மீடியா பெஞ்சமின்

மீடியா பெஞ்சமின் (Medea Benjamin) (பிறப்பு சூசன் பெஞ்சமின் ; செப்டம்பர் 10, 1952) ஒரு அமெரிக்க அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் ஜோடி இவான்சு மற்றும் பிறருடன் கோட் பிங்கின் இணை நிறுவனராக இருந்தார். [1] ஆர்வலரும் எழுத்தாளருமான கெவின் டானஹருடன் சேர்ந்து, நியாய வணிக வழக்கறிஞர் குழுவான "குளோபல் எக்ஸ்சேஞ்சை" உருவாக்கினார். 2000 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவில் ஐக்கிய அமெரிக்க மூப்பவைக்கு பசுமைக் கட்சி வேட்பாளராக இருந்தார்.

மீடியா பெஞ்சமின்
பிறப்புசூசன் பெஞ்சமின்
செப்டம்பர் 10, 1952 (1952-09-10) (அகவை 72)
பிரீபோர்ட், நியூயார்க்கு
தேசியம்அமெரிக்கர்
கல்விடப்ஸ் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
சமூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளி
பணிஅரசியல் ஆர்வலர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
கெவின் டானஹெர் (ஆர்வலர்)
பிள்ளைகள்2

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

செப்டம்பர் 10, 1952 இல் பிறந்த சூசன் பெஞ்சமின் நீள் தீவிலுள்ள பிரீபோர்ட், நியூயார்க்கில் வளர்ந்தார். தான் ஒரு "நல்ல யூதப் பெண்" என்று சுயமாக விவரித்தார். [2]

டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது முதல் ஆண்டில், கிரேக்க புராணக் கதாபாத்திரமான மீடியாவின் பெயரை தனது பெயரின் முன்னொட்டாக மாற்றிக் கொண்டார்.

பின்னர், ஜனநாயக சமுதாயத்திற்கான மாணவர் அமைப்பில் சேர்ந்தார். பள்ளியை விட்டு வெளியேறி, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வழியாகச் சென்று, பணம் சம்பாதிக்க ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுத்தார். பின்னர் அமெரிக்காவுக்குத் திரும்பி, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்திலும், மூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளியில் பொருளாதாரத்திலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, சுவீடன் சர்வதேச மேம்பாட்டு நிறுவனம், [3] மற்றும் உணவு மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம் ஆகியவற்றில் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் பொருளாதார நிபுணரகவும், ஊட்டச்சத்து நிபுணராகவும் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். 

 
இளஞ்சிவப்பு குறியீடு ( கோட் பிங்க் ) பேரணியில் மீடியா பெஞ்சமின்.உரையாற்றுகிறார்.

சொந்த வாழ்க்கை

தொகு

மீடியா பெஞ்சமின் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகள்கள் உள்ளனர். [4]

தற்போது வாசிங்டன், டி. சி. மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கிறார். [5] [6]

சான்றுகள்

தொகு
  1. Code Pink "About Us" page பரணிடப்பட்டது பெப்பிரவரி 12, 2008 at the வந்தவழி இயந்திரம். Retrieved October 4, 2011.
  2. Garofoli, Joe (October 26, 2002). "S.F. Woman's Relentless March for Peace". San Francisco Chronicle. https://www.commondreams.org/headlines02/1026-04.htm. 
  3. "People to People Blog". People to People Blog (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-02-14. பார்க்கப்பட்ட நாள் 2017-02-13.
  4. "Devotion to Life of Political Activism in Family's Blood". Los Angeles Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2003-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
  5. Jay, Paul (17 February 2014). "Obama Sucked the Steam Out of the Anti-War Movement - Medea Benjamin on Reality Asserts Itself" இம் மூலத்தில் இருந்து 8 மே 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160508050052/http://therealnews.com/t2/index.php?option=com_content&task=view&id=31&Itemid=74&jumival=11495. 
  6. Lacy, Akela (2020-09-25). "Progressives Wrestle With How to Address Allegations of Mistreatment in San Francisco Race". The Intercept (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடியா_பெஞ்சமின்&oldid=4110261" இலிருந்து மீள்விக்கப்பட்டது