மிர்சாபூர் கல்வெட்டு
மிர்சாப்பூர் கல்வெட்டு (Mirzapur stele inscription, also called the Mirjāpur stele inscription), மதுராவை தலைநகராகக் கொண்டு வட இந்தியாவை ஆண்ட மேற்கு சத்திரபதி மன்னர் சோடசா[1][2][3] ஆட்சிக் காலத்தில் மூலவாசு என்பவரும், அவரது மனைவி கௌசிகி சேர்ந்து, மதுராவிற்கு அருகில் மிர்சாபூரில் எழுப்பிய குளத்தைக் குறித்து இக்கல்வெட்டு எடுத்துரைக்கிறது. இக்கல்வெட்டு சமசுகிருத மொழியில் பிராமி எழுத்தில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டின் காலம் கிபி 15-ஆம் ஆண்டாகும்.
மிர்சாப்பூர் கல்வெட்டு, மதுரா அரசு அருங்காட்சியகம் | |
செய்பொருள் | செம்மணற்கல் |
---|---|
காலம்/பண்பாடு | கிபி 15 |
இடம் | மிர்சாபூர், மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
தற்போதைய இடம் | மதுரா அரசு அருங்காட்சியகம், GMM 79.29 |
கல்வெட்டின் சுருக்கம்
தொகுமிர்சாபூர் கல்வெட்டு, மதுரா அருகில் ஒரு குளம் வெட்டியதை குறிக்கிறது. இக்கல்வெட்டு சமசுகிருத மொழியில் பிராமி எழுத்தில் கீழ்கண்டவாறு ஐந்து வரிகள் கொண்டது.
- ஸ்வாமிஸ்ய மஹாக்ஷத்ரபஸ்ய சோடஸஸ்ய கம்ஜவரஸ்ய ப்ராஹ்மணஸ்ய ।
- ஸேக்ரவாஸ கோத்ரஸ்ய மூலவஸுஸ்ய பர்யயே வசுஸ்ய மாதரே ।
- கௌசிகியே பக்சகாயே கரிதா புஸ்கரிணி இமாசம் யமதா பு
- ஸ்கரணிநாம் பூர்வ புஷ்கரணி ஆராமோ சபா உதாபநோ ஸ்தம்போ சிரியே ப்ரதிமா
- யே சிலா பட்டோ ஸா
கல்வெட்டின் தமிழாக்கம்: "வாசுவின் தாயும், ஸ்வாமி மஹாக்ஷத்ரப ஷோடசப் பொருளாளருமான மூலவாசுவின் மனைவியுமான கௌசிகி பக்சகாவும் (இவர்) சைக்ரவ கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணரும், இரட்டைக் குளங்களுக்கு வெளியே கிழக்கில் நீர்க்குளத்தை எழுப்பச் செய்தார். தோப்பு அல்லது தோட்டம் ஒன்றுகூடும் இடம், கிணறு, ஒரு தூண் மற்றும் இலக்குமி உருவத்தைக் கொண்ட கல் பலகை இது. "வாசுவின் தாயும், சுவாமி மகாசேத்திர சோடசாவின் கருவூல அதிகாரி மூலவாசுவின் மனைவியுமான கௌசிகி பக்சகாவும் (இவர்) சைக்ரவ கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணரும், இரட்டைக் குளங்களுக்கு வெளியே கிழக்கில் ஒரு நீர் நிலையை எழுப்பச் செய்தார். தோப்பு அல்லது தோட்டம், ஒன்றுகூடும் இடம், கிணறு, ஒரு தூண் மற்றும் லட்சுமி உருவம் கொண்ட கற்பலகை.[2][3]
இக்கல்வெட்டில் மேற்கு சத்திரபதி மன்னர் சோடசாவின் விருது பெயர் சுவாமி மகாசேத்திர சத்திரபதி என்றும், அவரது ஆட்சிக் காலமான கிபி 15-ஆம் ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது எனத்தெளிவாக கூறப்படுகிறது:[1][2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Sharma, Ramesh Chandra (1984). Buddhist art of Mathurā (in ஆங்கிலம்). Agam. p. 26.
- ↑ 2.0 2.1 2.2 Quintanilla, Sonya Rhie (2007). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE (in ஆங்கிலம்). BRILL. pp. 259–260. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-15537-4.
- ↑ 3.0 3.1 Epigraphia Indica (in ஆங்கிலம்). Manager of Publications. 1986.