்தகுந்த சான்றுகளாக, கி.மு. 10000 முதல் 6000 வரையான காலப்பகுதியில் இருந்த தாவரங்களின் படிமங்கள் மற்றும் பளபளப்பான கல் கருவிகள், பர்மாவின் தாங்கியி பகுதிக்கு அருகில் ஷான் பீடபூமியின் விளிம்பில் உள்ள மூன்று குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[1]

சுமார் கி.மு.1500 ஆம் ஆண்டில், பர்மிய மக்கள் தாமிரத்தை வெண்கலமாக மாற்றும் திறன் பெற்றிருந்தனர், மேலும் விவாசயம் செய்து, நெல் பயிர் செய்து, அரிசி அறுவடை செய்தனர் மற்றும் கோழிகளையும் பன்றிகளையும் வீட்டு விலங்குகளாக மாற்றம் செய்து வளர்த்தனர்; உலகத்தில் முதல் முறையாக பர்மிய மக்கள் மட்டுமே இவ்வாறு வாழ்ந்திருக்கின்றனர். கி.மு.500 ஆண்டுக்குள், இன்றைய மண்தாலே பிரதேசத்தின் தெற்கில், இரும்புத் தொழிலில் செய்யும் கொல்லர்களின் குடியேற்றங்கள் உருவாகின. வெண்கலத்தால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகள் மற்றும் மண் பாண்டங்களில் நிரப்பப்பட்டடு புதைக்கப்பட்ட பல இறந்த உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.[2] கி.மு. 500 முதல் கி.மு. 200 வரை உள்ள காலத்தில் நெற்பயிர் செய்யும் பர்மிய குடியேற்றங்கள், சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததாக மண்தாலே தெற்குப் பகுதியில் இருக்கும் சமோன் பள்ளத்தாக்கு பகுதியில் கிடைக்கப் பெற்ற தொல்பொருள் ஆதாரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.[3] சமோன் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளின் மூலம் கிடைக்கப் பெற்ற இரும்புக் காலத்தின் சான்றுகளில், பர்மிய மக்களிடையே இந்திய கலாச்சாரத்தின் தாக்கத்தை உணர முடியும். இறந்த குழந்தைகளின் சடலங்களை ஜாடிகளில் அடக்கம் செய்யும் முறையில் இந்தத் தாக்கத்தை நாம் உணர முடியும். மேலும் அப்படி அடக்கம் செய்யப்பட பயன்படுத்திய பொருள்களின் அளவைக் கொண்டு அந்த குடும்பத்தின் மதிப்பையும் வளத்தையும் அளவிட முடியும்.[4]

மொன் இராச்சியம்

தொகு

காலனித்துவ சகாப்த ஆய்வுகளின் படி, 6 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மொன் என்று அழைக்கப்பட்ட மற்றொரு இன மக்கள், தற்போதைய நவீன கால தாய்லாந்தில் இருந்து ஹரிபூஞ்ஜியா மற்றும் தவரவாதி போஎற மொன் இராச்சியங்களிலிருந்து இன்றைய கீழ் பர்மாவில் நுழைந்ததாக அறியப்படுகிறது. 9 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பெகு மற்றும் தட்டோன் நகரங்களை மையமாக கொண்டு மொன் மக்கள் இரண்டு சிறிய இராச்சியங்களை (அல்லது இரண்டு பெரிய நகரங்கள்) உருவாக்கினர். அராபிய புவியியலாளர்களாலின் குறிப்பின் படி மொன் இராச்சியம் கி.மு. 844–848 ஆண்டுகளில் கீழ்ப் பகுதி பர்மாவில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளது.[5] ஆனால் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கீழ்ப் பகுதி பர்மாவில் மொன் மொழிப் பேசும் மக்கள் இருந்தனர் என்ற காலனித்துவ கால கருத்துக்களை ஆதரிக்க எந்தவொரு ஆதாரமும் (தொல்பொருள் அல்லது வேறு) இல்லை என்று சமீபத்திய ஆய்வுகளின் முடிவுகள் காட்டுகிறத மற்றும் 1492 ஆம் ஆண்டில் தான் தட்டோன் இராச்சியம் இருந்ததற்கான சான்றுகள் முதல் முதலாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Cooler 2002: Chapter 1: Prehistoric and Animist Periods
  2. Myint-U 2006: 45
  3. Hudson 2005: 1
  4. Coupey, A. S. (2008). Infant and child burials in the Samon valley, Myanmar. In Archaeology in Southeast Asia, from Homo Erectus to the living traditions: choice of papers from the 11th International Conference of the European Association of Southeast Asian Archaeologists, 25–29 September 2006, Bougon, France
  5. Hall 1960: 11–12
  6. See (Aung-Thwin 2005).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மியான்மரின்_வரலாறு&oldid=3925563" இலிருந்து மீள்விக்கப்பட்டது