மிருணாளினி தேவி புவார்
மிருணாளினி தேவி புவார் (Mrunalini Devi Puar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். 35,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட ஓர் இந்திய பல்கலைக்கழகத்தின் முதல் பெண் வேந்தர் என்ற சிறப்புக்கு உரியவர் ஆவார்.
குசராத்தில் பரோடா பல்கலைக்கழகத்தில் மட்டுமே மாநிலத்தின் ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக இல்லாமல் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பல்கலைக்கழக வேந்தராக இருக்கிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபிரித்தானிய இராச்சியத்தின் ஆட்சிக் காலத்தில் இருந்த தார் மாநிலத்தில் புவார் ஒரு கல்வியாளராகவும் மகாரணியாகவும் இருந்தார். பரோடா மாநிலத்தின் முன்னாள் ஆளும் குலமான கெய்க்வாட் வம்சத்தின் உறுப்பினராகவும், முன்னாள் மராட்டிய சமசுதான மாநிலங்களான தார் மாநில புவார் வம்சத்தின் உறுப்பினராகவும் இருந்தார். தார் மாநிலத்தின் நான்காம் மகாராசாவான ஆனந்த் ராவ் புவாரை மணந்து கொண்டார். பரோடாவின் மகாராசா சாயாசிராவ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தார். 1988 ஆம் ஆண்டு பரோடா மகாராசாவாக இருந்த இவரது சகோதரர் ஃபதேசிங்ராவ் கெய்க்வாட், இறந்த பிறகு மிருணாளினி தேவி வேந்தராக பதவிக்கு வந்தார்.
பயிற்சி மூலம் ஓர் உணவியல் நிபுணராக புவார் மகாராஜா சயாசிராவ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்காவில் அயோவா மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றார்.
பின்னர் இவர் முனைவர் பட்டத்தை முடிப்பதற்காக இந்தியாவின் வதோதராவுக்குத் திரும்பினார். பரோடாவின் மகாராசா சாயாசிராவ் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [1]
மகாராசா சாயாசிராவ் பல்கலைக்கழகத்தின் அதிபர் உட்பட கல்விப் பணி மூலம் கெய்க்வாட் குடும்பத்தின் புகழ்பெற்ற கல்விச் சேவை பாரம்பரியத்தை புவார் தொடர்ந்தார். புவார் பல்கலைக்கழகத்தின் அதிபராக 1988 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். 35,000 பேருக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட ஓர் இந்திய பல்கலைக்கழகத்தின் முதல் பெண் அதிபராக ஆனார்.
சுவிட்சர்லாந்தின் இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றிய கல்வி மற்றும் பயிற்சிக்கான ஆணையத்தின் உறுப்பினராகவும், பிரான்சு நாட்டைச் சேர்ந்த வீட்டுப் பொருளாதாரத்திற்கான சர்வதேச கூட்டமைப்பின் உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
இந்திய அரசின் ஊட்டச்சத்து, திட்டக் குழுவிலும், புது தில்லியின் வீட்டுப் பொருளாதாரக் கழகத்தின் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். சமகால ஆய்வுகளுக்கான இராசீவ் காந்தி நிறுவனம், புதுதில்லியின் இராசீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
பரோடாவின் மகாராஜா சாயாசிராவ் பல்கலைக்கழகத்தில் இவர் அதிபராக வருவதற்கு முன்பு சுமார் 12 ஆண்டுகள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். அரி சிங் மற்றும் அர்ச்சூன் சிங் ஆகியோர் மிருணாளினி தேவி புவாருடன் தொடர்புடையவர்கள். அவர்களின் தாயார், சசி பிரபா ராசே தார்ர் மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும் தார் மாநிலத்தின் த தைரியசில் ராவ் புவரின் மகளும் ஆவார்.
மிருணாளினி தேவியின் ஆராய்ச்சி கட்டுரைகள் பல தேசிய மற்றும் சர்வதேச பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளன.
புவார் உடல்நலக்குறைவு காரணமாக 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 அன்று இறந்தார். அப்போது இவருக்கு வயது 83. [1] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Mrunalini Devi Puar, Chancellor of M S University of Baroda, passes away". netindian.in. 2 January 2015. Archived from the original on 13 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)"Mrunalini Devi Puar, Chancellor of M S University of Baroda, passes away" பரணிடப்பட்டது 2016-03-13 at the வந்தவழி இயந்திரம். netindian.in. 2 January 2015. Retrieved 2 January 2015. - ↑ "PM Modi condoles passing away of MSU Chancellor Dr. Puar". business-standard.com. 2 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015."PM Modi condoles passing away of MSU Chancellor Dr. Puar". business-standard.com. 2 January 2015. Retrieved 2 January 2015.
புற இணைப்புகள்
தொகு- பரோடா கெய்க்வாட் வம்சம்பரோடா இணையதளத்தில் சுயவிவரம் பரணிடப்பட்டது 2015-02-06 at the வந்தவழி இயந்திரம்