மிர்மெகோபாகி
மிர்மெகோபாகி (Myrmecophagy) என்பது கரையான் அல்லது எறும்புகளை உணவாக உண்ணும் நடத்தை ஆகும். பெரும்பாலும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் விலங்குகள் கறையான்களையும் எறும்புகளையும் உண்ணுகின்றன. மிர்மெகோபாகி என்றால் "எறும்பு உண்ணுதல்" (பண்டைய கிரேக்கம்: murmēx , "எறும்புகள்" மற்றும் phagein , "சாப்பிடுவது") என்பதும். கறையான்கள் உண்ணுபதை டெர்மிட்டோபாகி என்கின்றனர். எவ்வாறாயினும், இந்த இரண்டு பழக்கவழக்கங்களும் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தது. ஏனெனில் இந்த இரண்டு சமூக பூச்சிகளும் பெரும்பாலும் எண்ணிக்கையில் அதிகமாகவும் அடர்த்தியான மக்கள்தொகையினையும் கொண்ட கூடுகளில் வாழ்கின்றன. இந்தப் பண்பினை வேட்டையாடும் விலங்குகள் பயன்படுத்திக்கொள்கின்றன.[1]
முதுகெலும்பிகள்
தொகுஎறும்புகள் மற்றும் கறையான்களை உணவாக உட்கொள்வது ஏராளமான நில வாழ் உயிரிகளில் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வன. கொம்பு பல்லிகள், குருட்டுப் பாம்புகள், கூர்வாய்த் தவளைக் குடும்பத்தினைச் சார்ந்த தேரைகள் மற்றும் நச்சுத் தவளைகள். பல புதிய உலக பறவை பறவைகளிலும் இப்பழக்கம் காணப்படுகிறது. இவற்றுள் முக்கியமானவை எறும்பு பறவை, ஆண்ட்பேர்ட்ஸ், ஆண்ட்த்ரசசு, ஆண்ட்பிட்டாசு, கோலாப்டெசு பேரின பறவைகள். பாலூட்டிகளில் எறும்புண்ணி, ஆர்ட்வாக், ஆர்ட்ஒநாய், நல்லங்கு,முள்ளம்பன்றி, நம்பாடு மற்றும் தேன்கரடி (அசையாக் கரடி) முதலியவற்றுடன் பல்வேறு வாழும் மற்றும் அழிந்து போன பாலூட்டிகள்.
மிர்மோகோபாகி முறையில் உணவூட்ட முறைகொண்ட தொடர்பில்லாத பாலூட்டிகள் இந்த உணவு முறைக்கேற்ற தழுவல்களைக் கொண்டுள்ளன. தரையில் அல்லது மரத்தில் அல்லது மரப்பட்டைகளுக்கு அடியில் எறும்பு அல்லது கரையான் கூடுகளிலிருந்து தோண்டி இரையினை உண்ணுபதற்கு வசதியாக இந்த விலங்குகளின் முன் கரங்கள் நன்கு மாறுபாடடைந்துள்ளன. பெரும்பாலான விலங்குகளில் பற்களும் தாடைகளும் அளவில் குறைத்துள்ளன.எறும்பினை உண்ணும் விலங்குகள் நீண்ட, ஒட்டும் நாக்குகளைக் கொண்டுள்ளன. பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல விலங்கியல் வல்லுநர்கள் இந்த பகிரப்பட்ட பண்புகளின் அடிப்படையில் விலங்குகளைப் பாலூட்டியின் கீழ் எடென்டேட்டா வரிசையில் கொண்டுவந்தனர். இத்தகைய விலங்குகள் ஒற்றை வரிசையில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இத்தகைய வகைப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வது கடினம் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது. மேலும் பல அம்சங்களை ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சியின் எடுத்துக்காட்டாகக் காணும் போக்கு அதிகரித்தது. உதாரணமாக, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தி கேம்பிரிட்ஜ் நேச்சுரல் ஹிஸ்டரி, தொகுதி 10, பாலூட்டியில் , சில மாறுபட்ட அம்சங்களைப் பற்றி விவாதித்த பிராங்க் எவர்ஸ் பெடார்ட் "உண்மை என்னவென்றால், பல்வேறு மாறுபாடுடைய இந்த விலங்குகளைக் குறைந்தது இரண்டு தனித்தனி வரிசைகளில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றனர். இவை மாறுபட்ட பாலூட்டிகளின் குழுவின் வழித்தோன்றல்களாகும்."[2]
முதுகெலும்பிலிகள்
தொகுபொதுவாக, எறும்புகள் ஆபத்தானவை, சிறியவை, மற்றும் வெறுக்கத்தக்க மற்றும் தீங்கு விளைவிக்கும் வேதிச் சேர்மங்களைக் கொண்டவை என்பதால் அவை பிற முதுகெலும்பிகளை உணவாக உட்கொள்ளப்படுவதில்லை. இதனால் பல்வேறு எறும்பை ஒத்த உயிரிகள் எறும்பைப் போன்று ஒப்புமைப் போலி செய்கின்றன. இது முதுகெலும்பில்லாத உயிரிகளிடையே பாதுகாப்புக்கான ஒரு பொதுவான உத்தி. இருப்பினும், எறும்புகளின் எண்ணிக்கை ஏராளமாக உள்ளது. எனவே பல முதுகெலும்பற்ற உயிரிகள் எறும்புகளை உணவாக உட்கொள்கின்றன. எறும்புகளை உணவாக உண்ணும் விலங்குகளில் முக்கியமானவை குதிக்கும் சிலந்தி, மற்றும் ஓகோபிலிடே குடும்பச் சிலந்திகளாகும். சில சிலந்திகள், எறும்பு போன்று தோற்றமளிப்பதால் பேட்சின் போலியொப்புருவாக தோற்றமளித்து வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பையும், ஏராளமான உணவையும் பெறுகின்றன.[3]
ரெட்டுவிடே குடும்பத்தினைச் சார்ந்த ஹெட்டிராப்பிடிரா துணை வரிசையினைச் சார்ந்த ஹெமிப்பிடிரான் சிற்றினங்கள் பெரும்பாலும் எறும்புகளை உண்ணுகின்றன. இவற்றில் முக்கியமானவை பாரெடோக்ளா மற்றும் அக்கேந்தோசுபிசு.[4]
எறும்புகளை உணவாக உண்ணும் பூச்சிகளில் சில தரையில் ஊர்ந்து செல்லும் போது எதிர்கொள்ளும் சிறிய பூச்சிகளை உண்ணுபவைகளாக உள்ளன. இவற்றின் உணவில் பெரும்பங்காக எறும்புகள் உள்ளன. இவை சந்தர்ப்பவாத கொன்றுண்ணிகளாகும். குவி பரிணாமத்திற்கு குறிப்பிடத்தக்க உதாரணங்களாக கீழ்க்கண்ட சில இனங்கள் உள்ளன. நியுரோப்பிடிரன் வரிசையில் உள்ள மிர்மெலொண்டிடே குடும்பத்தினைச் சார்ந்த எறும்பு சிங்கங் எனப்படும் மிர்மெலோன் பேரின எறும்புகள், டிப்டிபிரன் குடும்பத்தினைச் சார்ந்த வெர்மிலெனிடேவில் லேம்புரோமையா மற்றும் வெர்மிலியோ பேரினத்தினைச் சார்ந்தவை. புழு சிங்கங்கள் எனப்படும் இத்தகைய இனங்கள் கூர்மையான குழி பொறிகளை மணல் அல்லது தூசியினைப் பயன்படுத்திக் கட்டுகின்றன. அடிப்பகுதியில் காத்திருக்கும் இந்தப் பூச்சிகள் குழிக்குள் விழும் இரையை உண்ணுகின்றன.[5]
மிர்மெகோபாகி முறை உணவூட்டத்தில் முதிர்ந்த எறும்புகளைச் சாப்பிடுவதை விட இளம் எறும்புகளை உண்ணுபதையே விருப்பமாக உள்ளது. நீலன் பட்டாம்பூச்சி குடும்ப வளர்நிலை இளம் உயிரியான கம்பளிப்பூச்சிகள் எறும்புகளின் குறிப்பிட்ட சிற்றின எறும்புகளின் முட்டை மற்றும் இளம் உயிரிகளை விரும்பிச் சாப்பிடுகின்றன.[6] சிர்பிடே குடும்ப மைக்ரோடான் பேரினம் ஈக்களின் இளம் உயிரிகள் எறும்புகளின் புற்றுகளின் அருகே தன் இளம் பருவத்தினைச் செலவிட்டு எறும்புகளின் இளம் உயிரிகளை உண்ணுகின்றன. சில வண்டுகள் குறிப்பிட்ட வகை எறும்புகளின் குஞ்சுகளை உணவாக உண்பதில் நிபுணத்துவம் பெற்றவையாக உள்ளன. உதாரணமாக பிரஞ்சு கயானவைச் சார்ந்த கரும்புள்ளிச் செவ்வண்டினமான டையோமசு தோராசிகசு இளம் உயிரிகள் வாசுமேனியா அரோபங்டேட்டாவினை உண்ணுகின்றன.[7]
எறும்புகள் மீது ஆதிக்கம் செலுத்தும் விலங்குகளில் ஒன்று பிற எறும்பு வகையான படை எறும்பு மற்றும் இவற்றின் நெருங்கிய இனங்களாகும். ஊசெரியா பைரோய் மற்றும் புதிய உலக இராணுவ எறும்பு நோமாமிர்மெக்சு எசென்பெகி, பிரத்தியேக எறும்புகள் உண்ணிகளாகும்.[8] இவை பிற எறும்புகளை மட்டுமே உண்ணுகின்றன. பிற எறும்புகளான எசிடான் புருச்செல்லி தான் செல்லும் வழியில் வரும் கணுக்காலிகளை உண்ணும்; அவற்றில் எறும்புகளும் அடங்கும். எறும்புகளின் அளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணவில் காணப்படும். முதிர்ந்த எறும்புகளை விடக் கூட்டுப்புழு மற்றும் இளம் உயிரிகள் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை என்பதால் அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ways of the Ant.
- ↑ Beddard, Frank Evers (1902). Harmer, Sir Sidney Frederic; Shipley, Arthur Everett; Gadow, Hans (eds.). Mammalia. The Cambridge Natural History. Vol. 10. Macmillan Company.
- ↑ Cushing, Paula E. (2012). "Spider-Ant Associations: An Updated Review of Myrmecomorphy, Myrmecophily, and Myrmecophagy in Spiders". Psyche 2012: Article ID 151989. doi:10.1155/2012/151989.
- ↑ Brandt, Miriam; Mahsberg, Dieter (February 2002). "Bugs with a backpack: the function of nymphal camouflage in the West African assassin bugs Paredocla and Acanthaspis spp.". Animal Behaviour 63 (2): 277–284. doi:10.1006/anbe.2001.1910.
- ↑ Wilson, Edward O. (2000). Sociobiology: the new synthesis. Harvard University Press. pp. 172–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-00089-6. பார்க்கப்பட்ட நாள் 24 May 2013.
- ↑ A Survey of the Last Instar Larvae of the Lycaenidae (Lepidoptera) of California.
- ↑ Vantaux, Amélie; Roux, Olivier; Magro, Alexandra; Ghomsi, Nathan Tene; Gordon, Robert D.; Dejean, Alain; Orivel, Jérôme (September 2010). "Host-Specific Myrmecophily and Myrmecophagy in the Tropical Coccinellid Diomus thoracicus in French Guiana". Biotropica 42: 622–629. doi:10.1111/j.1744-7429.2009.00614.x.
- ↑ Powell, Scott; Clark, Ellie (1 November 2004). "Combat between large derived societies: a subterranean army ant established as a predator of mature leaf-cutting ant colonies". Insectes Sociaux 51 (4): 342–351. doi:10.1007/s00040-004-0752-2.