மில்ட்ரெட் திரெசல்லாஸ்

மில்ட்ரெட் திரெசல்லாஸ் [1] ( ஸ்பீவாக்; நவம்பர் 11, 1930 - பிப்ரவரி 20, 2017),[2] ஐக்கிய அமெரிக்க அறிவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் "கார்பன் அறிவியல் அரசி" என அழைக்கப்படுகிறார்,[3] மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் நிறுவனப் பேராசிரியராகவும், இயற்பியல் மற்றும் மின்பொறியியல் துறையின் ஓய்வுபெற்ற பிறகும் பணியாற்றிய பேராசிரியராகவும் இருந்தவர்.[4] ஜனாதிபதியின் சுதந்திரப் பதக்கம், தேசிய அறிவியல் பதக்கம் , என்ரிகோ பெர்மி விருது மற்றும் வன்னேவர் புஷ் விருது உள்ளிட்ட பல விருதுகளை மில்ட்ரெட் திரெசல்லாஸ் வென்றுள்ளார்.

மில்ட்ரெட் திரெசல்லாஸ்
2012 இல் வெள்ளை மாளிகையில் மில்ட்ரெட் திரெசல்லாஸ்
பிறப்புமில்ட்ரெட் ஸ்பீவாக்
(1930-11-11)நவம்பர் 11, 1930
புரூக்ளின், U.S.
இறப்புபெப்ரவரி 20, 2017(2017-02-20) (அகவை 86)
கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைபயன்முறை இயற்பியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கிரிகோரி டிம்ப்
டெபோரா சங்க்
அறியப்படுவதுகார்பன் நானோகுழாய்
விருதுகள்
  • அறியலுக்கான தேசியப் பதக்கம் (1990)
  • ஐஇஇஇ நிறுவனப் பதக்கம் (2004)
  • தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிற்
  • கான ஹெயின்சு விருது (2005)
  • ஹரால்ட் முன்னோடி விருது(2006)
  • Oliver E. Buckley Condensed Matter Prize (2008)
  • ஓயர்ஸ்டெட் விருது (2008)
  • வன்னேவர் விருது (2009)
  • என்ரிக்கோ பெர்மி விருது(2012)
  • நானோ அறிவியலின் கால்வி பரிசு(2012)
  • சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது(2014)

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

மில்ட்ரெட் ஸ்பீவாக், 1930, நவம்பர் 11 ம் தேதி ப்ரூக்ளினில் பிறந்தார்,, இவரது தந்தை எதெல், தாயார் மேயர் ஸ்பீவக். இவர்கள் போலந்து நாட்டிலிருந்து வந்து குடியேறிய யூதர்கள் ஆவர்.[5][6]

பிராங்க்ஸில் வளர்க்கப்பட்ட திரெசெல்லாஸ் ஹானர் கல்லூரி உயர்நிலை பள்ளியில் தனது உயர்நிலைப் பள்ளி பட்டத்தை பெற்றார். அவர் 1951 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் ஹண்டர் கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார்,

நோபல் பரிசு பரிசு ரோசலின் யாலோ என்பவரின் ஆலோசனையின் பேரில் இயற்பியல் கல்வியைத் தொடர்ந்தார்.[2] ஃபுல்பிரைட் பெல்லோஷிப் திட்ட உதவித் தொகையுடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் படிப்பை மேற்கொண்டார், மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ராட்க்ளிஃப் கல்லூரியில் இருந்தும் முதுகலைப் பட்டம் பெற்றார். 1958 இல் சிகாகோ பல்கலைக் கழகத்தில் இருந்து முனைவர் பட்டத்தைப் பெற்றார், அங்கு நோபல் பரிசு பெற்ற என்ரிகோ ஃபெர்மி இவருடைய ஆசிரியராக இருந்தர்.[7] லிங்கன் ஆய்வகத்தில் ஊழியராக பணியாற்றுவதற்கு முன்னர் கார்னெல் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் ஆய்வு முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்.

தொழில் மற்றும் மரபு தொகு

 
ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் டாக்டர். மில்ட்ரட் திரெசெல்லாஸ் பாராட்டு பெறுதல். ஒபாமாவின் வலப்புறமிருந்து மூன்றாவது, டாக்டர் பர்டன் ரிச்சர்டு வலது, மே 7, 2012.

திரெசெல்லாஸ், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 57 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.[7] 1967 ஆம் ஆணடில் அந்நிறுவன மின்பொறியியல் துறையின் அபே ராக்பெல்லர் மாஸ் வருகைப் பேராசிரியராக இருந்தார். 1968 இல் நிறுவனப்பதவி அமர்த்தப்பட்ட ஆசிரிய உறுப்பினராகவும், 1983 இல் இயற்பியல் பேராசிரியராகவும் ஆனார். 1985 ஆம் ஆண்டில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் முதல் பெண் நிறுவன பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[8][9][10]

1990 ஆம் ஆண்டில், பொருட்களின் மின்னணுப் பண்புகள், அறிவியல் மற்றும் பொறியியலில் பெண்களின் வாய்ப்பினை விரிவுபடுத்திய அவரது பணிக்கு அங்கீகாரமாக அறிவியலுக்கான தேசியப் பதக்கம் பெற்றார்.[11][12] மேலும் 2005 ஆம் ஆண்டில் இவருக்கு தொழில்நுட்பப்பிரிவு , பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு என்ற பிரிவுகளில் 11 வது ஆண்டு ஹென்றி விருது வழங்கப்பட்டது.[13] 2008 ஆம் ஆண்டில் அவர் ஓயஸ்டெர்ட்பதக்கம் பெற்றார். 2015 இல் மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகம் ஐஇஇஇபதக்கம் வழங்கி கெளரவித்தது.

2000-2001 ஆம் ஆண்டில், அமெரிக்க எரிசக்தி துறை விஞ்ஞான அலுவலகத்தின் இயக்குநராக இருந்தார். 2003 முதல் 2008 வரை, அவர் இயற்பியலுக்கான அமெரிக்க நிறுவனத்தின் ஆளுகைப் பிரிவின் தலைவராக இருந்தார். அவர் அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் தலைவர். அமெரிக்க முன்னேற்ற அறிவியல் சங்கத்தின் முதல் பெண் தலைவர் மற்றும் தேசிய அறிவியல் அகாதமியின் பொருளாளர் போன்ற பதவிகளில் பணியாற்றினார்

இயற்பியலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்காக நிறைய நேரம் செலவழித்தார். 1971 ஆம் ஆண்டில், திரெசெல்லாஸ் ஒரு கல்லூரியுடன் இணைந்து மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் முதல் மகளிர் மன்றத்தைத் தொடங்கினார். விஞ்ஞானம் மற்றும் பொறியியலில் பெண்களின் பங்கு பற்றிய ஆய்வுக் கருத்தரங்கம் நடத்தினார்.

மேற்கோள்கள் தொகு

  1. மில்டெரட் Dresselhaus 1974 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் உறுப்பினராக பொறியியல் தேசிய அகாடமி உள்ள மின்னணு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் அண்ட் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் பரிசோதனைப் ஆய்வுகள் பங்களிப்புக்கள் உலோகங்கள் மற்றும் semimetals , மற்றும் கல்வி.
  2. 2.0 2.1 MIT News Office (February 21, 2017). "Institute Professor Emerita Mildred Dresselhaus, a pioneer in the electronic properties of materials, dies at 86". MIT News. http://news.mit.edu/2017/institute-professor-emerita-mildred-dresselhaus-dies-86-0221. பார்த்த நாள்: February 21, 2017. 
  3. கார்பன் அறிவியல் ராணி , யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் . மர்லின் Cimons மூலம், தேசிய அறிவியல் அறக்கட்டளை. ஜூலை 27, 2012. ஆகஸ்ட் 14, 2012 இல் பெறப்பட்டது.
  4. Natalie Angier (July 2, 2012). "Carbon Catalyst for Half a Century". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2012/07/03/science/carbon-catalyst-for-half-a-century.html. பார்த்த நாள்: 2012-07-03. 
  5. Who's who in Frontier Science and Technology. Marquis Who's Who. https://books.google.com/books?id=B687AAAAMAAJ&q=Meyer+and+Ethel+(Teichtheil)+Spiewak&dq=Meyer+and+Ethel+(Teichtheil)+Spiewak. 
  6. Successful Women Ceramic and Glass Scientists and Engineers: 100 Inspirational Profiles. John Wiley & Sons. 2016-01-15. https://books.google.com/books?id=bVhwCwAAQBAJ&pg=PA120. 
  7. 7.0 7.1 "Mildred Dresselhaus: Physicist Burst out of 1940s Mold for Smart Women". March 4, 2017. https://www.wsj.com/articles/Mildred-dresselhaus-burst-out-of-the-1940s-mold-for-smart-young-women-1488553200. பார்த்த நாள்: March 5, 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "80th Birthday Celebration for Mildred Dresselhaus". பார்க்கப்பட்ட நாள் 2015-04-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "SENATE CONFIRMS DRESSELHAUS AS DIRECTOR OF DOE OFFICE OF SCIENCE". பார்க்கப்பட்ட நாள் 2015-04-18.
  10. "NSF and NSB Pay Tribute to Three Top American Scientists and Public Service Awardees at Annual Ceremony". பார்க்கப்பட்ட நாள் 2015-04-18.
  11. வார்ப்புரு:Cite press
  12. "National Science Foundation - The President's National Medal of Science". பார்க்கப்பட்ட நாள் November 24, 2014.
  13. "The Heinz Awards, Mildred Dresselhaus profile".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்ட்ரெட்_திரெசல்லாஸ்&oldid=3361453" இலிருந்து மீள்விக்கப்பட்டது